ஜேர்மனியில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரசை யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இணையச் செய்திகளின் அடிப்படையில் இவர் அடித்துக் கொல்லபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த பொட்டு அம்மான் என அழைக்கப்பட்ட சண்முகலிங்கம் சிவசங்கர் இன் மூத்த சகோதரரான இவர் பழிவாங்கும் வகையிலேயே கொலைசெயப்பட்டிருப்பதாக செய்திகளின் அடிப்படையில் தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையான அதிகாரத்திலிருந்த பொட்டு அம்மான் வன்னிப் படுகொலைகளின் போது கொல்லப்பட்டார் அல்லது சரணடைந்தார் எனப் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவரது சகோதரர் தமிழீழ விடுதலைப் புலிகளோடு எந்தத் தொடர்புமற்றவராக ஜேர்மனிய நாட்டில் அகதியாகவும் பின்னர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றும் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்தவர்.
யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அரியாலைப் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீட்டை இராணுவத் துணைக்குழுக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் அதனை மீட்பதற்காகவும் அவர் பல தடவை அங்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. கோடைகால விடுமுறைக்குத் தனது வீட்டை மீட்பதற்காக அரியாலைக்குச் சென்றவர் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத் துணைக்குழுக்களும் புலனாய்வுப் பிரிவும் இணைந்தே இக் கொலையை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.
புலம் பெயர் நாட்டில் அந்த நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவருக்கே இந்த நிலையென்றால் அங்கு வாழும் முன்னை நாள் போராளிகளது அவலங்கள் எவ்வளவு கோரமானவை என அனுமானிக்கலாம்.
இந்த லட்சணத்தில் சட்டம் பேசி உரிமை பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் விக்னேஸ்வரனும் அவரது கட்சியும் இக் கொலை குறித்து மூச்சுக்கூடவிடவில்லை. அவரது உடலை ஜேர்மனிக்குக் கொண்டுவருவதிலுள்ள இழுபறி நிலைக்கு சட்டத்தரணிகள் சங்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஜேர்மனியக் குடிமகன் கொல்லப்பட்டதற்கு ஜேர்மனிய அரசும் மௌனம் சாதிக்கிறது. இதுவே வெள்ளையின ஜேர்மனியராகவிருந்தால் அவர் உலகம் முழுவதும் பேசப்பட்டிருப்பார்.
இதில் இன்னும் மர்மங்கல் இருக்கலாம். கடைசிக் காலத்தில் பொட்டர் தான் இயக்கத்தை நடத்தினார். இந்த்தியா பொட்டரை பிடித்து வைத்துள்ளது என்ற கதைகளும் உள்ளன. சரணடைஉந்த புலிகள் கொல்லப்பட்ட சாட்சிகள் நிறைய உள்ளன. இதையெல்லாம் புலிகள் சரணடையவில்லை என பினாமிகள் இலங்கை அரசாங்கத்தை காப்பாத்துகின்றனர். இங்க இவர்களும் அங்க அவர்களும் பிணங்களைவைத்து யாவாரம் நடத்திகிறார்கள்.
Sara, Daily Mirror called Pottu the real tiger that bit the cyanide pill. They both help to stalk Tamil Selvan for the Air Force. He attended the funeral and paid the last respects.
Its sad that the man was killed, I still do not understand why such people with a high profile backgroung take the risk to go back there.
தமிழினத்தின் பலத்தை சிதறடித்த விட்டு, எந்த ஊர் நியாயம் இது…இன்னும் கொஞ்ச நாள்லே இலங்கை இருந்து மட்டுமல்ல ..தமிழகத்திற்கு உள்ளே வந்தும் தமிழஇனத்த சுடுவனுங்க!!