பிரித்தானிய நீதித்துறை சட்டங்களின் (ICC Act) அடிப்படையில் போர்க்குற்ற ஆதாரங்களோடு குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் பிரித்தானியாவிற்குள் வரும் வேளையில் அவரைக் கைதுசெய்யலாம். கடந்த இரண்டு மாதங்களாக மகிந்த ராஜபக்சவைக் கைது செய்வது குறித்துப் பேசிவந்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் பல ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு அகன்றதும் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணி என்ன என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.
முன்னை நாள் புலி ஆதரவு “தேசியவாதிகள்” பலர் கே.பி என்ற அரச உளவாளியின் வலைக்குள் விழுந்திருப்பது தெரிந்ததே. மகிந்த ராஜபக்சவைப் அரசைப் போர்க்குற்றவாளிகளாக பிரகடனப்படுத்துவது எவ்வாறு என்று கடந்த வருடம் (29 Sept 2009) பிரித்தானியாவில் பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்குசெய்த சார்ல்ஸ் அன்டனிதாஸ் இப்போது கே.பியின் பிரதான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதங்களாகப் போர்க்குற்ர வழக்குகளைப் பதிவுசெய்வதாக புனையப்பட்ட விம்பத்தை பிரித்தானியாவில் ஏற்படுத்தியிருந்த இந்த அமைப்புக்கள் மகிந்த ராஜபக்சவும் அவருடன் பிரித்தானியா வந்திருந்த இராணுவத் தளபதிகளும் நாடுசென்றடையும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக, இந்தக் கால தாமத்தின் பின்னணியில் இலங்கை-இந்திய அரசுகளின் உளவுத்துறை செயற்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது.
தவிர, புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் புலிகளின் ஆதரவாளர்களின் போராட்டமே என இலங்கை அரசு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பல மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் உட்பட போர்க்குற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் புலிகள் (ஆதரவாளர்கள்) என்று கருதப்படுவோரின் போராட்டங்களில் உலகின் மனித உரிமை வாதிகளும் ஜனநாயக சக்திகளும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இந்த வகையில் புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தை வெளியுலகிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்துவதில் இலங்கை அரசு குறித்த வெற்றியைக் கண்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
இவை அனைத்தையும் தெரிந்து கொண்டபின்னரும் மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களில் புலி ஆதரவுப் போராட்டங்களாக அடையாளப்படுத்தும் வகையில் ஒரு சிறுகுழுவினர் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை வழங்குவதன் பின்னணி என்ன என்பதும் பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்று.
ராஜபக்சவின் பிரித்தானிய வருகையின் போது நடைபெற்ற இரண்டு போராட்டங்களின் போதும் திட்டமிட்ட வகையில் ஒரு குழுவினர் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடிகளை வினியோகிப்பதைப் பலர் கண்ணுற்றிருக்கின்றனர். இவர்கள் இலங்கை அரசின் நோக்கத்திற்குத் துணைபோகின்றனர் என்பது பல தடவைகள் கூறப்பட்ட போதும் கொடிகள் நிறுத்தப்படுவதாக இல்லை. கொடிகளை வினியோகிப்பவர்கள் தமது அறியாமையினால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா அல்லது இதுவும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயலா என பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
இவை அனைத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் உணர்வுகளை எவ்வாறு அழிவுப் பாதையிலிருந்து மீட்பது என்பதும் உடனடியாகச் எதிர்கொள்ளப்பட வேண்டிய சிக்கலான திட்டமிடலாக சமூக உணர்வுகொண்ட அனைவர் முன்னும் காணப்படுகிறது.
சார், போதும் , விடுஙக. உன்கலால ஒன்னும் புடுன்க முடியாது. இது ஒரு waste website.
Other than Karuna, K.P,Dauglas group all people are fighting for Tamil eelam. So Who ever protest against Srilankan government are Tigers and their supporter. So Dodn’t confuse the people for some personal reason/
ஒரு முனையில் நழுவினால் இன்னொரு முனையில் சிக்குவார்.வினை விதைத்திருக்கிறார் வினை அறூப்பார்.பொறூத்திருப்போம்.பொறூமையுடன் செயற்படுவோம்.
யேசுபிரானிலிருந்து சோக்கிரட்டீஸ் ஊடாக நெல்சன் மண்டேலா வரைக்கும் தேசத்துரோகிகள் என தூற்றிய உலகம்தான் அவர்களை இன்று கடவுளாகவும், சிந்தனைச் சிற்பியாகவும், ஒப்பற்ற தலைவனாகவும் துதிபாடி போற்றுகின்றது. பிரபாகரனையும் துதிபாடி போற்றுகின்ற உலகமும் தோற்றம்பெறும். இந்த நம்பிக்கை வலுவானது! வரலாற்றைக் கொண்டுள்ளது. தமிழினம் புலிக்கொடியை ஏந்துவதற்கு முன்பாக நடைபெற்ற போராட்டங்களை, மனித நாகரீகங்களுக்கு அப்பால் சென்று சிங்களம் கொடூரமாக அழித்தபோது…. எந்த உலகம் திரும்பிப் பார்த்தது? இன்று புலிக்கொடியை கீழேபோட்டால் மட்டும் ஓடிவந்து உதவிடுமா? என்ன பிதற்றல் இது?…. இனிஒரு?. தமிழர்களிடம் ஒற்றுமை பலம்பெறுவது பொறுக்கவில்லையா?…..
நண்பரே உங்களால் மட்டும் எப்படி ஒரே திசையில் சிந்தனை செய்ய முடிகிறது? இலங்கை அரசாங்கம் எதைச் சொல்கிறதோ அதை நீங்களும் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு மக்கள் முக்கியமா அல்லது புலிக்கொடி முக்கியமா? சரி, புலிக்கொடி தான் முக்கியம் என்று வைத்துக்கொள்வோம். அதைக்கூட நீங்கள் சிறுபான்மையாக இருந்து சாதிக்க முடியாது. உங்களுக்கு உலகத்தை ஆடவைக்கும் கருத்தை உருவாக்கும் பெருந்தொகையான ஏனைய இன மக்கள் தேவை. அதைக்கூட புலிக்கொடியோடு உணர்ச்சிவசப்பட்டு அடிதடியாக் ஓடித்திருந்து செய்துவிட முடியாது. நீங்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாக இருந்து தான் 40 ஆயிரம் பேரை பலிகொடுத்தீர்கள். போராட்டத்தை அழித்துவிட்டீர்கள். இன்னுமா……?
அறிவாளிகள் விரைவாக மற்றவர்களை முட்டாளாக முத்திரை குத்த மாட்டார்கள். இந்தப் புலிக்கொடிப் பிரச்சினை 80 ஆம் ஆண்டுகளில் இருந்தே ஜரோப்பாவில் போராடங்களில் பிடிக்கப்படும்போது சிலரால் எதிக்கப்பட்டு வருகின்றது. புலிக்கொடி பிடித்தால் ஊர்வலத்திற்கு வரமாட்டேன் என்று அன்றிருந்தே சிலர் கட்டுப்பாடு விதித்து வந்துள்ளார்கள்.
ஏன் புலிக்கொடியை இப்படி பெரும் பிரச்சினைக்குரியதாக மாற்றுகிறீர்கள்? அதில் உள்ள புலியா, அல்லது துப்பாக்கியும், ரவைக்கூடா? இல்லை புலிகள் தம்மை அதன்மூலம் அடையாளப்படுத்தியதாலா? கிட்டத்தட்ட 30 வருடமாக புலிக்கொடி பிடித்தாலென்ன பிடிக்காமல் போனாலென்ன, போராட்டங்களின்போது அதில் பங்குபற்றும் தமிழரை மேற்குலகம் எப்போதும் புலிகளென்றுதான் சொன்னார்கள். இது நான் பலதடவை எனது சொந்த அனுபவத்தில் கண்டது. சிங்களவன் செய்த செய்துகொண்டிருக்கும் பிரச்சாரம் தமிழர் புலிகள் என்று. ஏன் தமிழர் ஒற்றுமையாகநாமெல்லோரும் புலிகள்தான், புலிக்கொடிதான் எமது அடையாளம் என்று துணிந்து சொல்லக்கூடாது?
புலிக்கொடியில் வன்முறை என்று பார்பவர்களின் கண்களுக்கு சிங்களக்கொடியில் என்ன சிங்கம் வெள்ளைப் புறாவா ஏந்தி நிற்கிறது?
றஞ்சினி..தமிழர் போராட்டம் தொடங்க முதலேயே பாலஸ்த்தீனியர்கள் போராட்டம் தொடங்கி ஆயிரக்கணக்கில் மரணித்து விட்டார்கள் . ஆனால் போராட்டம்தான் முடியவில்லை. என்ன அவெர்களை முட்டாள்கள் என்று சொல்லப் போகிறீர்களா..?அல்லது நீங்கள் எல்லோரும் அடிக்கடி மூக்கால் அழுது வடிப்பீர்களே, புலிகள் சகோதரப்படுகொலை செய்யாமல் விட்டு இருந்தால், மாற்று இயக்கங்களையும் போராட விட்டு இருந்தால், தமிழ் ஈழம் அடைந்து இருக்கலாம் என்று, சரி இன்று காஸ்மீரிலும், பாலஸ்த்தீனத்திலும் 10 க் கு மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் இருந்தும் அவெர்களால் தனிநாட்டை அடைய முடிந்ததா..? எரித்தியா, கிழக்குத் தீமோர், கொசோவோ சுதந்திரம் பெற்று விட்டன. அச்சே மானிலத்துக்கு சுயாட்சி வழங்கப்பட்டு விட்டது, இவை எல்லாம் ஏன் நடந்ததது என்று நீர் படித்து சிந்திப்பீர்யானால், புலிகள் 40 ஆயிரம் பலி கொடுத்த முட்டாள்கள் என்று எமது போராளிகளை நீர் மறந்தும் வாய் எடுத்து சொல்ல மாட்டீர். தமிழர் போராட்டம் மிகச் சரியான தலைமையின் கீழ், மிகச் சரியான முறையில் , மிகத் திறம்படவே வழிநடத்திச் செல்லப் பட்டது, ஆனால் எமது மண் விடுதலை அடைவதற்க்கான சரியான நேரம் , காலம், இடம் தான் சரியாக வரவில்லை.எமது போராட்டம் வெறு இடத்தில்நடந்து இருந்தால்,நாம் விடுதலை அடந்து வெகுநாள் ஆகி இருப்போம்.
வன்னியன் உங்கள் சூப்பி விழுந்து விட்டது. பெருவிரலை சூப்பவும்
பாலஸ்தீனியர்கள் மீது மேற்குநாகள் அனைத்தும் திட்டமிட்டுத் தாக்குதல்நடத்திய போதும் அவர்களை இன்னமும் அழிக்கவிமுடியவில்லை. அத்தோடு அவர்கள் பிரதேசங்களில் பெருமளவு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் சர்வதேச அளவிலான வேலைமுறைகள் எமக்கு நல்ல உதாரணம். அவர்களை அழிக்க முற்படுகின்ற போதெல்லாம் இங்கு நடக்கின்ற போராட்டங்களால் அழிவு மட்டுப்படுத்தப்படுகிறது. பல உதாரணங்கள் இதற்கு உண்டு. நாம் ஏன் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடாது. முற்றாக அழிந்துபோ, 40 ஆயிரம் அப்பாவிகளைப் பலிகொடுத்த பின்னரும், பலர் இலங்கை அரச உளவாளிகளாக மாறிய பின்னரும், எமது பிரதேசங்கள் எல்லாம் பறிபோய்க்கொண்டிருக்கிற நிலையிலும் நீங்கள் உங்கள் வரட்டு வாதத்தை விடவில்லை. அழிவிற்கான காரணம் என்ன என்றாவது அறிய முற்படுகிறீர்கள் இல்லை. தவிர நீங்கள் சொன்ன இடங்களிலெல்லாம் மக்கள் இன்னமும் அழிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். வெற்று வியாபரம் போல நடத்தப்பட்ட எமது போராட்டம் அழிந்த பின்னர் அதன் அரைவாசிப் பேர் இந்திய இலங்கை உளவாளிகளாக மாறிவிட்டனர். இனிமேலாவது சரியான திசைவழியை குறைந்த பட்சம் அடுத்த சந்ததிக்காவது விட்டுச்செல்வோம்.
போராட்டம் முடிந்துவிட்டா..யார் சொன்னது. அப்படி முடிவு எடுக்கும் அதிகாரத்தை எப்போது தமிழ் மக்கள் உங்களுக்கு அளித்தார்கள்: ஒருநீண்ட ஓட்டப்பந்தயத்தில், முன்னுக்கு ஓடுபவன்தான் ஜெயிப்பான், எனவே பின்னால் ஓடுபவர்கள் எல்லாம் தயவுசெய்து பந்தயத்தில் இருந்து விலகி விடுங்கள் என்று சொல்ல்வது போல் உள்ளது உங்கள் கருத்து. பிரான்ஸ் தேசத்தால் அடித்து , அழித்துநொருக்கப்பட்ட அல்ஜீரிய விடுதலப் போராட்டம் சுமார் 40 வருடங்களின் பின் , எஞ்சிய அதெ விடுதலலைப் போராட்டபோராளிகளால் விடுதலைநோக்கி வெற்றிநடை போடப் பட்டது. தமிழர் எமக்கு இன்னும் 4 வருடங்கள் போதும்
அறம் படித்த அறிவாளியே! யேசுபிரானும் சோக்கிரடீஸ்சும் நெல்சன்மண்டலாவும் தன்யினத்திற்கே துரோகிப் பட்டம் கொடுத்து சந்தியில் வைத்துஎப்போ? உயிரோடு எரித்தார்கள்?. இப்படித் தான் உங்கள் குழந்தைகளுக்கும் வரலாற்று பாடம் சொல்லிக் கொடுக்க போகிறீர்களா? குழந்தைகளையாவது உரிய ஆசியரிடம் பாடம் படிக்க அனுப்புங்கள். தவறும் தப்புமாக இணையத்தளத்தில் பாடம் கற்பிக்கமுயலாதீர்கள்.
புலிக் கொடியிலும் விசயம் இருக்கிறது என்பது வித்தியாசமான நோக்கு.காலங்காலமாய் புலிக் கொடிதான் தமிழர் கொடியாக இருந்திருக்கிறது ஆக அர்த்தம் பொதிந்த கருத்துத்தான். ஈழ்நாடு பேப்பரில் இன்னும் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறதல்லவா பலர் சிந்தாமணீ,தினபதி என்பர்.அது போல புலிக் கொடிதான் புலம் பெயர்ந்தோரை ஈர்க்கிற்து எனும் போது வேறூ வழியில்லைத்தான் ஆனால் அதனால் வேறூ வில்லங்கங்கள் வராது என் கிறீர்களா? புலிக் கொடிக் கதையால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் எனக்கு அடிக்க வந்ததோடு என்னை அரச உளவாளீ ஆகவும் ஆக்கினார் தங்கள் கருத்துக்கு ஆதாரம் மகிந்தாவுக்கு எதிராக வந்த கூட்டம்தான் பட் ஸ்ரில் அய்ம் நொட் வித் யு.
போராட்டதுக்கு வந்த மக்களிடம் புலிக்கொடியை விநியகியதன்நொக்கம் என்ன் ? தங்களக்கு இன்னமும் மக்கள் ஆதரவு உன்டு என்று காட்டவா?
மகிந்தவும் தளபதிகளும்நாட்டை விட்டு போனபின் வழ்க்கு போடுவதன் பின்னனியில் பல மி
ல்லிய
ன் பணம் உள்ளது. தலவர் மட்டும் பணம் வாங்கி மகிந்தவை ஜனாதிபதி ஆக்கலாம் நாம் என்ன முட்டாள்க்ளா? பெரும் பணம் செலவு செய்து தனி விமானததில் வந்த்வருக்கு இது ஒரு பிச்ஷை காசு
//இவை அனைத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதும் இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் உணர்வுகளை எவ்வாறு அழிவுப் பாதையிலிருந்து மீட்பது என்பதும் உடனடியாகச் எதிர்கொள்ளப்பட வேண்டிய சிக்கலான திட்டமிடலாக சமூக உணர்வுகொண்ட அனைவர் முன்னும் காணப்படுகிறது// இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படியே சொல்லி காலத்தை தள்ளப் போகிறோமோ
தெரியவில்லை
//கடந்த இரண்டு மாதங்களாக மகிந்த ராஜபக்சவைக் கைது செய்வது குறித்துப் பேசிவந்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் பல ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு அகன்றதும் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணி என்ன என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.
//
, புலிகளின் ஆதரவாளர்களின் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் தவறானவை என்று கூறும் நாம் , அதாவது புலிச்சிந்தனை முறை தவறு என்போர் முன் வைக்கும் போராட்ட முறை தான் என்ன? , எங்கே? .
சரியான வழி, திசை எமக்குத்
தெரியாமல் அல்லது காட்டாமல் புலம் பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களை விமர்சிப்பதுவும் ஏளனம் செய்வதும் காள்புனர்சியே அன்றி முற்போக்கானது அல்ல.
குற்றம் கண்டுபிடித்து பரிசு வாங்குவது சுலபம்
//எவ்வாறு அழிவுப் பாதையிலிருந்து மீட்பது என்பதும் உடனடியாகச் எதிர்கொள்ளப்பட வேண்டிய சிக்கலான திட்டமிடலாக சமூக உணர்வுகொண்ட அனைவர் முன்னும் காணப்படுகிறது// இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படியே சொல்லி காலத்தை தள்ளப் போகிறோமோ
தெரியவில்லை. // கடந்த இரண்டு மாதங்களாக மகிந்த ராஜபக்சவைக் கைது செய்வது குறித்துப் பேசிவந்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் பல ராஜபக்ச பிரித்தானியாவை விட்டு அகன்றதும் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணி என்ன என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.//
புலிகளின் ஆதரவாளர்களின் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் தவறானவை என்று கூறும் நாம் , அதாவது புலிச்சிந்தனை முறை தவறு என்போர் முன் வைக்கும் போராட்ட முறை தான் என்ன? , எங்கே? .
சரியான வழி ,திசை தெரியாமல் அல்லது காட்டாமல் புலம் பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களை விமர்சிப்பதுவும் ஏளனம் செய்வதும் காள்புனர்சியே அன்றி முற்போக்கானது அல்ல.
குற்றம் கண்டுபிடித்து பரிசு வாங்குவது சுலபம்
நடக்கிறதே நடக்கிறதே இணையவெளியில் மா …மா… பெரும் போராட்டம்!!
இதை அறியாத உம்மை “மூடன்” என்றுதான் சொல்வர் அறிஞர்!!
எப்படியாவது புலி ஐ விமர்சிக்கிரது தான் உங்கட வேலை போல… தமிலன் ஒன்டா இருக்கிரது பிடிக்க இல்லையோ…
என் பட்டரை போல நாய் வைக்கல் இருக்கிரிங….
அதிசயம்தான்.ஒரே மாதிரி 50 வருசமாய் எழுதுவதுதான்
இவர்களின் போராட்டம்.
கடந்த கால புலிகளின், பிரபாகரனின் தலைமையில் விட்ட தவறுகள் விமர்சிக்கப் படவேண்டியவையே. நிறைய தவறுகள் உள்ளன .
ஆனால் இன்று வரை மாற்று சிந்தனை அணியை முன்னிறுத்தாமல் , முடியாமல் இருப்பது என்பது ,புலி, பிரபாகரன் மீது சேறு பூசியவர்களான எம் மீது நாமே சேறு பூச தயாராக வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்பதையே காட்டுகிறது.
எம் மக்களையோ , மக்களின் உணர்வுகளையோ , போராட்டங்களையோ நெறிப்படுத்தி வழிநடத்த முடியாத நாம், எப்படி மற்றைய முற்போக்கு சக்திகளுடன் ( உலகின் மனித உரிமை வாதிகளும் ஜனநாயக சக்திகளும்)
சேர்ந்து போரடப்போகிறோம்.
எம் மக்களை விட்டு யாருடன் சேர்ந்து , யாருக்காக போரடப்போகிறோம்.
புலி, பிரபாகரன் தவறு விட்டதினால் புலி, பிரபாகரன் மீது சேறு போசுவோர் எல்லாம் புனிதர் அல்ல.அத்துடன் புலியில் இருந்தவர் ஆதரவாளர் எல்லாம்(சிலர் உண்டு) தவறுவிட்டவரும் அல்லர்.
அதே போல் புலி அல்லா மாற்று குழுக்கள் தவறு விட்டதினால் மாற்று குழு மீது சேறு போசுவோர் எல்லாம் புனிதர் அல்ல.அத்துடன் மாற்று குழுவில் இருந்தவர் ஆதரவாளர் எல்லாம்(சிலர் உண்டு) தவறுவிட்டவரும் அல்லர்
இனிவரும் போராட்டஙளில் ஒரு காண்முடியாதா? எல்லாவித்தியாசங்களுடனும் ஒரு கூட்டு சாத்தியமில்லையா? ஓரு கூட்டுக் கொடி ஒண்று உண்டா? கொம்யூனிஸ்டுகள் தமது கொடியுடனும், புலிகள் தமது கொடியுடனும் மற்றவர்கள் தத்தமது கொடியுடனோ அல்லது கொடியில்லாமலோ ஒன்று சேரலாமெ? பிரிந்து இருப்போம் சேர்ந்து போராடுவோம்..தற்போது ஒரு வெற்றியீட்டியுள்ளோம். அதை சோரவிடாமல் காட்ப்போம்.தமிழ் அமைப்புக்களை விடுவோம்.ஆனால் உங்களால் அது ஏன் சாத்தியமல்லமல் போனது? கற்பனைக்கோட்டையிலிருந்து விமர்சனம் செய்வதை விடுவோம்..புலி ஆதரவாளர்கள் இவ்வள்வு அழிவு நடந்தபின்பும் தாம் வெற்றிப் பாதையில் பிரயாண்ம் செய்துகொண்டிருப்பதாக கற்பனை செய்வதை நிறுத்தவேண்டும்.. மற்ரய குழுக்களும் (அரச அடிவருடிகளை நான் இங்கு குறிப்பிடவில்லை) தமது சுயத்தை இழக்காது சேர்ந்து போராட அனுமதிக்க வேண்டும்.இப்படியாக எதாவது நடந்தால்தான் முன்னேற்றம் உண்டு..
நண்பர் பாண்டித்துரை நாயுடு கவிதை ஒன்றூ சொன்னார் -ஆரியன் அன்றூ அனுப்பிய படை மணமகள் மானம் காத்தது.ஸீதையின் மானம் இராமன்.ஆரியன் இன்றூ அனுப்பிய படை மணாளன் மான்ம் மீட்டது- ராஜீவ்- சோனியா காந்தி.இதற்கெல்லாம் காரணம் இரு கருணா-அவர் சொன்னார் இந்திய வல்லரசோடு கவனமாக காய் நகர்த்தி இருந்தால் தமிழ் இன மானம் காத்த வீரனாய் பிரபாகரன் இருந்திருப்பார் அவருக்கு அரசியலின் சூட்சுமங்கள் தெரியவில்லை அதனால் வீழ்த்தப்பட்டார்.என்னதான் இருந்தாலும் தன் குடும்பத்தையே இந்தப் போருக்கு கொடுத்திருக்கிறார்,தமிழன் ஏமாந்தே கெட்டவன் ஈழப் போராட்டத்திலும் இதுதான் நடந்தது என்றார்.உங்கள் கருத்து எதுவோ.
தமிழினம் ஒரு தேசிய இனம். எம் இனத்தை எப்படி உலகத்துக்கு அறிமுகப்படுத்துவது? எங்கள் தலைமை எது? தேசியக்கொடி எது? தேசியக்கொடிக்கு பின்னால் எத்தனை கொடிகளும் வரலாம் அதில் தவறில்லை.
இன்று உலகநாடுகள் தங்களையும் தங்கள் தேசியத்தையும் வெளிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையை முன்நிறுத்தி உள்ளார்கள். அவர்கள் தேசியத்தை அடையாளப்படுத்த அங்கே தேசியக்கொடிகள்தான் கம்பத்தில் பறக்கிறதே தவிர மக்களுடைய கலாச்சாரமோ மொழியோ அல்ல.
புலிக்கொடி பிரபாகரனால் உருவாக்கப்பட்டதல்ல. அது சோழர்காலத்திலிருந்தே தமிழினத்தின் தேசியக்கொடியாக விளங்கிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் தனிக்கொடிகள் உள்ளன. அவை தமிழினத்தின் தேசியக்கொடிகளல்ல.
இலங்கை சுதந்திரமடைந்தபோது சிங்களம் சிங்கக்கொடியை உருவாக்கியது. தமிழர் நந்திக்கொடியை உருவாக்கினார்கள். நந்திக்கொடியை ஏற்றுக்கொள்ளாத அந்தப் பிரிவினைப்போக்கு தமிழரிடம் இன்றுவரை தொடர்கிறது.
தமிழ் தேசியம் தேவையில்லை புலிக்கொடி தேவையில்லை என்பவர்கள் அதற்கு மாற்றீடாக இன்றுவரை தமிழின விடுதலைக்கு என்னதான் செய்தார்கள்?. செயற்படுபவர்களின் செயற்பாடுகளை விமர்சனம் செய்யாது இன்று தோற்றம்பெற்றிருக்கும் தலைமையை வலுப்படுத்தி ஆதரவுகொடுத்துப் போராட முன்வருவார்களா?
நீண்டநாட்கள் விலகியிருந்தேன் இன்று எட்டிப்பார்த்தால் அதே ஆரோக்கியமற்ற அர்த்தமற்ற புலியெதிர்ப்பு புலம்பல் ஏந்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்திக்கிறார்கள் வேதனையுடன் மீண்டும் வெளியேறுகிறேன், வணக்கம்!
அச்சமில்லை, அச்சமில்லை, உச்சிமீது வான் இடிந்து வீழ்ந்தபோதும், அச்சமில்லை, அச்சமில்லை , என்று பாடிய பாரதியின் பெயரை முன் பாதியிலையே வைத்திருக்கும்நீங்களே இப்படி நம்பிக்கை இழந்து பேசலாமா உறவே.நல்லவர்கள் எல்லாரும் வெளியேறிவிட்டால் , அந்த இடத்தில் கெட்டவர்களே குடியேறுவார்கள்:நம்பிக்கை இழக்க வேண்டாம். வந்து கருத்தைப் பகிறுங்கள்:நம்பிக்கையே.. வாழ்க்கை……எல்லாரும் கவனிக்காது விட்டால், பாவம் அவெர்கள், மூளைக்குறை( புலி எதிர்ப்பு ) பாட்டைநிவர்த்தி செய்வதோ.. பாவம் அவெர்களுக்குநாம் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாதா!
அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளீல்லை அவனியிலெ…..
நாம் வாழ்கின்ற இந்த உலகில் நாடுகள், அதன் அரசுகள், அவைகளின் கொள்கைகள்,குறிப்பாக வல்லரசுகளின் அரசியல் பொருளாதார சுயநலன்கள் யாவற்றையும் சிறிதாவது நாம் தெரிந்திருப்போமானால் சில வேளை நாம் நான்கு வரிகளில் நிறய விடயங்களை பின்னூட்டத்தில் இட்டுவிடலாம்.
புலிக்கொடி தேவையா தேவையில்லையா என்று கேட்கின்றபோது சாதாரணமாக ஒரு மனிதன் கூறக்கூடியது என்னவென்றால் எதையும் தேவையானபோது பயன்படுத்து தேவையில்லாதபோது மறைத்துவிடு அதாவது உலக அரசியல் என்னும் நாடகமேடையில் நாமும் நாடகம் ஆடக்கற்றுக்கொள்வதே சிறந்த வளி.
யாவுமே அப்படித்தான் கிட்லரோ,இடி அமினோ கொடுமையானவா்கள் என்பதற்காக அவா்களது தேசியக்கொடியை யாரும் ஏற்றுக்கொள்ளாமல் விடவில்லை,உலகம் சந்தா்ப்பவசமானது இன்று எதிர்ப்பதை நாளை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது புலிகள் தவறு செய்துவிட்டார்கள் அது சிலவேளை நமது மனங்களைவிட்டு அகலாது இருக்கலாம் ஆனால் உலகம் மறந்துவிடும் அதாவது நடைமுறையில் நாம் காட்டுகின்ற மாற்றத்தை சிலவேளை மதித்து நடக்க தொடங்கலாம் ஆகவே நாம்தான் மாறவேண்டும் தேவையான நேரத்தில் அதை கைவிடலாம் இலக்குகளை அடைந்தபின்பு அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்[[ பெரும்பான்மை தமிழா்களால்]] அதை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளலாம்.
சிலா் உலக அரசியலை நோ்மையானதும் தூய்மையானதுமாக பார்க்கமுற்படுகின்றார்கள்,உலக அரசியல் அப்படிப்பட்டதல்ல மிகவும் கீழ்த்தரமானதும் கேவலமானதும்,ஏமாற்றிப்பிழைக்கும் தன்மைகொண்டதுமாகும் இந்த நிலையை நன்றாக உணா்ந்து நாடகம் ஆடினால் மட்டுமே எதையும் சாதிக்கலாம் இல்லையேல் இலவுகாக்கவேண்டியதுதான்.
உலகம் சந்தர்ப்பவசமானது பயங்கரவாதி எனச் சொன்ன நெல்சன் மண்டேலாவை விடுதலைப் போராளீயாக்கியது தென்னாபிரிக்காவில் சமத்துவம் மலர்ந்தது.குமாரின் கருத்து மிக ஆழமானது இந்தக் கருத்தை அவர் கட்டுரையாக்க வேண்டும்.பதிவாக்க வேண்டும்.மிக எளீமையாக மிகச் சரியாக சொல்லப்பட்டுள்ளது.