25.11.2008.
ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும்.
தற்போது உள்ளதை விட மோசமான நிலை ஏற்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூரிச்சைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.
இப்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மிகப் பெரியதல்லை. நிலைமை இன்னும் மோசமாகவில்லை. அந்தக் கட்டம் இனிமேல்தான் வரப் போகிறது.
சகஜ நிலை திரும்ப நிறைய அவகாசம் தேவைப்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் என்றார் பிளன்சார்ட்.
பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைன், செர்பியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் ஐ.எம்.எஃப் நிதியுதவி அளித்தது. அதேபோல லாத்வியாவுக்கும் அது நிதியுதவி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.”
ஏழை நாடுகளை இரக்கமின்றி சூறையாடி குவித்து வைத்திருக்கின்ற செல்வத்தை அவ்வளவு லேசில் தாரை வார்க்க ஜஎம்எப் இற்கு அள்ளிக் கொடுத்த முதலாளிகள் முட்டாள்களா?
“2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் ”
எங்கே களவெடுக்க போகின்றார்களோ?எந்த நாட்டு மக்கள் கொத்து கொத்தாய் மரணிக்க போகின்றார்களோ?இதற்கெல்லாம் எப்போதுதான் முடிவு?
அதை தான் நானும் கேட்கிறேன்.எங்கிருந்து பணம் வரும்?
இதில்லிருந்து தான் எல்லா முடிச்சுகளும் அவிழ்கப்படவேண்டும்.
1929-ஆண்டிண் மாபெரும் பொருளாதரச்சரிவுக்கு இரண்டாம் யுத்தம் தொடங்கும்
காலவரை உலகஅரசியலில் என்னென்னமாற்றங்கள் ஏற்பட்டதுவோ அதுவேதான்
இனிவரும் காலங்களிலும்.யூதஅழிப்பு கம்யூனிச துடைப்பு சிலவேளைகளில் வேறு
வடிவில் உருவாகலாம்.
அப்பட்டமான பட்டுவடாதவிர வேறுஒன்றும் எமக்கல்லை என திரும்பவும் ஒரு
முறை நிரூபிக்கப்போகிறது முதாளித்துவம்.மதகலவரத்தையும் இனக்கலவரத்தையும்
சந்தேகமில்லாமல் வரவழைக்கும். முற்போக்எண்ணம் கொண்ட பொதுநலவிரும்பிகள்
முதலில் தமது சொந்தநாட்டு முதலாளிவத்திற்கு கணக்குதீர்கத் தயாராகவேண்டும்
உலகத்தின் எந்தமூலையில் மதவெறிக்கும் இனவெறிக்கும் எதிராக சளைக்காமல்
போராடவேண்டும்…………..
ரோசாவின் வார்த்தையில் சொல்வதென்றால்”சோசலிசமா?அல்லது காட்டுமிராண்டித்தனமா”?
இதில் ஒன்றைத் தெரிவுசெய்ய நாம் தயராகவேண்டும்.
”சோசலிசமா?அல்லது காட்டுமிராண்டித்தனமா”?
இதில் ஒன்றைத் தெரிவுசெய்ய நாம் தயராகவேண்டும்”
சோசலிசம் கம்யுனிசம் என்ற சொற்களை கேட்டாலே நிரம்ப நக்கலடிக்கிறார்களே?
சாரங்கா! அதுதான் சிலவேளை எனக்கும் ஒரு இடியாக இருக்கிறது
எம்மில் குறைந்தபோவதற்கு என்ன இருக்கிறது?
நீரும் நானும் அல்ல இந்தஇடி உலகத்தில்லுள்ள கம்யுனிசஇயக்கங்களும் கட்சிகளும் பட்டிருக்கிறார்கள். தவறான வழிக்கு போயிருக்கிறார்கள் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்.இனிமேலும் சில காலங்கள் வழிநடத்தப்படுவார்கள்.மீண்டும்வருவார்கள்.
மற்றஎவருக்கும் இல்லாத அனுகூலம் எமக்கிருக்கிறது.உதாரணத்திற்கு எமதுநாட்டை எடுத்துப்பாருங்கள்.தமிழ்ஈழக்கனவில் எத்தனைபேர் மூழ்கிப்போயிருந்தார்கள்.பத்தில் ஒன்பது
இல்லை? ஒருகாலத்தில் எம்மைப்பார்த்து எப்படியெல்லாம் நக்கல்லடித்தார்கள்?
இனி தலைகுனியப்போவது நாமா?அவர்களா?
எமது தோழர் சேனனைப் பாருங்கள் என்ன அசுரவளர்ச்சியை அடையப்போகிறார்
அவருடன் ஒப்பிடும் போது இந்தநக்கலல்லடித்தவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளராக உங்களுக்கு
தெரியவில்லையா?
நக்கலுக்கு பதில்சொல்வதும் அல்லது விலத்திப்போவதும் எமக்கு ஒரு போராட்டம் இல்லையா?