பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டு இந்தத் தொழிலில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். காவல்துறை மேலும் விசாரித்தபோது, இத்தகைய தொழில்களில் பெண்களை ஈடுபடுத்துவதில் ஏராளமான குழுக்கள் இயங்கி வருகின்றன. அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஏற்கெனவே செய்து வந்த செலவைச் செய்ய முடியாத நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பெண்களைக் குறிவைத்து இந்தக் கும்பல்கள் இறங்கியிருக்கின்றன. அதில் சிக்கியவர்கள்தான் தற்போது காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தின் ஒரு பகுதியான ஃபேர்பாக்சில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக் கும்பல்கள் பள்ளிக்கூட வளாகங்கள், சமூக ஊடகக்குழுக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுத்தங்கள் போன்றவற்றில் 16, 17 மற்றும் 18 வயது மாணவிகளைக் குறிவைத்து இயங்குகின்றன என்று காவல்துறை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. ரவுடிகளின் துணையோடு தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பாலியல் தொழிலில் இந்த மாணவிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருமுறை ஒப்புக்கொண்டபிறகு, அதில் ஈடுபட மறுத்தவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இதில் ஈடுபட்ட மாணவிகளில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியான தேவைகளுக்காகவே சம்மதித்திருக்கிறார்கள் என்று காவல்துறை கூறுகிறது. அவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.
இந்த பாலியல் மோசடிக் கும்பலின் தலைவர் என்று கருதப்படும் ஜஸ்டின் ஸ்ட்ரோம் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாணவிகளில் ஒருவர் சம்மதித்தபிறகு, தன்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். கத்தி முனையில் இந்த ஜஸ்டின் ஸ்ட்ரோம் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து தனது மோசடித் தொழிலைச் செய்து வந்த ஜஸ்டின் ஸ்ட்ரோமுக்கு பொருளாதார நெருக்கடி உதவியிருக்கிறது.
This is very interesting. I studied in USA from 1981 to 1995. Colombo will get a political appointee like New Delhi. Out of the four they are trying to woo Sumanthiran as he is lawyer educated in the Royal College in Colombo -07. May be he is Vellalar too like Rajavarothyam Sampanthan of Trincomalee.