இலங்கையைப் பதற்ற நிலையில் பேணி மேலும் இராணுவ மயப்படுத்தும் நோக்கோடு மக்கள் மீது ராஜபக்ச குடும்ப அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் மக்கள் போராட்டங்களை உருவாக்குகின்றன. இப் போராட்டங்களை எதிர்கொள்ள இராணுவத்தினருக்கு விசேட கலகம் அடக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தியத்தலாவ இராணுவ முகாமை மையமாகக் கொண்டு இப் பயிற்சிகள் வழங்கபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது தெற்கிலும் மர்ம மனிதர்கள் பீதி இலங்கை அரசு ஏற்படுத்தி வருகின்றது. இந்த மர்ம மனிதர்கள் காவல் நிலயங்களை அல்லது இராணுவ முகாம்களை மையப்படுத்தி செயற்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கற்களால் அரச படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள நடத்தப்படும் பயிற்சிகளில் ஒன்று நேற்றைய தினம் திருகோணமலையிலும் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
srilanka naw காவர்மான் no good in saallah allah oching insaallah wait