இலங்கையை தெற்காசிய நாடுகளின் சூதாட்ட மையமாக மாற்றும் ராஜபக்ச அரசின் திட்டம் அரசுகளுக்கும் ஏனைய பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளைக்காரர்களுக்கும் உற்சாகத்தை வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் கசினோ மன்னன் என வர்ணிக்கப்படும் ஜேம்ஸ் பாக்கர் இன்று இலங்கை வருகிறார்.
அவுஸ்திரேலியாவின் கிரவுண் வர்த்தக நிறுவனங்களின் தலைவரான ஜேம்ஸ் பாக்கர், கொழும்பில் நிர்மாணிக்கப்பட உள்ள உத்தேச கசினோ சூதாட்ட நிலையங்களுடன் கூடிய ஆடம்பர ஹோட்டல் திட்டம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாளைய தினம் அவர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து இது சம்பந்தமாக பேச உள்ளதாக தெரியவருகிறது. கிரவுண் லங்கா விடுமுறை ஹோட்டல்கள் கொழும்பு பேர வாவிக்கு எதிரில் 450 அறைகளுடன் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது.
ஏழைகளின் பணத்தை அன்னியர்கள் சுரண்டுவதற்கான அத்தனை வழிகளையும் ராஜபக்ச அரசு அகலத்திறந்து வைத்துள்ளது.