Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

போராடும் மாணவர்களிடையே கம்யூனிச பீதியும், பின்னணியும்… : திருப்பூர் குணா

இனியொரு... by இனியொரு...
08/14/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

may-17-movementமாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் இறங்கும்போதுதான் சமூக விஞ்ஞானம் செல்வாக்கு பெறும். சமூக நிலைமைகள், நட்பு சக்திகள் – எதிரிகள், போராட்ட வடிவம் என செயல்களில் மறுமலர்ச்சி உருவாகும். தற்போதைய ஈழ ஆதரவு மாணவர் போராட்டமும் இதன் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

மாணவர்களின் முழக்கம் எதிரியை (இந்தியாவை) சரியாக அடையாளப்படுத்தியது. தி.மு.க. அரசியல் நெருக்கடியை சந்தித்து மைய அரசில் இருந்து விலகியது.

மாணவர்கள் எதிரியை அடையாளம் கண்டதுபோல் நண்பர்களையும், அடையாளம் கண்டிருக்க வேண்டும். ஈழ விடுதலையை, அதன் சிக்கலை மாணவர்கள் மட்டுமே தீர்த்துவிட முடியாது. ஆதரவான அனைத்து சக்திகளோடும் ஒருங்கிணைய வேண்டும். ஒருங்கிணைவதற்கான வாய்ப்பும் இருந்தது. இப்படியொரு ஒற்றுமை உருவாகி விடக்கூடாதென தீர்மானகரமாக இருந்தவர்கள் கிளப்பிய பீதிதான் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு.

ஆரம்பத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே பற்றவைத்த இந்த தீ, இன்று தமிழகம் முழுவதற்கும் பரவலாக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையை மேற்கொண்ட அனைவருக்கும் ஒரே நோக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இக்கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் முக்கியமான சிலரின் நோக்கம் போராட்டத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும்.

இவர்களின் சமூக அக்கறை எத்தகையது என்பதற்கு ஒரு உண்மையை முன் வைக்கிறோம். இவர்கள் அனைவரும் டிசம்பர் 23 அன்று சில இடங்களில் ஒருங்கிணைவார்கள். அப்படி கூடுகிற இடம் விழாக்கோலம் கொண்டிருக்கும். உணவு – உபசரிப்பு – உற்சாகம் – ஆட்டம், பாட்டமென கூட்டம் களைக்கட்டும். இவர்கள் அனைவரும் ஒருவரின் பெயரை சொல்லி சபிப்பர். அப்பெயருக்குரியவர் கொல்லப்பட்டதை கூறி மகிழ்ச்சிக் கூத்தாடுவர். அம்மனிதர் செத்த பிறகுதான் இவ்வுலகம் சுபிட்சமடைந்தது போல் ஆனந்த தாண்டவமாடுவர்.

lavrenty-beriaஇவர்களின் வெறுப்புக்குரியவர் திரு. பெரியா. இரசியாவை சார்ந்தவர். தோழர் ஸ்டாலின் காலம் வரைக்கும் NKVD (Narodnyy Komissariat Vnutrennikh Del – இரசிய மொழி) எனும் உள்துறைக்கான மக்கள் அமைச்சகத்தின் (Peoples Commissariat For internal affairs) அதிகாரியாக இருந்தவர். ஸ்டாலின் இறப்புக்கு பிறகு பதவிக்கு வந்த குருச்சேவ் இவரை சதி மூலம் கைது செய்தார். வீண் பழிகள் சுமத்தி 1953 டிசம்பர் 23ல் சுட்டுக் கொன்றார். திரு. பெரியா கொல்லப்பட்டதைத்தான் இவர்கள் இப்படி கொண்டாடுகின்றார்கள். இவரை ஒரு கொடுங்கோலனாக சித்தரித்து அந்நாளை இவர்கள் கொண்டாடும்போது நம் எல்லோருக்கும் இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. இவர்கள் ஏன் ஆயிரக்கணக்கான நம் பஞ்சாப் மக்களை கொலை செய்த மிருகம் ஜெனரல் டயரை கொன்ற நாளைக் கொண்டாடவில்லை? வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஷ்துரையின் சாவை ஏன் கொண்டாடவில்லை? இரசிய மக்களை வதைத்ததாக சொல்லிக் கொண்டு பெரியாவின் சாவைக் கொண்டாடுகிறவர்கள், ஏன் தமிழ்மக்களை, பஞ்சாப் முதலான நம் சகோதர தேசிய மக்களை வதைத்தவர்களின் சாவை கொண்டாடவில்லை.

ஏனென்றால், இவர்களின் உணர்வு மக்களின் மீதான பாசத்தில் விளைந்ததல்ல. மாறாக, கம்யூனிஸ்டுகளின் மீதான வெறுப்பில் விளைந்தது. இவர்களுக்கு பெரியாவின் சாவு ஒரு குறியீடு. நாயை வேட்டைக்கு பயிற்றுவிப்பதற்கு இறந்த கோழி முதலான உணவுகளை கட்டி வைத்து ஏவுவது போல், கம்யூனிச எதிர்ப்புக்காக இவர்களுக்கு திரு.பெரியாவின் சாவை கொண்டாட பழக்கியுள்ளனர். இது ஒரு வகை மூளைச் சலவை.

ஏன் இவர்கள் கம்யூனிச எதிர்ப்புக்கு லெனினையோ, ஸ்டாலினையோ பயன்படுத்தவில்லை? நமது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இத்தலைவர்களை இவர்கள் இதுபோல் தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் சரியான பாடம் கற்பிப்பர். அதேபோல் இவர்கள் திரு. பெரியாவின் சாவை வெளிப்படையாகவும் கொண்டாடுவதில்லை. இவர்கள் சரியென நம்புவதை ஏன் வெளிப்படையாக்கி மக்கள் மயமாக்குவதில்லை?

ThirumuruganMay17உண்மையல்லாத ஒன்றை தாங்களே உண்மையென ஏற்றுக் கொள்வதற்காக தங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் ஒருவகையான மனப்பயிற்சிதான் திரு. பெரியாவின் சாவைக் கொண்டாடுவது. அதாவது கம்யூனிச எதிர்ப்பு பணிக்கு தங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஒரு வகையான மன நோயாளிகள்தாம் இவர்கள். இவர்கள்தான் தற்போது தமிழ்நாட்டில் செயல்படும் இரு ஈழ ஆதரவு இயக்கங்களை முன்னின்று உருவாக்கினார்கள். இவ்வாறு கம்யூனிச எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களில் ஒன்றுதான் மே17 இயக்கம். இம்மே17 இயக்கம்தான் தற்போது மாணவர்களிடையே கம்யூனிச பீதியைக் கிளப்பியுள்ளது.

இவர்களின் கம்யூனிச எதிர்ப்பையும், அதற்கு பின்னால் இருக்கும் வலைப்பின்னலையும் நாம் இன்னொரு இடத்தில் பார்ப்போம். இப்போது இவர்களால் ஈழப் போராட்டம் எதிர்கொள்ளும் சிக்கலைப் பார்ப்போம். இவர்கள் ஈழப் பிரச்சினையில் இரண்டு, மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளனர். ஆரம்பத்தில் சீனஎதிர்ப்பு, அடுத்து அய்-நா எதிர்ப்பு, தற்போது அமெரிக்க எதிர்ப்பு என தொடர்ச்சியாக குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் ஈழத்துக்கும் மேற்கூறிய நாடுகளுக்குமான உறவைப் பார்ப்போம்.

இலங்கைக்காக இந்தியா, அமெரிக்கா, சீனா சண்டையிட்டுக் கொள்கின்றனவா?

வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளை (சந்தைகளை) பிடிப்பதற்காக ஆரம்பத்தில் போரிட்டுக் கொண்டன. அதன் விளைவாகவே இரண்டு உலகப் போர்கள் நடந்தன. இரண்டு போர்களில் இருந்தும் வளர்ச்சியடைந்த நாடுகள் பாடம் கற்றுக் கொண்டுள்ளன. சந்தைகளுக்காக போரிட்டுக் கொள்வதற்கு மாறாக சந்தையை தங்களுக்கிடையில் பங்கிட்டுக் கொள்ள பழகியுள்ளன.

imperialist-competitive-algorithmவளர்ச்சியடைந்த நாடுகள் ஒரு பின்தங்கிய நாட்டை பங்கிட்டுக் கொள்வதற்கு ஒருமுறையைப் பின்பற்றுகின்றன. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின்தங்கிய நாடுகளின் மீது ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த (விரிவாதிக்க) நாட்டுக்கு கூடுதலான முதன்மை அதிகாரமுண்டு என்பதே வல்லாதிக்க நாடுகள் பின்பற்றும் முறையாகும். அதாவது இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றின் மீது இந்தியாவுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற இன்னபிற நாடுகள் மீது சீனாவுக்கும் இருப்பது போலானதாகும். இவ்வாறு முன்னுரிமை உள்ள நாடுகள் தங்களின் முதன்மை பாத்திரத்துக்கு பங்கம் வராமல் பிற நாடுகளின் (அமெரிக்கா, இரசியா, இங்கிலாந்து முதலான) தலையீட்டை ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறான முறைப்படுத்தல்களை ஜி-8 நாடுகள், ப்ரிக்ஸ் நாடுகள், சார்க் நாடுகள், தெற்காசிய கூட்டமைப்பு, காமன்வெல்த் நாடுகள் என பல அமைப்பு வடிவங்களில் செய்து கொள்கின்றன.

ஆக விரிவாதிக்க – ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நாடு (சந்தை) பிடிப்பதில் போட்டிகள் இருந்தாலும், அவை மோதல்களாக இல்லை. இலங்கையை பங்கிட்டுக் கொள்வதிலும் இந்தியா, சீனா, அமெரிக்கா முதலான நாடுகளுக்கு இடையே போட்டிகள் உண்டு. ஆனால் மோதல்கள் இல்லை. எனவே இலங்கைக்குள் சீனா புகுந்துவிட்டது, அமெரிக்கா காலூன்றிவிட்டது, இந்தியா ஏமாந்து விட்டது என்பதெல்லாம் பிரச்சினையை திசைத் திருப்புகிற செயல்கள் ஆகும். இதைத்தான் நமது கம்யூனிச எதிர்ப்பாளர்களும், கம்ப்யூட்டர் புள்ளிவிபர சோதிடர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் நிலைமையும் – இந்தியாவின் மேலாதிக்கமும்

இலங்கையின் மீது இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உட்பட இன்னபிற நாடுகள் அரசியல் – பொருளாதார ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனாலும் இந்தியாதான் இலங்கையின் மீது மேலாண்மை அதிகாரம் பெற்றுள்ளது. அதற்கான விபரத்தைப் பார்ப்போம்.

அனகாரிக
அனகாரிக

இலங்கையில் இன முரண்பாடு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. ஆனால் அதை இனப்பகையாக மாற்றி அதன் மூலம் மேலாண்மை செலுத்தும் வேலையை பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது. பிரிட்டிஷாரின் காலத்தில்தான் சிங்கள இன உணர்வு, பேரினவாதமாக – இனவெறியாக மாறுவதற்கான அடித்தளம் நிறுவப்பட்டது. அதற்காக பாலி மொழியில் இருந்த பவுத்த நூல்களை சிங்களத்தில் மொழிப் பெயர்ப்பதும், அந்நூல்களில் தமிழர் விரோத கருத்துக்களை புகுத்துவதும் திட்டமிட்டு செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து பிரிட்டிஷார் வெளியேறும் போது இருவேறு தேசிய இனங்களிடமும் தனித்தனியாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் தங்களால் பேரினவாதிகளாக வளர்க்கப்பட்ட சிங்களவர்களிடமே அதிகாரத்தை ஒப்படைத்தனர். அதன் மூலம் இனப்பகை நீடிக்கும்படி பார்த்துக் கொண்டனர்.

பிரிட்டிஷார் போனப் பிறகு அதே வேலையை இந்தியா செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே டாடா உட்பட இந்தியப் பெருமுதலாளிகளின் செல்வாக்கு இலங்கையில் இருந்துவந்தது. பின்னர் இது அதிகரித்தது. இப்படி செல்வாக்கை அதிகரித்து ஆதிக்கம் செய்வதற்கான உரிமையை இந்தியாவின் முதல் பிரதமர் நேரு வெளிப்படையாகவே அறிவித்தார். “இலங்கை, நேபாளம் உட்பட இந்தியாவின் அருகாமையில் இருக்கும் சிறிய நாடுகள் பெயரளவுக்கு சுதந்திரமானதாக இருக்கலாம். ஆனால் அவை எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே (இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களைப் போல) இருக்க முடியும்” என்பதுதான் நேருவின் கொள்கையும், இந்தியாவின் கொள்கையுமாகும்.

இலங்கையில் இந்தியா மேலாதிக்கம் செய்வதென்பது இந்தியப் பெருமுதலாளிகளின் பணத்தினால் மட்டுமல்ல. பணமும், தொழில்நுட்பமும்தான் பலமென்றால், அமெரிக்காவோ அல்லது சீனாவோ இந்தியாவை எப்போதோ வெளியேற்றியிருக்கும். இலங்கை விஷயத்தில் இந்தியாவுக்கு மற்ற நாடுகளுக்கு இல்லாத ஒரு சமூக வாய்ப்பு உள்ளது.

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழ்ச் சமூகங்கள் உள்ளன. புவியியல் அடிப்படையில் இரண்டும் வேறு வேறு நாடுகளாக இருந்தாலும், இவ்விரு சமூகங்களுக்கு இடையில் நீண்ட பாரம்பரிய உறவு உள்ளது. அதன் மூலம் ஒன்று மற்ற ஒன்றின் மீது தாக்கம் செலுத்துகிறது.

இந்த வாய்ப்புதான் இந்தியாவின் துருப்புச்சீட்டு. இதேபோல் ஒரு வாய்ப்பு இந்தியாவுக்கு வங்கதேச உருவாக்கத்திலும் பயனளித்ததை பார்க்கலாம். சரி இந்தியா தனது துருப்புச்சீட்டை எப்படி பயன்படுத்துகிறது எனப் பார்ப்போம். நமது தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் மற்றும் இயக்கங்களிடையே இந்திய அரசு ஊடுருவுகிறது. இந்திய அரசு தனக்கான ஈழ அரசியல் பிரதிநிதிகளை உருவாக்கிக் கொள்கிறது. (நமது கம்யூனிச எதிர்ப்பாளர்களில் இத்தகையவரும் உள்ளனர்). இவர்கள் மூலம் ஈழத்தில் உள்ள இயக்கங்களுக்குள்ளும், அதன் தலைவர்கள் மத்தியிலும் இந்திய அரசு ஊடுருவுகிறது. இவ்வாறு ஈழ விசயத்தில் இந்திய அரசு தனக்கான ஒரு லாபியை உருவாக்கி தொடர்ந்து பராமரிக்கிறது. இந்த லாபியின் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்ற இறக்கங்களை இந்திய அரசும் உருவாக்குகிறது.

indian_expansion1980-களில் போராளிகளுக்கு உதவி ஈழப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதே இந்தியா, பின்னர் போராளிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து விடுதலைப்போரை மட்டுப்படுத்தியது. இதே போல்தான் 2002-ல் யாழ்க்கோட்டையை புலிகள் முற்றுகையிட்டு 30 ஆயிரத்துக்கும் மேலான சிங்களப்படையினரைச் சிறைப்படுத்தியபோது இந்திய அரசு தலையிட்டது. சிங்களவர்களை மீட்டு பத்திரமாக திருப்பி அனுப்பியது.

இப்படி ஈழ விடுதலைப் போராட்டத்திலும், அதற்காக தமிழ்நாட்டில் நடக்கும் ஆதரவுப் போராட்டத்திலும் இந்திய அரசு தனது கையை வைத்துக் கொண்டு சிங்கள அரசை மிரட்டி பணியவைக்கின்றது. “ஈழ மக்களின் நிலைக் கண்டு இந்தியாவில் தமிழ்நாடு கொந்தளிக்கிறது;எங்களது (இந்தியாவின்) உள்நாட்டு அமைதி கேள்விக்குள்ளாகிறது; இந்தியாவுக்குள்ளும், வெளியிலும் நிலவும் இக்கொந்தளிப்பான நிலைமைகளை நாங்கள் (இந்தியா) அனுமதிக்க முடியாது” என சிங்கள அரசை கட்டுப்படுத்துகிற வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உண்டு.

இதை வைத்துக் கொண்டுதான் இந்தியா இலங்கையின் மீது முதன்மையான அதிகாரத்தை செலுத்துகிறது. அதன் மூலம் பலன் பெறுகிறது. இப்போதும் இலங்கையில் இந்தியாவின் பொருளாதார அரசியல் ஆதிக்கமே முதன்மையானது. புள்ளி விபரங்கள் என்ற பேரில் நமது கம்ப்யூட்டர் சோதிடர்கள் சொல்வது உண்மையல்ல.

இலங்கையின் அரசியல் உரிமையும் – இந்தியா நடத்திய இன அழிப்பு போரும்

இலங்கைக்கு தனி அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.  அதனடிப்படையிலான நீதி – நிருவாகம் உள்ளது. நாடாளுமன்ற ஆட்சி வடிவம் உள்ளது; இவற்றைப் பாதுகாப்பதற்கான இராணுவம் மற்றும் படை அமைப்புகள் உள்ளன. அந்நாட்டுக்குள் மற்றவர்கள் கடவுச் சீட்டுப் பெற்றுக்கொண்டுதான் உள்ளே செல்லமுடியும். இவையெல்லாம் இலங்கை ஒரு தனி நாடு என்பதை ஒப்புக் கொள்வதற்கான ஆதாரங்கள்.

ஆனால் இவை மட்டுமே இலங்கையை முழுச் சுதந்திரம் உடைய நாடாக கருதுவதற்கான ஆதாரங்கள் ஆகிவிடாது. இலங்கை முழுமையான அரசியல் இறையாண்மை உடைய நாடும் அல்ல.

ஒரு நாடு தான் உயிர் வாழ்வதற்கான உரிமையை (அரசியல் – பொருளாதார உரிமையை) தானே தீர்மானித்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தால் அது போர் நடத்தவும், மற்ற எந்த துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்கவும் கூட முடியாது. அதே நேரத்தில் இந்த வகை நாட்டுக்கு முழு அரசியல் – இறையாண்மை இல்லாதிருந்தாலும் அந்நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு சிறப்பான உரிமை ஒன்று உள்ளது. அதாவது, தம் நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிடையே பேரம் பேசுகிற உரிமை உள்ளது. இதனால், இவ்வகை நாடு சில நேரங்களில் தம்மீது செல்வாக்கு செலுத்துகிற ஏதேனும் ஒரு நாட்டோடு அதிகமான சார்பு தன்மை கொண்டிருக்கும். அதேநேரத்தில், இச்சார்பு தன்மையால் அதிகார மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாது.

இலங்கையின் பொருளாதாரம் என்பது இந்தியா உட்பட பிற நாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தியா உட்பட பிறநாடுகளின் பொருளாதார நலனுக்கு குந்தகம் விளைவிக்கிற எந்த முடிவுகளையும் இலங்கை சுயேட்சையாக எடுக்க முடியாது. அதே நேரத்தில், இலங்கையின் பேரம் பேசுகிற உரிமையை யாரும் தடுக்கவும் முடியாது. ஆக, இலங்கையின் அரசியல் – இறையாண்மை என்பது பெயரளவிலானதாகும். பெயரளவிலான அரசியல் உரிமையுடைய இலங்கை எப்படி அரை நூற்றாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரை எதிர்கொள்ள முடியும்? அதை எப்படி அந்நாட்டில் செல்வாக்கு செலுத்துகிற வளர்ச்சியடைந்த நாடுகள் அனுமதிக்கும்? பிறகெப்படி அங்கு உள்நாட்டுப்போர் நடந்து கொணடிருக்கின்றது?

இலங்கையில் நீடிக்கும் உள்நாட்டுப் போர் என்பது இருவேறு இனங்களை மோதவிட்டு நாட்டாமை செய்வதற்காக பிரிட்டிஷாரால் அடித்தளமிடப்பட்டது. அதையே இந்தியாவும் வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.

இலங்கை ஈழநாடாகவும், சிங்கள நாடாகவும் தனித்தனியாக ஆகுமேயானால் அவை இரண்டும் இந்தியாவின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. சிங்கள அரசு அமெரிக்காவோடோ அல்லது சீனாவோடோ தனி உறவைப் பேண முடியும். அதுபோல, ஈழ நாடும் தனது புலம்பெயர் மக்களின் நிலையில் இருந்து அமெரிக்காவோடோ அல்லது அய்ரோப்பிய நாடுகளோடோ முதன்மை உறவைப் பேண முடியும். இது இந்தியாவுக்கு மட்டுமேயான இழப்பாகும். ஆகவேதான் இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டுமென்று இந்தியா நிர்பந்திக்கின்றது.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட இலங்கையாக இருக்கும்போதும், அங்கு உள்நாட்டுப் போரும் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாகும். இலங்கையில் உள்நாட்டுப் போர் இல்லையென்றால், தமிழ்நாட்டிலும் சிங்கள எதிர்ப்பு போராட்டங்கள் இருக்காது. இதனால் சிங்கள அரசை தனது பிடிக்குள் வைத்திருக்கவும் முடியாது. ஆகவே இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டுப்போர் நடக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.

இந்தியாவின் இந்த அரசியல் விளையாட்டை இலங்கையும் உணர்ந்தே இருக்கிறது. பலவீனமான, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சிறிய நாடுகளால் வேறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் இலங்கை தனது பலவீனத்தையே பலமாக மாற்றிக் கொண்டுள்ளது. அதாவது போரில் ஏற்படும் கடுமையான நிலைமைகளையும், திருப்பங்களையும் சமாளிக்க வேண்டிய வேலையை இலங்கை எப்போதோ இந்திய அரசின் தலையில் கட்டிவிட்டது.

gota_mafiaஅதனால்தான் போரில் முக்கியமான நெருக்கடிகள் நிகழும் போதெல்லாம் இந்தியாவே தலையிட்டு தீர்க்க வேண்டி வந்தது. விடுதலைப்புலிகளின் தலைமையில் விடுதலைப் போர் மேலெழுந்து வரும்போதெல்லாம் இந்தியா அநீதியாக தலையிட்டு அதை பின்னுக்கு தள்ளியதும், அமைதிப்படையை அனுப்பியதும், ஆயுதங்களை பறித்ததும், 2002ல் மாட்டிக் கொண்ட 30 ஆயிரம் சிங்களப்படையினரை மீட்டதும் என இந்தியாவே தொடர்ந்து போரை நடத்தி வந்தது.

ஆனால் எல்லா நெருக்கடிகளையும் தாண்டி புலிகள் தமிழீழ அரசை அமைத்தனர். இதைத்தான் இந்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியாவின் மூலதனங்களை இலங்கையில் இருந்து விரைவில் மூட்டைக்கட்ட வேண்டிய நிலை உருவாகி விட்டதை எண்ணித்தான் இந்தியா பதறியது. கூடவே தமிழீழ அரசு நிலைப்பெற்று விட்டால், தமிழ்நாட்டு மக்களின் சுதந்திர உணர்வு மேலோங்கும் என்பதும், அதனால் இந்தியாவின் இருத்தல் கேள்விக்குள்ளாகும் என்பதும் நன்றாகவே தெரிந்த இந்திய அதிகாரவர்க்கம் அலறித் துடித்தது.

மிக தேர்ந்தெடுத்த தேசிய ஒடுக்குமுறையை அரசியலாக கொண்ட இந்திய அதிகாரவர்க்கம்தான் ஈழ விடுதலையை ஈவு இரக்கமின்றி நசுக்கி, அழிக்க முடிவுச் செய்தது. இதற்கு அதிகாரத்தில் இருக்கிற எந்த ஒரு தனிநபர் விருப்பு, வெறுப்புகளும் காரணமல்ல. அது முழுக்க முழுக்க இந்தியப் பெருமுதலாளிகளின் இலங்கை சந்தையின் லாபத்துக்காகவும், தமிழ் நாட்டில் விடுதலை உணர்வை மேலோங்க செய்துவிடக் கூடாதென்ற அச்சத்தினாலும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்திய விரிவாதிக்கத்தின் நலனில் இருந்தே ஈழ இன அழிப்புப் போர் நடத்தப்பட்டது.

இதைத்தான் இலங்கையின் அதிகாரவர்க்கமும், அரசப்பிரதிநிதிகளும் ‘இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்’ என வெளிப்படையாகவே அறிவித்தனர்.

இந்திய விரிவாதிக்கத்தை முறியடிக்காமல் ஈழ விடுதலை இல்லை

இலங்கை சொந்தமாக அரசியல் முடிவெடுக்க முடியாத ஒரு வகை அடிமை நாடு. அதன் மீது பல நாடுகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. அதில் இந்திய அரசின் மேலாதிக்கமே முதன்மையானது. இந்திய விரிவாதிக்க அரசு தனது நலனில் இருந்தே ஈழ விடுதலையை நசுக்கி, இனப்படுகொலையையும் நடத்தியுள்ளது.

இன்னமும் கூட இந்திய அரசுதான் இலங்கையில் செல்வாக்கு செலுத்துகிறது. இது இனியும் நீடிக்கும். பலமான இந்திய அரசு மறைமுகமாக ஆட்சி செய்யும் இலங்கையில் ஈழ விடுதலைக்கு என்ன வழி? முதலில் இலங்கையில் இருந்து இந்திய அரசின் பிடியை தளர்த்தாமல் ஈழ விடுதலையை எப்படி சாதிக்க முடியும்?

indian_invationஇந்தியாவின் பிடியை ஈழ மக்கள் மட்டுமே தனித்து விடுவிக்க முடியாது. ஒருவேளை ஈழ மக்களோடு சிங்கள மக்களும் சேர்ந்து நின்றால் அதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆனால் சிங்கள மக்கள் பேரினவாதவெறியில் மூழ்கியுள்ளனர். தமிழர்களை ஒடுக்குவதன் மூலம் சிங்களவர்களுக்கு நிலம், கல்வி, வேலையில் தனிச் சலுகை என பாதகம் செய்வதற்கான கூலி வழங்கப்படுகிறது. சிங்களவர்கள் சிறப்பு சலுகைப் பெற்ற இனமாக உள்ளனர். ஆகவே இரு இனங்களும் ஒன்றுசேர்ந்து இந்திய ஆதிக்கத்தை விரட்டியடிக்கும் நிலை இப்போது இல்லை. ஈழ மக்களால் தனியாகவும் விரட்ட முடியாது.

அதை செய்வதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டு தமிழருக்கே உள்ளது. தமிழ்நாட்டு தமிழர் கூட தனியாக இதை செய்துவிட முடியாது. ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் அடக்குமுறையை கட்டவிழ்த்தோ அல்லது வேறு ஒருப் பிரச்சினையை தூண்டி விட்டோ அரசு அதை தடுக்கும். தேவைப்பட்டால் இந்திய அதிகாரவர்க்கம் இன்னுமொரு இராஜீவ்காந்தியை பலி கொடுக்கும். அதன்மூலம் தமிழ்நாட்டில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட பிற தேசிய இனங்களை தயார்படுத்தும்.

ஆக இந்திய விரிவாக்கத்தை முறியடிக்க இத்துணைக் கண்டத்திலுள்ள அனைத்து தேசிய – பழங்குடி மக்களிடமும் பணியாற்ற வேண்டும்.

இந்த பரந்த அவசியமான அரசியல் பணியை இனவெறியர்களோ, சீர்திருத்தவாதிகளோ செய்ய முடியாது. அனைத்து மக்களின் விடுதலையின் ஞாயத்தை உணர்ந்த கம்யூனிஸ்டுகளால் மட்டும்தான் முடியும். கம்யூனிஸ்டுகள் இன்று பலவீனமான நிலையிலேயே உள்ளனர். ஆனால் அனைத்தையும் ஆய்ந்தறியும் மாணவர்கள் கம்யூனிஸ்டுகளாக ஆகிவிட்டால், நிலைமையே தலைகீழாக மாறிவிடும். அதிகார வர்க்கங்களின் நாட்கள் எண்ணப்படும். ஈழம் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழரும் விடுதலையை சுவாசிப்பர்.

இது நடந்துவிடக் கூடாதென்பதாலேயே மாணவர்களிடம் கம்யூனிச பூச்சாண்டி காட்டப்பட்டது. இதை பரப்பியவர்களுக்கு பின்னால் திரு. பெரியாவின் சாவைக் கொண்டாடும் மன நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட ஈழ ஆதரவு போலி இயக்கமான மே17 இயக்கமும் உள்ளது. ஏற்கனவே 1990களில் அமெரிக்க மற்றும் இந்திய கைக்கூலிகளான பின்நவீனத்துவவாதிகள் கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் இளைஞர்களை காயடித்தனர். அப்போது அது குறித்து கம்யூனிஸ்டுகள் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர். அந்த தைரியத்தில்தான் பின்நவீனத்துவவாதிகளின் புதிய வாரிசுகளான மே17 போன்ற இயக்கங்கள் இப்போது களமிறங்கியுள்ளனர். ஆனால், இன்று கம்யூனிஸ்டுகள் ஏமாறமாட்டார்கள் என்பதை உடனடி நடைமுறைகள் உணர்த்துகின்றன. இந்நடைமுறைகள் இன்னமும் தெளிவாகவும், தீவிரமாகவும் முன்னெடுக்கப்படவேண்டும். கூடவே, மாணவர்களும், கம்யூனிஸ்டுகளோடு கைகோர்க்க வேண்டும்.

மாணவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதிலேயே ஈழ ஆதரவுப் போராட்டத்தின் வெற்றி உள்ளது.

– திருப்பூர் குணா
+91 – 09486641586

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வெலிவெரிய மக்கள் போராட்டத்தைக் கண்டு மிரண்ட ஐரோப்பிய ஒன்றியம்

Comments 10

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    15 பவுணுக்கு வாங்கி வேண்டுமானால் போர்த்திக் கொள்ளக் கூடிய பன்னாடைக்காக பிரிட்டோ , திவ்வியா உட்பட மாணவர் பிரதினிதிகளைச் சந்தித்ததாகவும் . அந்த மானவர்களில் திவ்வியா அடுத்த டெல்லிச் சந்திப்புக்கு செல்ல உடன்பட்டிருப்பதாகவும் உறுதிப் படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது . குறித்த திவ்வியா திருமுருகன் காந்தியின் இளைஞர் பிரிவு முக்கியஸ்தர் ஆகும் . R&AW started as a wing of the main Intelligence Bureau with 250 employees and an annual budget of 2 crore (US$338,000.00). In the early seventies, its annual budget had risen to 30 crore (US$5.1 million) while its personnel numbered several thousand. ///////////////When in doubt, make a fool of yourself. There is a microscopically thin line between being brilliantly creative and acting like the most gigantic idiot on earth. So what the hell, leap.
    Cynthia Heimel

  2. yogan says:
    13 years ago

    வை .கோபால்சாமி வன்னி காட்டுக்கு சென்று பிரபாகரனை சந்தித்துத் திரும்பிய பொழுது இந்திய உளவுப் படையாலோ அல்லது இந்திய அரசாலோ கைது செய்ய்யப்படவில்லை என்பதன் மர்மம் இப்போது துலங்குகிறது.இந்திய அரசு நடாத்தும் நாடகத்த்தில் நடிக்க எத்தனை எத்தனை எத்தனை நடிகர்கள்?!!!

  3. யோகன் says:
    13 years ago

    இந்திய அரசுக்கு தெரியாமல் வை.கோ வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்தித்ததாக முன்பு செய்திகள் வந்தன. ஆனால் இந்திய அரசாலோ தமிழ் நாட்டு அரசாலோ வை.கோ கைது செய்யப் படவில்லை.
    இந்திய அரசு நடாத்தும் நாடகத்தில் நடிக்க எத்தனை எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள்.
    இந்த கட்டுரை படித்ததும் கொஞ்சம் புரிகிறது போல தெரிகிறது.

    எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை. திருப்பூர் குணாவுக்கு வாழ்த்துக்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Left and then that Premachandran. This is all very confusing. Then being a Tamil in any part of the world.

  4. Alex Eravi says:
    13 years ago

    இலங்­கையில் வாழும் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு உத­வு­வதில் இந்­தியா பின்­நிற்­கின்­றது. இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொலை செய்­த­துடன் இந்­திய அமைதிப் படை­யி­னர்­மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களே ஆவர். தாக்­குதல் நடத்­திய பகுதி மக்­க­ளுக்கே, இந்­தியா அதிக உத­வி­களை செய்­வ­தற்கு முனை­கின்­றது என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான பஷில் ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

    இந்­தி­யா­வுடன் சிறு­சிறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும் இந்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து எமது அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. கிளி­நொச்சி வரை­யான ரயில் பாதை அமைக்கும் பணி பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. அடுத்த மாதம் 15ஆம் திகதி புதிய ரயில்­பா­தையில் சேவைகள் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

    இந்­திய ஊட­க­வி­ய­லாளர் குழு­வொன்று இலங்­கைக்கு விஜயம் செய்­துள்­ளது. இந்தக் குழு­வினர் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக மக்கள் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான பிர­பா­க­ணே­சனின் ஏற்­பாட்டில் நேற்று முற்­பகல் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

    இலங்­கைவாழ் இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு இந்­திய அர­சாங்கம் உத­வு­வதில் பின்­ன­டிப்பு செய்­கின்­றது. பல தட­வைகள் இது­கு­றித்து எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யத்தில் இந்­திய அர­சாங்கம் அக்­க­றை­காட்­டு­வ­தாக இல்லை.

    வடக்கு கிழக்கு பகு­தி­க­ளி­லேயே அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொள்ள இந்­தியா அக்­கறை காட்­டு­கின்­றது. இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை கொன்­ற­துடன் இந்­திய இரா­ணு­வத்­தி­னர்­மீது தாக்­குதல் நடத்தி இந்­திய அமைதிப் படை­யி­னரை மீண்டும் திருப்பி அனுப்­பு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களைச் சேர்ந்­த­வர்­க­ளே­யாவர். ஆனால் இந்­திய அர­சாங்­க­மா­னது அப்­ப­கு­திக்கே உத­வி­களை செய்­வதில் முன்­னிற்­கின்­றது.

    50 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு இந்­தியா உதவி செய்­துள்­ளது. இதில் 45 ஆ­யிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பகு­தி­க­ளி­லேயே அமைக்­கப்­பட வேண்டும் என்­பதில் இந்­தியா உறு­தி­யாக நின்­றது. மலை­யகப் பகு­திக்கு 4 ஆயிரம் வீடு­களை விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு நாம் படா­த­பாடு பட­வேண்­டி­யி­ருந்தது. 45 ஆயிரம் வீடு­களை அமைக்கும் பணி­யினை உட­ன­டி­யாக வட­கி­ழக்கில் ஆரம்­பிக்­கு­மாறு இந்­தியத் தூதுவர் எம்­மிடம் வலி­யு­றுத்­தினார். ஆனால் மலை­ய­கத்தில் 4 ஆயிரம் வீடுகள் அமைக்­கப்­பட வேண்­டு­மென நாம் கோரி­ய­போது ஆலோ­ச­னைகள் இன்­னமும் கிடைக்­க­வில்லை என்றும் வேறு­பல சாட்­டுக்­களும் கூறப்­பட்­டன.

    இந்­திய வம்­சா­வளி மக்கள் போராட்­டங்­களை நடத்­த­வில்லை. ஆயு­தங்­களை தூக்­க­வில்லை. ஆனாலும் இந்த மக்­க­ளுக்கு உத­வு­வதில் இந்­தியா பின்­ன­டிப்புச் செய்­கின்­றது.

    இந்­தி­யாவின் உத­வி­யுடன் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம். வவு­னி­யாவில் இந்­திய வம்­சா­வளி மக்­களை பதி­வு­செய்ய நாம் முற்­பட்­ட­போது இந்­தியா வம்­சா­வளி மக்கள் என பத­வி­செய்­ய­வேண்­டா­மெ­னவும் இலங்கைத் தமி­ழர்கள் என பதி­வு­செய்­யு­மாறும் ஒரு குழு அச்­சு­றுத்­தி­யுள்­ளது. இருந்­த­போ­திலும் எத்­த­கைய பாதிப்­பு­மின்றி நாம் செயற்­ப­டு­கின்றோம்.

    இந்­தியா பல அபி­வி­ருத்தித் தி­ட்டங்­க­ளுக்கு எமக்கு உத­வு­கின்­றது. கிளி­நொச்சி வரை­யான புகை­யி­ரதப் பாதை­யினை இந்­தியா அமைத்­துள்­ளது. அடுத்­த­மாதம் 15ஆம் திகதி இந்த புதிய ரயில் பாதை திறக்­கப்­படும். அதேபோல் காங்கேசன்­துறை வரை­யான ரயில் பாதையும் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. சம்பூர் அனல் மின் நிலை­யமும் இந்­தி­யா­வுடன் இணைந்தே மேற்­கொள்­ளப்­படும். பலா­லியில் விமான ஓடு­பா­தையும் இந்­தி­யாவின் உத­வி­யுடன் அமைக்­கப்­படும்.
    வட­ப­கு­தியில் சாதி முரண்­பாடு இன்­னமும் காணப்­ப­டு­கின்­றது.

    அண்­மையில் வடக்கில் தென்னை மரக்­கன்­றுகள் வழங்கும் வைப­வத்தில் நான் கலந்­து­கொண்­டி­ருந்தேன். தென்­னை­ம­ரத்தை வீட்டில் வைத்தால் சாதி குறைந்தவர்கள் என எண்ணுவார்கள் என்று எம்மிடம் சிலர் தெரிவித்தனர். இவ்வாறு அங்கு சாதி முரண்பாடு காணப்படுகின்றது.

    இந்தியா அயல்நாடு என்பதனால் எமக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜமாகும். ஆனாலும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய ஊடகவியலாளர் குழுவினர் இச்சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ வுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் பரிசில்களையும் வழங் கியுள்ளனர்.

    • Suriya says:
      13 years ago

      என்னமோ சொல்லுவாங்க ஆடு நனைகிறதென்று என்னவோ அழுததாம். இது சிங்கள பாமரர்களை முட்டாள்களாவதற்கு மட்டுமே பயன்படலாம்.

  5. Sara says:
    13 years ago

    முன்பு விளம்பரக் கம்பனி நடத்திக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி புலம் பெயர் தமிழர்களின் முதலீட்டில் தான் மே 17 இயக்கத்தை ஆரம்பித்தார். இப்போது அவரது செயற்பாடுகள், தொடர்புகள், பல்வேறு சிக்கல்கள் நிறைந்தாக உள்ளது. தமிழ் நாட்டில் ஈழப் பிரச்சனையை மட்டும் வைத்து இந்திய அரசுக்கு நல்ல பிள்ளையாக நடிக்கும் வியாபாரத்தை நடத்தும் அனைவரும் சந்தேகத்துக்கு உரியவர்களே. சீமான் ஆதரவாளர்கள் ஈன்ற குழந்தையான மே 17 இயக்கத்தை கவனத்துக்குக் கொண்டுவந்த குணாவிற்கு நன்றி

    • Alex Eravi says:
      13 years ago

      “சிங்கள கன்னுக்குட்டி.. வந்துட்டியா? வா.. வா..” சிங்கத் தமிழன் சீமான் சிலிர்ப்பு!

      “கன்னுக்குட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா…” தமிழகத்தில் ஒரு சிங்கள நடிகையிடம் இப்படி யாராவது கேட்டால் என்னாகும்? சிங்கிள் எலும்புகூட சேதமில்லாமல் போக முடியாதபடி, போட்டுத் தாக்கிவிடுவார்கள், மறத்தமிழர் சீமான் படையணி.

      ஒருவேளை கன்னுக்குட்டியை குசலம் விசாரித்தது, சீமானாக இருந்துவிட்டால்? சேச்சே.. அப்படியெல்லாம்கூட நடக்குமா? நடந்திருச்சே ஐயா.. நடந்திருச்சே!

      பிரபல சிங்கள நடிகை பூஜா, கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்புக்குதான் இந்த ஸ்பெஷல் வரவு.

      (நடிகை அசின், அவுட்டோர் ஷூட்டிங்குக்காக இலங்கை சென்ற காரணத்தால், அவரது படங்களை தமிழகத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சீமான் படையணி, ஒரு சிங்கள நடிகை நடிக்கும் ‘விடியும் முன்’ படத்தை தமிழகத்தில் திரையிட விடுவார்களா? பிச்சுப்புட மாட்டார்களா.. பிச்சு..)

      நடிகை பூஜா, ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “கன்னுகுட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா. பிரஸ்மீட்ல தமிழ்லதான் பேசணும். இல்லேன்னா அடி விழும்னு என்னை ஆசையோடு ஆசிர்வாதம் செய்தார் செந்தமிழன் சீமான்” என்று மேடையிலேயே சொல்லி, தனக்கும் சீமானுக்குமான ஃபிரண்ட்ஷிப் இன்னும் ஃபிரஷ்ஷாகவே இருப்பதை உறுதி செய்து ஆனந்தப்பட்டுக் கொண்டார்.

      ஆனந்தம் இருக்காதா என்ன? ஏழு ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய ‘சிங்கள – தமிழ்’ நட்பல்லவா?

      2006-ம் ஆண்டு சீமான் டைரக்ட் செய்த ‘தம்பி’ (விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மற்றொரு பெயர், தம்பி) படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர், நடிகை பூஜா. ஒருவேளை அந்த நாட்களில் இந்திய நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது, “சிங்களவர்களை போட்டுத் தாக்க வேண்டும்” கொள்கை, அப்போது சஸ்பென்ஷனில் இருந்திருக்கலாம்.

      அல்லது, ஒருவேளை பூஜா, சிங்கள நடிகை என்று நம்ம நெசமாலுமே நம்ம செந்தமிழனுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ?

      அப்படியும் இருந்திருக்க முடியாது.

      காரணம், அதே 2006-ம் ஆண்டு, பூஜா டபுள் ரோலில் நடித்த சிங்களப் படமான ‘அஞ்சலிகா’ இலங்கையில் ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட் ஆகியது.

      அஞ்சலிகா, உத்தரா என்ற இரண்டு கேரக்டர்களில் பூஜா நடித்திருக்க, சன்னா பெரேரா ஹீரோவாக நடித்திருந்தார். பிரபல சிங்கள எழுத்தாளர் மகேஷ் ரத்சர எழுதிய கதையை மாலித் பிலியகுருகே ‘அஞ்சலிகா’ என்ற பெயரில் சிங்கள திரைப்படமாக தயாரித்திருந்தார்.

      அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகை பூஜா, ‘அசைமான் பியபானா’, ‘யாஹாலுவோ’, ‘ஸ்வன்ட தெனுன ஜீவிதே’ ஆகிய சிங்களப் படங்களில் நடித்துவிட்டு சென்னை வந்தபோதே, “ஹையா.. கன்னுக்குட்டி வந்தாச்சு” என்று ஆர்ப்பரித்துள்ளார், செந்தமிழன் சீமான்.

      இப்போது சிக்கல் என்னவென்றால், நாம் தமிழர் படையணிக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

      ஒருவேளை சந்தேகம் சீமான் மீதா? ஐயகோ, உங்க வாய் வெந்துபோகும்! ராமபிரான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்!!

      அப்படியானால் என்ன சந்தேகம்?

      “தமிழகத்துக்கு வந்த சிங்கள பக்தர்கள், பெண்கள், குழந்தைகளை எல்லாம் நையப் புடைந்து, நடுநடுங்க வைத்து, துரத்தி துரத்தி அடித்தோம் அல்லவா? தமிழகம் வந்துள்ள நம்ம ‘பூஜா கன்னுக்குட்டி’க்கும் அதே சிருஷை அளிப்பதா?” என்பதே நாம் தமிழர் சீறும் சிங்கங்களின் சீரிய சந்தேகம்!

  6. Ithayachandran says:
    13 years ago

    குணாவின் கட்டுரைக்கான, மே 17 திருமுருகன் தோழரின் எதிர்வினையைப் பெற்று பிரசுரிப்பது அவசியமானது. இதனை இனியொரு செய்யும் என நம்புகிறேன். 

  7. s.murugan salem says:
    12 years ago

    இனியொரு செய்யும் என நம்புகிறேன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...