தமிழர்களுக்கு சாதகமாக இறுதி முடிவினை அறிவிக்கும் வரை அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்-சீமான் அறிக்கை.
அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் வீட்டின் முன் இன்று நாம் தமிழர் இயக்கம் சார்பில் காலவரையற்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறுகின்றது.இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கிய பங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
.அமிதாப் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும்,அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் உட்பட அனைவரிடமும் பேசி இணக்கமான,நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
.
முற்றுகைப் போராட்டத்தின் விளைவாக நமக்கு சாதகமான சில செய்திகள் வந்த போதும், அண்மையில் சிங்கள அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சிறீலங்காவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் திட்டமிட்டபடி பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
இது எம்மைக் காயப்படுத்துவதாகவும் எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதாகவும் உள்ளது.ஆகவே எமது கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும் படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்ஷா வீட்டின் முன் இன்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.பல நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.அமிதாப்பின் செயலாளர் வந்து எம் இயக்கப் பிரதிநிதிகளுடன் பேசி விட்டு சென்றுள்ளார். மலையாளிகள் நிறைந்த திரைப்பட விருது வழங்கும் iifa கமிட்டியானது எம் இயக்கத்தவர் 4 பேருடன் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.நாம் விரும்புவதும் வேண்டுவதெல்லாம் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த கூடாது,இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தான்.அதை மீறி நடத்த முற்பட்டாலோ,நட்சத்திரங்கள் கலந்து கொள்ள எண்ணினாலோ அவர்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும்.எம் இன மக்களைக்கொன்றொழித்த சிங்கள இனவாதத்தின் கோர முகத்தினை மறைக்கும் முயற்சியில் யார் வந்தாலும் அவர்களை எதிர்த்தும் இன விடுதலைக்கு ஆதரவாயும் எம் குரல் இறுதி வரை ஒலிக்கும்.
இராமாயணத்தில் இருந்து பிரபாயணம் வரையும் இந்தியனின் ஆதிக்கம்தான் இலங்கையில். இராமயணத்தில் இலங்கை சென்ற வானரங்கள் இராவணனால் பிரிக்கப்பட்ட சீதையை இராமனோடு சேர்த்து வைத்தன. ஆனால் பிரபாயணத்தில் இலங்கை சென்ற வானரங்கள் சேர்ந்திருந்த குடும்பங்களை கணவன் வேறு மனைவி வேறாக, பிள்ளைகளை வெவ்வேறாகப் பிரித்தன, தனித்தனியே அழித்தன.
தமிழ் நாட்டுத்தலைவர்கள் குறைந்தபட்சம் சீமானைப் போலாவது இருந்திருக்கலாம். கேட்டால் மக்கள் ஆட்சி என்பார்கள். தான் தான் பெத்த மக்களுக்கா அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கா இவர்களுடைய ஆட்சி?
Mariyathamilare, உங்கள் கேள்வி சீமானின் அரசியலுக்கும், கோபாலசாமியிலன் அரசியலுக்கும் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியலுக்கும் அதே அளவு பொருந்தும்.
இப்போது நாடு கடந்த அரசங்கம் என்று புலிகள் சேர்த்தபணத்தை பதுக்க மார்க்கம் தேடுகிறர்களே, அவர்களுடைய அரசியலுக்கும் பொருந்தும்.
உலக்முழுவதும் புலிகளினால் புலம்பெயர்தமிழர் வீதிகளிற்கு இழுக்கப்படும்போது
வன்னியில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த்து. அன்று உலக்மே கண்மூடியிருந்த்து.. தமிழகக்தில்
தமிழுணர்ச்சியுள்ள ஒருவர் சீமான் தான் என்று காட்டவேண்டுமானால் தமிழனாகப் பிறந்து
தமிழ்நாட்டில் துன்புறும் சமூகங்களிற்காக ஏதாவது செய்யலாம். இலங்கைத்தமிழர்களே
சிங்களவர்களோடு சேர்ந்து வாழ விரும்பும்போதும், சமதானமாக் வாழ முயற்சிக்கையில்
சீமான்
பிரபாகரன் போல் உலகின் அமைதியின்மையிலும் அழிவிலும் வாழ்கின்றார். துரை
முயற்சிக்கிரார்களா அல்லது கட்டாயப்படுத்தப் படுகிரார்களா? இலங்கையில் சிங்களம் தமிழரை இலங்கைப் பிரசையாய்ப் பாராமல் இரண்டாம் தரபப்பிரசையாய் பார்த்தது. தமிழர் தம் திறமையால், முயற்சியால் முன்னேறுவதைச் சகிக்கமுடியாமல் தரப்படுத்தலை, தாய்மொழிமூலம் கல்வியைக் கொண்டு வந்தது. தாய்மொழிமூலம் கல்வி யாருக்குப் பயன் இருந்தது? மக்கனை மொக்கனாக்கியதைத் தவிர வேறென்ன கண்டார்கள். ஆண்டுக்கு ஆண்டு இனக்கலவரம். சிங்களவன் ஏன் அடிக்கிறான் என்று தெரியாமல் கண்டபக்கதுக்கு ஓடவேண்டியதுதான். இலங்கையில் தமிழனை தமிழானாய் இல்லை குறைந்த பட்சம் மனிதனாய் வாழ விட்டாங்களா?
உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1- பிறருக்குரியதை அடிச்சுப் பறிப்பவர்கள். 2- யார் எதைப்பறிச்சாலும் பரவாய் இல்லை என கொடுத்து விட்டுப் போவோர். 3-தன் உயிரே போனாலும் தன் உரிமையை, உடமையை விட்டுக்கொடுக்காதோர். இதில்நீவிர் 3 இல்லையென்பது தெரியும். 1 அல்லது 2.
சிங்களவன் தமிழரின் உருமைகளைப் பறிப்பதை யாரும் மறுக்கவில்லை.
தமிழரின் உருமைகளை தமிழனே பறித்துக்கொண்டு வாழ்வ்தும், அதனைப் பார்த்துக்கொண்டு வாய் மூடியிருப்போரும் எவ்வாறு சிங்கள்வனை மட்டும் தமிழரின் எதிரியாக்க முடியும். முதலில் தமிழன் தமிழரருக்குள் இருக்கும் எதிரியை அடையாளம் காணவேண்டும். அத்ன் பின்னரே சிங்களவன், துரை
சிங்களவன் தமிழரின் உருமைகளைப் பறிப்பதை யாரும் மறுக்கவில்லை.
இந்த வரிகளை திரும்பத்திரும்ப எழுதும். அப்போதாவது புத்தனைப்போல புத்தி பிறக்குதா பார்ப்போம்.
தமிழர் தமிழரின் உருமைகளை மறுப்பதை
உண்ராமல் உலகத்திற்கு மறைத்துக்கொண்டு
சிங்களவரை மட்டும் தமிழரின் எதிரியாகக் காட்டி அரசியலும், விடுதலையும் பேசும்
தமிழர்களே கொடுமையானவர்கள். துரை
“தாய்மொழிமூலம் கல்வி யாருக்குப் பயன் இருந்தது? மக்கனை மொக்கனாக்கியதைத் தவிர வேறென்ன கண்டார்கள். ”
இவ்வளவு தானா உங்கள் மொழிப் பற்று? அப்போ நீங்களும் 3வது வகையாக இருக்க முடியாது.
செல்வநாயகம் கொம்பனி அன்று கேட்டது தமிழுக்கு உரிமை அல்ல — ஆங்கிலத்துக்கு அதிகாரம் தான் — என்று இடதுசாரிகள் அப்போது குற்றம் சாட்டியது மெய் போலத்தான் தெரிகிறது.
எனது மொழிப்பற்றுக் கேள்வி எதற்கு? காலத்தை அறிந்து கருத்து எழுதும். ஆங்கிலேயனின் படிப்பு முறையில் தமிழன் தமிழை ஒழுங்காகப் படித்தான். சிங்களவன் சிங்களத்தை ஒழுங்காகப் படித்தான். உதாரணத்துக்கு ஆங்கிலேயன் காலத்தில் தமிழன் தமிழை மொழி, இலக்கணம், இலக்கியம் என மூன்று பிரிவாகப் படித்தான். படித்தவன் எல்லாம் பாண்டித்தியம் பெற்றான். அக்கால 5 அல்லது 6ம் வகுப்புப் படித்தோர் இக்காலத்து உயர்தரக்கல்விக்கு மேலாக அறிவு பெற்றிருந்தனர். இப்போ புரியுதா தாய் மொழி மூலம் கல்வி பற்றிய விளக்கம்?
தாய்மொழிமூலம் கல்வி யாருக்குப் பயன் இருந்தது? மக்கனை மொக்கனாக்கியதைத் தவிர வேறென்ன கண்டார்கள். ”
செல்வநாயகம் கொம்பனி அன்று கேட்டது தமிழுக்கு உரிமை அல்ல — ஆங்கிலத்துக்கு அதிகாரம் தான்
அது நடந்திருந்தால் இப்போ நான் இவ்வளவு எழுத வேண்டியது இல்லை. எனது முதல் பதிவே விளங்கியிருக்கும்.
அப்போ தாய்மொழிக் கல்வி தமிழர் உரிமையின் ஒரு பகுதியல்ல?
நல்லது.
இப்போது மிகநன்றாகவே விளங்குகிறது.