Wednesday, March 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பேரினவாதத்தை வெற்றிகொள்ளும் ஒரே வழிமுறை : துலிப் ஒபேஸேகர

இனியொரு... by இனியொரு...
02/27/2021
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கையில் மக்கள் மத்தியிலான பிரதான முரண்பாடு என்னபது ஒரு வினாவே இல்லை. பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை ஒரு பக்கத்திலும் அதன் எதிர் முனையில் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான அரசியல் தலைமையின்றிய நிலையில் காண்ப்படுவதையே இன்றைய சூழல் உணர்த்தி நிற்கிறது.

இந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் அவர்களின் தேச விடுதலையை, முழுமையான தனி அரசை அமைத்துக்கொள்வதற்கான உரிமையைக் கோருகின்ற போராட்டம் அவசியமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் போராட்டம் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களான முஸ்லீம்கள், மலையகத்தோர், வடகிழக்குத் தமிழர்கள் தமக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்போடு போராட்டங்களை முன்னெடுப்பதை அடிப்படையாகக் கொண்டது.

முஸ்லீம் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எப்படி வட-கிழக்குத் தமிழர்களின் பிரிந்து போகும் உரிமையை மறுக்கக் கூடாதோ அதே போல வட கிழக்குத் தமிழர்களும் ஏனைய தேசிய இனங்களின் சுய உரிமையை மறுக்கக் கூடாது. அவ்வகையான மூன்று ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தத்தமது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுதலை ஒன்றுபட்ட ஒத்துழைப்பின் அடிப்படையில் ஊக்குவிக்க வேண்டும்.

இந்த மூன்று தேசிய இனங்களும் தமது தேசியப் போராட்டத்திற்கான விடுதலை இயக்கங்களால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கப்படும். இத் தேசிய விடுதலை இயக்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுதல் பிரதானமானதாகும்.

அதே வேளை தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதும் அவர்களிம் உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதும் நாளாந்த உணவிற்கே வழிதெரியாத சிங்கள மக்களுக்குத் தெரியாத ஒன்று. அவ்வாறான ஏழைச் சிங்களத் தொழிலாளர்களுக்கு, தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனாவசியமாகப் போராடுகிறார்கள் என்றே கூறப்பட்டு வந்திருக்கிறது.அவர்கள் இருட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனைத் தவிர, தமிழ் மக்கள் தென்னிந்தியாவின் உதவியோடு முழு நாட்டையும் ஆக்கிரமிப்புச் செய்து சிங்களமக்களைக் கொன்று பௌத்ததையும் அழித்து விடுவார்கள் என்றும் ஒரு பொதுவான கருத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட இப்படியான கருத்துக்களால் 50 வருடங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்ட இவர்கள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறை குறித்து எந்த அறிவும் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

அவர்களைத் தமிழ் மக்கள் உண்மைகளைக் கூறி வென்றெடுப்பது மட்டுமல்ல அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவானவர்களாகவும் மாற்ற முடியும். குறிப்பாக அவர்களின் உரிமைக்காகவும் தமிழ் மக்கள் குரல் கொடுத்தால் சிறுகச் சிறுக அவர்களை வென்றெடுக்க முடியும்.

இது ஒரு வேறுபட்ட பணி. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைப் போர் தொடர்பாகச் சிங்கள் மக்கள் மத்தியில் பேசவும் அவர்களை வென்றெடுக்க வேலை முறைகளை மேற்கொள்ளவும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் தம்மாலானவற்றை மேற்கொள்ள வேண்டும். எது எப்படியாயினும் சிங்கள ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர மக்களை வென்றெடுக்க அவர்கள் மத்தியிலான கட்சி ஒன்று அவசியமானது.

அப்படியான கட்சி ஒரு கம்யூனிச இயக்கமாக மட்டுமே அமைய முடியும். அப்படியான ஒன்று தான் தன்னலமற்றுப் போராட முடியும். இன்று கம்யூனிஸ்டுகளாகத் தம்மைக் கூறிக்கொள்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது வாக்கை வென்று பாராளுமன்றம் செல்வதற்காக இனவாதிகளாகவே உள்ளனர். ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களோடு சமரசம் செய்து கொண்டு பதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

சிங்கள மக்கள் மத்தியில் உருவாகக் கூடிய கம்யூனிச இயக்கத்தின் மிகப்பெரிய தடை இவர்கள் தான். இது தவிர, பல காரணிகள் காணப்பட்டாலும் இவர்கள் மிகப் பெரிய தடைக்கல்.

இனிமேல் உருவாகும் சமூகப் பிரக்ஞை உள்ள கம்யூனிச இயக்கங்கள் தமிழர்களின் தேசியப் போராட்டத்தை ஆதரிப்பதை முன்நிபந்தனையாகக் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறான கம்யூனிச இயக்கத்தில் தமிழர்கள் பெரும் பங்கு வகிப்பது மாத்திரமல்ல தேசிய விடுதலையிலும் கொள்கை அளவிலான ஆளுமையை வழங்க இயலும். மூன்று தேசிய இனங்களினதும் விடுதலை இயக்கங்கள், சிங்கள அரசியல் தலைமை ஆகியவற்றின் முன்னால் இலங்கை அரச பேரினவாதம் சிறுபான்மையாக்கப்படும். மக்கள் விடுதலை வென்றெடுக்கப்படும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
35வது நாளில் குண்டு மழைக்கு உத்தரவிட்ட அமெரிக்காவின் பைடன் ஜனநாயகம்!

35வது நாளில் குண்டு மழைக்கு உத்தரவிட்ட அமெரிக்காவின் பைடன் ஜனநாயகம்!

Comments 9

  1. அப்பு says:
    15 years ago

    சிங்களத்தில் இருந்து இப்படியான குரல்கள் வருவது ஆறுதல் தருகிறது.ஒட்டு மொத்த இலங்கைத்தீவுக்கும் நன்மை பயக்கும் தொடக்க நிலை அரசியல் .இதை விரிவாக விவாதித்து செம்மைப்படுத்த வேண்டும்.

  2. THAMILMARAN says:
    15 years ago

    ஞானி எனும் பண்ணாடைக்கு குடை பிடித்து பல்லாக்குத் தூக்கும் பரதேசிக் கூட்டம் முற்போக்குச் சிந்தனையாளருக்கு மொழி முலாம் பூசுதல், சாதி அடையாளப்படுத்தல் செய்து தன் பார்ப்பண வெறீயைக் கக்கும் சூழலில் இனியொரு தன் கடமையைச் செய்வது இருக்கும் ஓரே ஆறூதல்.

  3. நெருஞ்சி says:
    15 years ago

    மேற்குநாடுகளில் படித்த ரசிய சீனக் கைக்கூலிகள்தான்,சனநாயக முறையில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நாசமறுத்தவர்கள்.

    ரசியாவில் படித்த சீனக் கைக்கூலி ரோகண’தான்,ஆயுதப்புரட்சி முறையில் , தமிழர்களை பணயக் கைதிகளாக மாற்றியவர்கள்.

    கம்யூனிசம் பேசியவர்கள்தான் சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியை பட்டி தொட்டி எங்கும் வளர்த்தவர்கள்.

    இப்போதும் தொழிலாளர் வர்க்கத் தாளம் போட்டு,தமிழ் மக்களை கூறு போட வருகிறார்கள்.கண்டிச் சிங்களவர்களும்,கரையோரச் சிங்களவர்களும் வயிற்றுப் போக்குக்கு முற்போக்கு பேசி ‘நீகாமா’ சொல்லி யுவான் தேடுகிறார்கள்.

  4. நெருஞ்சி says:
    15 years ago

    மேற்குநாடுகளில் படித்த ரசிய சீனக் கைக்கூலிகள்தான்,சனநாயக முறையில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நாசமறுத்தவர்கள்.

    ரசியாவில் படித்த சீனக் கைக்கூலி ரோகண’தான்,ஆயுதப்புரட்சி முறையில் , தமிழர்களை பணயக் கைதிகளாக மாற்றியவர்.

    கம்யூனிசம் பேசியவர்கள்தான் சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியை பட்டி தொட்டி எங்கும் வளர்த்தவர்கள்.

    இப்போதும் தொழிலாளர் வர்க்கத் தாளம் போட்டு,தமிழ் மக்களை கூறு போட வருகிறார்கள்.

    மாறாக கண்டிச் சிங்களவர்களும்,கரையோரச் சிங்களவர்களும் வயிற்றுப் போக்குக்கு முற்போக்கு பேசி, ‘நீ கா மா'(ni hao ma
    ) சொல்லி யுவான்(yuan ) தேடுகிறார்கள்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      எல்லாருமே நாசமறூப்பாந்தான் என்றால் நன்மை செய்பவன் யார்?

      • நெருஞ்சி says:
        15 years ago

        நன்மை செய்பவர்களை தேடினது காணும்.

        எங்களை நாங்கள் நம்ப வேணும்.

        எங்கட கால்ல நடக்கத் தெரியோணும்.

        இரவல் சிந்தனையை களையோணும்.

        தீதும் நன்றும் பிறர் தர வாரா;

        யாதும் ஊரே யாவரும் கேளீர்.

        • THAMIL MARAN says:
          15 years ago

          நல்லதே,நல்ல சிந்தனை.

  5. Vijey says:
    14 years ago

    கம்யூனிச இயக்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான தீரிவினை முன்வைத்து முன்னெழ வேண்டும். ஆனால் இதுவரைக்கும் அது சாத்தியப்படவில்லை. தெற்கில் இனவாதத்திற்கெதிராக – இன ஐக்கியத்திற்காக செயற்பட்டவர்கள் கூறுவது எதுவும் சாத்தியமற்றது என்பது ! எங்கிருந்து – எப்படித் தொடங்குவது என்பதுதான்…

  6. நெடுதுயிலோன் says:
    14 years ago

    அடக்குமுறை ஆட்சி நடக்கும் நாடில்,எந்தகொள்கை உடையவராய் இருந்தாலும் முதலில் அந்த ஆட்ச்சியை துடைத்து எறிந்துவிட்டு பின்னர் எந்த கொள்கை அந்நாடிற்கு சாத்தியப்படும் என்று அவ் மக்களின் தெரிவுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தலாம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...