இவை கோரமானவை மட்டுமன்றி அதிர்ச்சியை ஏற்படுத்த வல்லன. சிறுவர்களுக்கு மனோநிலைப் பாதிப்பையும் ஏற்படுத்தவல்லன.
இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த படங்கள் சில இனியொருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு தொகுதியை இங்கே வெளியிடுகிறோம். எரிகாயங்களுடன் காணப்படும் சில புகைப்படங்கள் தரப்படுகின்றன. சில உரிமை அமைப்புக்கெளக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாசகர்களோ ஏனைய ஊடகங்களோ இவற்றை தமக்குத் தெரிந்த அமைப்புக்களுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்த பின்னர், இந்தியாவின் போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பது தொடர்பாக ஒரு தனிநபர் தீர்ப்பாயம் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து விசாரிப்பது ஒரு புதிய விடயமாகவே தெரிகிறது. பிரபாகரனுக்குப் பின்னரான புலிகள் இயக்கம் என்னும் அளவில் அதன் மீதான தடையை நீக்கி தனது தேவைகளுக்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதலாம். இன்னும் இரு வாரங்களில் தீர்ப்பாயத்தின் முடிவு வரவுள்ளது.
றோவின் மற்றுமொரு முயற்சிதான் யாழ்ப்பாணத்தில் எல்லாளன் படையின் கடிதங்கள் என நம்பப்படுகிறது.
கிழக்கு மாகாணம் இழக்கப்பட்டு விட்ட பின்னர் வடக்கையாவது காப்பாற்ற தமிழர் முயற்சிப்பது ஒருபுறமிருக்க இந்தியாவும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் சீனாவின் வசம் போய்விட்ட நிலையில் வடக்கையாவது தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது. தமிழர்களை தாஜா பண்ணி காலூன்ற ஈழத்தமிழர்களை மீண்டும் ஆயுதமயப்படுத்தி தமது தேவைக்கு பயன்படுத்த விரும்புவதாகவே தெரிகிறது.
வடமாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தால் தாம் நினைத்தபடி செய்யலாம் என இந்தியா நம்புகிறது. கூட்டமைப்பை அரசுடன் தீர்வு தொடர்பில் பேசுமாறு ஆலோசனை கூறுகிறது. ஆனால், இலங்கை அரசுடன் இந்தியா பேச மறுக்கிறது. இந்தியாவின் எந்த வற்புறுத்தலையும் இலங்கை பெரிதாக இப்போது எடுப்பதில்லை. இந்தியா இப்போது இலங்கைக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்தியாதான் இலங்கைக்குப் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரிகிறது. ஆனால், இலங்கை இறங்கி வருவதாகத் தெரியவில்லை.
ஈழத்தமிழரின் பழியும் பாவமும் இந்தியாவைப் போட்டு ஆட்டுகிறது. இப்போது இந்தியாவும் சீனாவும் ஆடும் ஒரு களம் இலங்கை. இந்தப் போட்டியின் முடிவில் இலங்கை சீனாவிலிருந்து விலக மறுத்தால் இந்தியா இலங்கையைப் பழிவாங்கும். உலக அரங்கில் நடக்கும் சம்பவம்தான் இது. அப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே வழி தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள வடக்குடன் கிழக்கையும் இணைத்து [திருமலை துறைமுகம் கிழக்கில் இருப்பதால்] தனிநாடாக பிரகடனம் செய்யும். தனக்கு ஆதரவான ஒரு நாடாக அதனை உருவாக்கும். இந்தியாவுக்கு ஆதரவான ஒரு அரசு அமைக்கப்படும். தமிழீழம் உருவாகும்.
இந்தியா எதிர்த்த அந்த நாடு இந்தியாவினாலேயே உருவாக்கித் தரப்படும். கத்தியின்றி இரத்தமின்றி எமது நாடு உருவாகும். பிராந்திய முரண்பாடு எமக்கு சாதகமாக நிச்சயம் மாறும்.
ஈழத்தமிழரின் பணி என்ன? இலங்கை சீனாவுடன் கூடுதலாக இணையக்கூடிய அனைத்துக்கும் நாம் ஆதரவளிப்பதும், இலங்கை இந்தியாவுடன் முரண்படுவதைத் தூண்டுவதும்தான் இப்போது நாம் செய்ய வேண்டியது.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் தராத பலனை இன்னும் பத்து வருடத்தினுள் நாம் அறுவடை செய்யலாம் என நம்பலாம்.
ஈழத்தமிழர்களே! வாருங்கள்; எம்மை அழித்த இந்தியா என்ற ஆயுதத்தாலேயே எம்மை நாம் உருவாக்குவோம். நம்பிக் கேட்டது போதும். நம்ப நடந்து நாம் வெல்வோம்.
நம்புவோம் ‘தமிழீழம் நாளை பிறக்கும்’ என்று.
புதியமனிதனே! தாங்கள் இந்தியாவையும் சீனாவையும் தயவு செய்து ஆய்வுக்குட்படுத்தாதீர்கள்.இப்படியான ஆய்வுகள் அழிவுகரமானது.இது தமிழின வழமையின் படி கீரிமலையில் அஸ்தியை கரைக்கிற உரிமையைக் கூட இல்லாது பண்ணி
விடும்.இறுதியில் நந்திக்கடலில் தான் கரைக்க வேண்டி எற்படும்.அதுவும் நாம் நினைத்த
நேரத்தில் அல்ல. அது தமிழ்மக்களின் ” முள்டி”அஸ்தியாக தான் இருக்கும்.
ஒரு நல்ல தமிழ்மகன் இந்தியாவில்லுள்ள பல-இன-மதங்களைக் கொண்ட மக்களிலேயே
கவனம் செலுத்துவான்.அங்கிருக்கும் முதாலித்துவ அரசில் அல்ல.வெறும் கண்காணிப்புடனனேயே விழிப்பாக இருப்பான்..இந்தியா தன்நாட்டுமக்களுக்கு நன்மை செய்யாத போது ஈழத்தமிழருக்கு நன்மை செய்யும் என்பது அறிவீனம் அல்லவா?
அரசியலை கற்றுக்கொள்ளுங்கள் அல்லது கற்றுக்கொள்ள முற்படுங்கள்.இலங்கையைத் தமிழன் ஆண்டால் என்ன? சிங்கள இனம் ஆண்டால் என்ன?? இந்திய தேசியமுதாலித்துவத்திற்கு ஆபத்து ஏற்படுத்து ஏற்படுதுகிற எந்த சக்தியையும் இந்தியா அனுமதிக்கபோகிற இல்லை.இந்த உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.இதை உணராத பட்சத்தில் உணரமுற்படாதவரை..புலம்பெயர் நாட்டில்
இரண்டுகார்கள்..இரண்டுவீடுகள். இரண்டுமணைவிமார்கள் கொண்ட புலிபணசேகிப்பாளராகவே உங்களை கற்பிதம் செய்ய முடியும்..
இலங்கைக்கும் சீனாவுக்கும் 1952 முதல் வணிக உறவும் 1957 முதல் ராஜதந்திர உறவும் இருந்து வந்தன.
இலங்கயில் ஆட்சி மாற்றங்கள் சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவை எவ்வகையிலும் பாதிக்கவில்லை. சீனாவின் செல்வாக்கு வலுவாக இருக்கக் காரணங்களில் ஒன்று சீனா இலங்கையின் உள் அலுவல்களில் குறுக்கிடாமை.
இந்தியா 1978 முதல் இலங்கயில்நேரடியாகவே குறுக்கிட்டு வந்துள்ளது. அதன் குறுக்கீடு இலங்கையுடன் மட்டும் நிற்கவில்லை. தென்னாசியாவில் ஒவ்வொரு நாட்டிலும் மேலும் சிலநாடுகளிலும் அது குறுக்கிட்டே வருகிறது.
சீனா இப்போது தான் இலங்கயில் முதலிடுவது பற்றிப் பேசுகிறது. எந்த அந்நியப் பொருளாதார ஆதிக்கத்தையும் அணுகும் நோக்கிலேயே எதிர்காலச் சீன முதலீடுக்ளையும் நாம் நோக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவின் மேலாதிக்கப் போக்கையும் அமெரிக்காவின அடியாளகும் நோக்கையும் சீனாவை வைத்து மட்டும் விளக்குவதால்நாம் இந்திய மேலாதிக்கத்தின் இயல்பையும் நோக்கத்தையும் தவறவிடுகிறோம்.
கடும் போக்குடைய தமிழீழ தேசியவாதிகள் வட்டுக்கோட்டை தீர்மான தேர்தல் நடாத்தினார்கள். பின்னர் மக்களவைக்கான தேர்தல் பல நாடுகளிலும் நடைபெற்றது. உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்த கட்டம் தொடர்பாக அவர்கள் குழம்பிய நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
காரணம் நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கம். அதனால் ஏற்பட்ட ஒரு தடுமாற்றம். சரியான ஒரு ஆலோசனையை அவர்கள் பெறவில்லையோ எனத் தோன்றுகிறது.
புலிகளின் மென்மைப் போக்குடையோர்களின் உருவாக்கம்தான் நாடுகடந்த தமிழீழ அரசு. கடும் போக்குடையோரின் உருவாக்கம்தான் மக்களவை. இரண்டும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்பட வேண்டும். அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு.
ஒருவரின் போராட்டம் தோல்வி அடையும் போது மற்றவர் தொடரலாம். ஒருவர் வழி தவறும் போது மற்றவரைப் பார்த்து திருந்தவும் அல்லது மக்களால் ஒதுக்கவும் முடியும். அதுதான் ஜனநாயகத்தின் வலிமை.
ஆகவே, பல நாடுகளிலும் தனித்தனியாகச் செயற்படும் மக்களவைகள் ஒன்று சேர வேண்டும். அவையும் நாடு கடந்த தமிழீழ அரசு போல ஒரு பலமான அமைப்பாக உருவாக வேண்டும். [போட்டி அமைப்பாக அல்ல.] இது எப்படிச் சாத்தியமாகும்? மிகவும் இலகுவானது.
சகல நாடுகளில் செயற்படும் மக்களவைகளும் ஒரு பிரிவினரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருவதாகத் தெரிகிறது. ஆகவே, அவற்றை ஒன்று சேர்ப்பது சிரமமானது அல்ல.
நாடு கடந்த தமிழீழ அரசு போல ஒரு சட்டப் பேரவையாக அது உருவாக்கப்படலாம். அதனை ‘தமிழீழ மக்களவை’ [People’s Council of Tamil Eelam (PCTE)] என்றோ அல்லது ‘தமிழீழ தேசிய சபை’ அல்லது ‘தமிழீழ தேசிய பேரவை’ [National Council of Tamil Eelam (NCTE)] என்றோ பெயரிடலாம்.
அது பிரதமர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டிராமல் ஐக்கிய நாடுகள் சபை போல மக்களவையின் சகல நாட்டுப் பிரதிநிதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாக அமையலாம்.
பிரதமருக்குப் பதிலாக செயலாளர் நாயகம் பதவியும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல அமைச்சர் அல்லாது செயலாளர்கள் நியமிக்கப்படலாம்.
இது நாடு கடந்த தமிழீழ அரசுக்கு மாற்றீடாகவும் இருக்கும்; வித்தியாசமாகவும் இருக்கும். ஏன் மக்களவையினர் இதுபற்றி சிந்திக்கக்கூடாது.
நாடு கடந்த தமிழீழ அரசு தமது செயற்பாட்டை அமெரிக்காவை தளமாகக் கொண்டுதான் செயற்படப் போகிறது. அது இந்தியாவின் உதவியையும் எதிர்பார்க்கிறதாகத் தெரிகிறது. ஆனால், ஈழத் தமிழருக்கு இந்தியா ஒரு நட்பு நாடு அல்ல.
மக்களவை ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்திச் செயற்படலாம். சரியான சுயநலமில்லாத ஆலோசகர்களை முதலில் அவர்கள் அடையாளம் காண வேண்டும்.
புலிகளின் பெருமளவு வெளிநாட்டு செயற்பாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மக்களவையினர் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிரான செயற்பாட்டுக்கு தமது வளத்தை பயன்படுத்தாது இலங்கை அரசால் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட எமது விடுதலைப் போராட்டத்தை இராஜ தந்திர ரீதியாக வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பு.
செய்வீர்களா போராளிகளே??
எந்தப் போராளிகளைக் கேட்கிறீர்கள்?
இதனைவிடவும் ஆயிரமாயிரம் கோரப் படங்கள் இணையங்களிலும், தொலைக்காட்சிகளிலும்ஏற்கனவே வெளியாகியிருந்தன. இவையெல்லாம் பொய்யென்றவர்கள் இருக்கின்றார்கள். உண்மை என்றவர்களும் இருக்கின்றார்கள்.நாட்கள் கடந்து போனதால் மறந்து போகலாம் என்பவர்களும் இருக்கின்றார்கள். சொடுக்குபோடும் நேரத்துள், சுண்டு விரலில் இந்தியா தமிழீழம் பெற்றுத்தரும் என்று தனது ஆதாரங்களை ஆதாரமேயிலாமல் அடுக்கிச் செல்லுகின்றார் பெரியமனிதன்./////////அப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே வழி தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள வடக்குடன் கிழக்கையும் இணைத்து [திருமலை துறைமுகம் கிழக்கில் இருப்பதால்] தனிநாடாக பிரகடனம் செய்யும். தனக்கு ஆதரவான ஒரு நாடாக அதனை உருவாக்கும். இந்தியாவுக்கு ஆதரவான ஒரு அரசு அமைக்கப்படும். தமிழீழம் உருவாகும்என்கின்றார் பெரியமனிதன்///////. இப்படியான கற்பனாவாதக் குத்துக்கரணங்களால் தான் மக்களைக் குருடாக்கி காட்டிலே ஓட்டி, இலைகுழை தின்னவும், கடலிலே ஓட்டி உப்பு நீர் குடிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் நீங்கள்.உலக அரசியல்,பிரந்திய அரசியல் பிரதேச அரசியல், வெளிநாட்டுறவு,இராஜதந்திரம் என்பவற்றையெல்லாம் கடந்து நீங்கள் குறிப்பிடுகிற இந்தியா செய்த பாதகத்தினால் தமிழருக்கு அந்தத் தீர்வு வந்து விடும் என்று வைத்துக் கொண்டாலும்,அது எப்படி நின்று நிலைக்கும் என்பதோடு மறுபடியும் பேரழிவிற்குள் தள்ளிவிடுகிற போருக்குள் தள்ளிவிடாதா?? சிந்தியுங்கள் நடைமுறைச்சாத்தியத்தை………..
இந்தியா என்னும் நாசகாரி நாட்டை நம்பி மறுபடியும் மூக்குடைபட சொல்கின்றாரா கட்டுரையாளர். இத்தனை அவலங்கள் நடந்து கொண்டும் நடந்து முடிந்தபின்னும உதவாத இந்த அஹிம்சாவாத பேசும் மண்குதிரையை மறுபடியும்…????? கொலைவெறி சிஙகள அரசின் கால்களில் என்றும் எழ முடியாதபடி இந்த நாசகாரி நாடு வீழ்ந்துவிட்டது. இதை அறியாமல்….? ஏன் நாம் சீனாவிற்கு சார்பாக மாறி ரஸ்யாவைப் போல இந்த நாட்டையும் சிதறடிக்கக் கூடாது,,,,?
இந்தப் படங்கள பார்க்கும் போது மனசெல்லாம் சோகமாக இருக்கிறது.வாழ வேண்டிய நமது இளஞ் சமூகம் இவ்வாறூ வீழ்ந்து கிடக்கும் போது நெஞ்செல்லாம் பற்றீ எரியுதுவிளயாடித் திரிய வேண்டிய பிள்ளகளேல்லாம் இப்படிக் கிடக்கிறதே என்பதை தாங்க முடியவில்லை.
இலங்கையில் இன்டியா தலையிட்ட நாளிலிருந்து எல்லாத்தையுமே அழிச்சுட்டுது. இன்டிய அதிகாரம் மனிதாபிமானமே இல்லாதது. ஒருநாட்டை குழப்புவது இந்தியாவைக் கேட்டுதான். இப்போது இ.என்.டி.எல்.எப் ராஜன் ஆள் பிடித்து ரோ வின் உதவியோடு தமிழ் நாட்டில் பயிற்சி நடக்க்கிறது. நிலைமையை இன்னும் குழப்பப் போகிறார்கள். தமிழ் பிரதேசங்களை முழுக்க அழிக்கப்போகிறார்கள். ராஜனை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற தமிழ் மக்கள் போராட்டம்நாத்த வேண்டும்.
இந்த இரண்டு பிராந்திய வல்லரசுகளும் தற்போது உலக வல்லரசு போட்டியிலும் ஈடுபடுகின்றன. இவற்றின் இடையில் சிக்கி எம்மினம் மட்டுமல்ல மொத்த இலங்கையும் நசுங்கி நாசமாகிவிடும்.
சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்தால் அதனை வழிக்குக் கொண்டுவருவதற்காகத் திரும்பவும் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி இலங்கைக்கு எதிராகப் போராட அனுப்பும். பின்னர் இலங்கை வழிக்கு வந்ததும் அந்தத் தமிழ் இளைஞர்களை இந்தியாவே சேர்ந்து அழிக்கும். இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்காகத் தமிழர்களைப் பகடைக்காய்களாகத்தான் இந்தியா பாவிக்கும். திரும்பவும் ஏமாறாமல் சிங்களவர்களுக்கு எமது நிலைமைகளை எடுத்து விளக்கி அவர்கள் மூலமாக ஏதாவது தீர்வினைப் பெறும் முயற்சியில் இறங்குவதே இன்றைய யதார்த்தமாகும். இலங்கையில் சீன மொழியைப் படிப்பிப்பதுபற்றித் தாம் யோசிப்பதாகக் கல்வி அமைச்சர் கூறியிருந்தார். அதற்கு முன்பாகத் தமிழ்ப்பகுதிகளில் சீனமொழியைப் படிப்பிப்பதற்கு ஆவன சேய்ய வேண்டும். தான் என்ன செய்தாலும் தமிழர்கள் தமது காலடியிலேயே கிடப்பார்கள் என்ற இந்திய மேலாதிக்க எண்ணத்துக்கு அதுதான் சரியான பதிலடியாயிருக்கும்
அதிகார வர்க்கங்கல் தமது பொருலாதாரநலன் சார்ந்து எடுக்கும் முடிவுகலுக்கு பல சிருபபான்மை இனங்கல் தமது இருப்பைஇழந்து அதன் சுதந்த்திரதை பரிகொடுத்து அரசியல்வெருமைக்குல் தல்லப்பட்டுல்லார்கல். இந்தனிகல்வுபோக்கு எழத்தமிழனுக்கு தொடர்தவன்னமிருக்கின்ரது.சீனா,இந்தியா,அமெரிக்கா.இரொப்பா முரன்பாடுகலை கையால்வது என்பது எமது கொல்கை ,கோட்பாட்டுகு உட்பட்டு அதந்ததன்மைக்கு பாதிப்பு ஏட்படாதவாருநகர்துவதாகும்.தவரும்பட்சதில் அன்னாடுகலின் கையாலர்கலாக எம்மை அவர்கல் மாத்திவிடுவார்கல். இங்குல்ல பிரச்சனை கையல்வதா இல்லை கையலர்கலாகமாருவதா என்பதெ
எமது நாட்டுக்கு சீனா இந்தியா அல்லது வேறு நாடுகள் தலையிடுவது ஒன்றும் புதிய நிலைமைகள் அல்ல எமது நாட்டின் குறுகிய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இவ்வாறான பல்வேறு நாடுகளின் தலையீடுகளும் அத்தலையீடுகள் காரணமாக மிகவும் கொடூரமான நிலைமைகளுக்கு மக்கள் முகம்கொடுத்த அனுபவங்களை விடிய விடிய கதைக்கலாம். தற்போது நாம் அனைவருக்கும் தேவைப்படுவது நாம் அன்றாடம் முகம் கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொண்டு நிம்மதியாக சுகந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை நிர்மாணித்துக்கொள்வதாகும். அதற்காக நாம் எல்லாருமாக ஒன்றுசோ;ந்து இந்த வெளிநாடுகளுக்கு தேவையான விதத்தில் இங்கு தலையிடுவதற்கு உரிமையை வழங்கும் ஆட்சியாளா;களை விரட்டியப்பதற்கானகான கூட்டு திட்டத்தை மேற்கொள்வது ஆகும்.
முதலில் யார் எப்போது எவ்வாறூ தலையிட்டனர் என்பதை நாம் முறையாகப் பட்டியலிட்டுத் தகவகளுடன் மக்களுக்குத் தெரியப் படுத்துவோம்.
தலையீடுகளின் விளைவுகளை பற்றியும் தெளிவுபடுத்துவோம்.
நோக்கங்களைப் பெருமளவும் மக்களே ஊகிக்க வல்லவர்கள்.
பிறகு மக்கள் தமது முடிவுக்கு வரட்டும்.
இனியொருவுக்குஇ
எனது பதிவுகளை வெளியிட்டதற்கும் இணைய அறிமுகத்திற்கும் நன்றி.
தங்களின் கருத்துக்களைப் பதிந்தவர்களையும் வரவேற்கிறேன.