1950 களுக்கு பி;ன்னர் தான் இலங்கை அரசியலிலும் இலக்கியத்திலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இக்கால சூழலில் ஆசியா – ஐரோப்பா மற்றும் உலகலாவிய ரீதியிலே தொழிலாளர் வர்க்கம் சார்ந்த உணர்வுகளும் போராட்டங்களும் வலிமை பெறத் தொடங்கின. பாஸிசத்திற்கு எதிராக பலமான மக்கள் இயக்கங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்றிருந்தன.
1930 களில் ஸ்பானியர்கள் உள்நாட்டு யுத்தத்திற்கு எதிராக போராடியதுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாகி ஆயிரக் கணக்கான மக்கள் சமத்துவமான சமூதாய அமைப்பை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பின்னனியில் ஆஸ்திரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளிலும் பல விடுலை இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறே ஆசியாவிலும் குறிப்பாக சீனா இந்தோNசியா முதலிய நாடுகளில் ஜப்பானிய பாஸியத்தை எதிர்த்து வீறு கொண்ட போராட்டங்கள் தோன்றி மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கங்களில் தம்மை இணைந்துச் செயற்பட்டனர். இலட்சிய பிடிப்பும் முற்போக்கு உணர்வும் மிக்க எழுத்தாளர் பலர் தோன்றிக் கொண்டிருந்தார்கள். சிலர் பாஸிச வெறியாளர்களாரல் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டார்கள். தன் மரண வாயிலில் நின்றுக் கொண்டும் மனித குலத்தின் நாகரிகத்தை நம்பிக்கையுடன் மட்டுமல்ல கூடவே கர்வத்துடனும் தன் எழுத்துக்களின் ஊடாக பதிவு செய்த ஜீலியஸ் பூசிக்கின் பின்வரும் வாசகம் இக்காலத்தே எழுந்த மக்கள் இலக்கிய கர்த்தாக்களின் உணர்வுகளை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.
இன்பத்திற்காகவே பிறந்தோம். இன்பத்திற்காகவே வாழ்நகிறாம். இன்பத்திற்காகவே போராடினோம். அதற்காகவே சாகின்றோம். துன்பத்தின் சாயலானது இறுதி வரை எம்மை அணுகாதிருக்கட்டும் இவ்வகையான இலட்சிய பீடிப்பும் இலக்கிய தாகமும் கொண்ட எழுத்தாளர்கள் உலக இலக்கியத்தில் தோன்றிக் கொண்டிருந்தாரகள். இதன் பிரதிபலிப்பை நாம் இலங்கை தமிழ் இலக்கிய செல்நெறியிலும் காணக் கூடியதாக உள்ளன.
இக்காலப்பகுதியில் இலங்கை அரசியல் வரலாற்றினை பொறுத்தமட்டில் நாற்பதுகளின் இறுதியிலும் 50 களிலும் பொதுவுடமை இயக்கமானது வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 1953 இல் சகல இடதுசாரி ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவ்வியக்கம் ஏற்படுத்திய கலாசார பண்பாட்டுத் சூழலில் தோற்றம் பெற்றதே முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளையும் கொள்கைகளையும் முன்னெடுப்பதில் இவ்வணியினருக்கு முக்கிய பங்குண்டு. இதன் பின்னணியிலே மக்கள் சார்பான இலக்கியங்களும் இலக்கிய கோட்பாடுகளும் தொற்றம் பெறலாயின.
1950 களுக்கு பின்னர் இலங்கை இலக்கியத்தில் புதியதோர் பரிமாணத்தை தரிசிக்க கூடியதாக அமைந்திருந்தது. இலங்கையில் தேசிய இலக்கியம் எனும் குரல் எழுந்தது. தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக இலங்கை மண்ணுக்கே உரித்தான பிரச்சனைகள் இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. இது குறித்து கைலாசபதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
ஷஷதேசியப் பின்னணியில் வளரும் சமுதாயத்தின் போக்கை அனுசரித்து வாழ்க்கைக்கு கலைவடிவம் கொடுக்கவும் சரித்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஈடுகொடுக்கவும் திறமையிருந்தால் சிறந்த – உலக இலக்கியத்தில் இடம்பெறத்தக்க உயர்ந்த சிறுகதைகளைப் படைக்க எமது எழுத்தாளாரால் முடியும் என்றே நம்புகிறேன். பொழுதுபோக்கிற்காக எழுதுவதா அல்லது பொது நலத்திற்காக எழுதுவதா என்னும் முக்கியமான கேள்வி இன்றைய எழுத்தாளர் பலரையும் எதிர்நோக்கி நிற்கிறது. இது புதிய கேள்வியன்று.
வௌவேறு வடிவத்திலும் உருவத்திலும் இலககிய சிருஷ்டி கர்த்தாக்களை விழித்துப் பார்த்த கேள்விதான். ஆனால் இன்று மிக நெருக்கடியான நிலையிலே இக்கேள்வி எழுத்தாளரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியத்தையுணர்ந்து நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலையெய்தவும் மூட்டும் அன்புக் கனலோடு எழுத முடியுமா முடியாதா என்பதைப் பொறுத்திருக்கிறது எதிர்கால இலக்கிய வாழ்வும் தாழ்வும்’
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதாகும்,. ஒரு நாட்டின் பூலோக பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலிய அம்சங்கள் சமூக வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றன. அவ்வகையில் பிரதேசம், மண்வாசனை என்ற அடிப்படையில் எழுகின்ற இலக்கியங்களை மேலோட்டமாக அர்த்தப்படுத்திப் பாரக்கின்ற போது குறுகியவாதகமாக படலாம். சற்று ஆழமாக நோக்கினால் தான் அதன் பின்னனியில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தம் சாதனங்களாகவும் அவை அமைத்துக் காணப்படுகின்ன. மறுப்புறமாக அவை தேசிய எல்லைகளை கடந்து சென்று சர்வதேச இலக்கியமாகவும் திகழ்கின்றன.
இவ்வாறுதான் ரசிய புரட்சியின் முன்னோடியாக திகழ்ந்த மாக்ஸிம் கோக்கியும் , இந்திய தேசியவிடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பாரதியும் இன்னும் இத்தகையோரும் எமக்கும் அரசியல் இலக்கிய முன்னோடிகளாக திகழ்கின்றனர்.
இ.மு.எ.ச நிறுவப்பட்ட காலத்தில் கைலாசபதி; பேராதனை பல்கலைகழக மாணவராக இருந்தார். அவர் இத்தகைய இயக்கத்தின் தோற்றத்தை உள்ளுற வரவேற்றதுடன் காலப்போக்கில் அதனால் கவரப்பட்டு அதன் நிகழ்வுகளிலும் பங்கேற்றார். அத்துடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரானதுடன் இ.மு.எ.ச வின் யாப்பு, கொள்ளை வகுத்தல் முதலிய செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுப்பட்டார். 1957 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த இ.மு.எ.ச வின் முதலாவது பேராளர் மாநாட்டில் பிறநாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபற்றினர். இம்மநாட்டில் உலக புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் உரையை மொழிப்பெயர்த்தவர் கைலாசபதி.
01. இம்மநாட்டில் மக்கள் கலை இலக்கிய கோட்பாடு குறித்த விவாதங்கள் தோன்றியுள்ளன. யாதார்த்தவாதம் ,சோசலிச யதார்த்த வாதம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றபோது அத்தகைய அனுபங்களையும் உள்வாங்கி நமது சூழலுக்கான இலக்கிய கோட்பாட்டை உருவாக்கியதில் இ.மு.எ.ச முக்கியபங்குண்டு. ‘கியூபாவின் ஜூலை 26 இயக்கமும், நிகாரகுவில் சான்டினிஸ்டா முன்னணியும் தங்களது போராட்டங்களில் வெல்ல முடிந்ததற்கு ஏற்கனவே இருந்த தேசிய விடுதலைப்போராட்ட மரபை அவை முன்னெடுத்து சென்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். யாரோ கூறியது போல, அவர்கள் தங்களது புரட்சிகளை ஸ்பானிய மொழியில் நடாத்தினர்: ரசிய மொழியில் அல்ல. மார்ட்டியும், சான்டினோவும் அவர்களது ஆன்மீக முன்னோடிகள். சமீபத்திய வெனிசுலா புரட்சியிலும் இது நடந்துள்ளது. தலைவர் ஹியூகோ சாவேசுக்கு சைமன் பொலிவார், சைமன் ரோட்ரிக்;ஸ் ( பொலிவாரின் ஆசிரியர்) மற்றும் எஸ்குயேல் ஜமாரா ஆகியோரின் சிந்தனைகளுக்கு எப்படி புததுயிர் அளிப்பது என்பது தெரிந்திருந்தது'( மார்த்தா ஹர்னேக்கர், தமிழில்: அகோகன் முத்துசாமி, (2010), இடதுசாரிகளும் புதிய உலகமும், பாரதி புத்தகாலயம், சென்னை, ப.75)
இவ்வகையில் சோசலிச யதார்த்தவாதம் குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்ட போது அது அன்றைய சூழலில் இலங்கைக்கு பொருத்தமற்றதொன்றாகவே காணப்பட்டது.; பண்பாட்டுத்துறையில் சமூகமாற்ற்ததிற்கான போராட்ட வடிவமானது மண்வாசனை இலக்கியம் அமைந்திருப்பதனையும் அதன் தர்க்க ரீதியான வளர்ச்சியாகவே தேசிய இலக்கியம் அமைந்திருப்பதனையும் வரலாற்று அடிப்படையிலும் சமூதாய நோக்கிலும் உணர்ந்து செயற்பட்டமையே இ.மு.எ.ச.த்தின் முக்கியமான சாதனையாகும். அவ்வியக்கத்தில் இத்தகைய கோட்பாடுகளை உருவாக்குவதில முன்னணியி; செயற்பட்டவர் கைலாசபதி; என்பதை ஆய்வாரள்கள் சுட்டிக் காட்டுவர்.
அத்துடன் இ.மு.எ.ச.த்தின் பணிகளை தமது மாணவர்கள், நண்பர்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் சென்றதுடன் அவர்களை இவ்வியக்கத்தில் சேர்ப்பதிலும் முக்கிய கவனமெடுத்துள்ளதையும் அறிய முடிகின்றது.
இவ்வகையில் செயற்பட்டுவந்த இ.மு.எ.ச மானது 1960 களின் ஆரம்பத்திலேயே அது சித்தாந்த ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் சிதைய தொடங்கியது என்பதனையும் கவனத்திலெடுக்க வேண்டும். இலங்கையின் பொதுவுடமை இயக்கத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகளும் பொதுவுடமை இயக்கத்தை பிளவுக்குள்ளாக்கியது. இ.மு.எ.ச. பல தேசிய ஜனநாயக சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்த போதினும் அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த பலர் இடதுசாரி கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள்.மேற்படி பிளவும் அணி பிரிதலும் இ.மு.போ.எ.ச.த்தையும் பாதித்தது. அதன் தலைமை பொறுப்பினை ஏற்றிருந்தவர்களின் போக்கு இவர்களை சித்தாந்;த ரீதியாக சிதைத்து பின் இயக்க ரீதியான சிதைவுக்கு வழிவகுத்தது.
மனுக்குல விடுதலைக்கான பரந்துப்பட்ட ஐக்கிய முன்னனிப் போராட்டத்தில் இவ்வியக்கத்தின் பலம் பலவீனம் குறித்து ஆழமான ஆய்வொன்றினை காய்த்தல் உவத்ததலின்றி செய்தல்; காலத்தில் தேவையாகும்.
இ. மு. போ. எ. ச வீறுக்கொண்டெழுந்த காலத்திலும், பின்னர் அதன் தளர்வுற்றக் காலத்திலும் இவ்வியக்க செயற்பாடுகளில் கைலாசபதி பங்கெடுத்தார். தன்னால் முடிந்த மட்டும் அதனை முற்போக்கான திசையில் வைத்திருப்பதற்கே அவர பெரும் முயற்சியெடுத்திருந்தார்.
இத்தகைய இ.மு.எ.ச.த்தின் சிதைவுக்கு பின்னர் அன்றைய காலத்தின் தேவையை அடியொட்டி உருவாக்கபட்டதே தேசிய கலை இலக்கிய பேரவையாகும். அதன் வெளியீடாக தாயகம் என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. கைலாசபதி தேசிய கலை இலக்கிய பேரவையின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன் தாயகம் சஞ்சிகைக்கும் கட்ரைகள் எழுதினார். ‘பாரதி பன்முக ஆய்வு’ என்ற தொணிப்பொருளில் நடைப்பெற்ற இலக்கிய அமர்வுகளில் அவரது கட்டுரைக்கும் மற்றும் இறுதி அமர்வையும் (சுகயீன முற்றிருந்ததால்) தவிர ஏனைய சகல அமர்வுகளுக்கும் அவரே தலைமையேற்று நாடாத்தியதுடன் கட்டுரைகளை நெறிப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றி வந்துள்ளதை அறிய முடிகின்றது. இவ்வமைப்பின் நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார் என்பதற்காக அதில் அங்கம் வகித்திருந்தார் என வலிந்துக் கூறுகின்ற அபத்தமாகும். பின்னாட்களில் இவ்வமைப்பில் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் அவற்றினால் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களும் அதி தீவிரவாத சிந்தனைகள் யாவும் இவ்மைப்பு தனது பாதையிலிருந்து தடம் புரண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் இ.மு.எ.ச. எப்படி இயங்கியதோ அதே பாணியில் தான் இன்று இவ்வமைப்பு இயங்கிக் கொண்டிருபபதை காணலாம். வருடந்தோறும் கைலாசபதிககு விழா எடுத்துக் கொண்டே கைலாசபதியின் அடிப்படைகளிலிருந்து விலகியுள்ளமையும் சகல தேசிய ஜனநாயக சக்திகளின் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளை மேற்கொள்ளவதாலும் இப்பணியினை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்போக்கானது உழகை;கும் மக்கள் குறித்த எவ்வித கரிசனையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட அதித புத்திஜீகளின் சுயரூபத்தைக் காட்டி நிற்கின்றது.
அவ்வாறே கைலாசபதி மலையக கலை இலக்கிய பேரவையுடனும் தொடர்புக் கொண்டிருந்தார். அதன் செயலாளரான அந்நனி ஜீவாவை நெறிப்படுத்தியதுடன் அவ்வமைப்பின் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.
ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் கைலாசபதியை பொறுத்தமட்டில் இலக்கிய அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருவதாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் உறவுக் கொண்டிருந்த இலக்கிய அமைப்புகளினூடாக முற்போக்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.
உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.
இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார்.
இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. ‘பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே’ என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. ஆதனை மார்க்சிய முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் விளங்கிக் கொள்ளும் விதமும் தமதாக்கிக் கொள்ளும் விதமும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியும், இருக்கவேண்டும்.
1948 களுக்கு பின்னர் ,இந்தியாவிற்கெதிரான அல்லது தமிழர்களுக்கெதிரான,சிங்கள பௌத்த பேரினவாத கட்டுக்கோப்புக்கு முண்டு கொடுக்க உதவிய சீனக்கம்யுனிசத்தால், இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பு “தேசியம், தேசிய கோட்பாடு என்பன தத்துவார்த்த போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன” என்பது வரலாறுதான்.
அதிகார வர்க்கத்திற்கெதிராய் எழுந்த மாக்ஸிம் கோக்கியும்,பாரதியும் அரசியல் இலக்கிய முன்னோடிகள்தான்.
அதிகார வர்க்கத்துடன் சேர்ந்து, ‘நெருடாவை’ மொழி பெயர்த்தால் புரட்சிப்புயலாக வர்ணிக்கப்படலாம் என்பதற்கு, இந்த எழுத்துகள் உதாரணம்.
இறுதியாக வேலிக்கு ஓணான் சாட்சியாக,’அறம் பாடி’ புகழ் வ. ஐ. ச. ஜெயபாலனால் தீர்க்கதரிசனப்பட்ட பெருமகன்தான்,
பேராசிரியர் கைலாசபதி.
“நெல்லாக இருப்பதற்காய்,பதர்களை உருவாக்கிப் போனாயே.”
கைலாசபதி பற்றிய பதிவுகள் இக்காலத்தில் முக்கியப்படுகிற ஒன்று.
எப்போதும் கொள்கை ரீதியான உறுதியான பற்றாளராக அவர் இருந்தார் என்பதே அவருடைய முதன்மை நிலைக்கு காரணமாகலாம். ஆயினும் தனிநபர்கள் குறித்து (முக்கியமாக எஸ்.போ.) அவர் காட்டிய எதிர்ப்புகள் விமர்சனத்திற்குரியதாக இன்றும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இதற்கு மேலாக மக்கள் சார் இலக்கியங்களை அவர் முதன்மைப்படுத்திய வேளை இலக்கியங்களின் இலக்கிய தரங்குறித்து அதிக அக்கறை கொள்ளவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருந்தது. கைலாசபதி அவர்களால் முதன்மைப்படுத்தப்பட்ட மக்கள் சார் இலக்கியங்கள் சில சிறந்த இலக்கியமாக கொள்ளப்பட முடியாதவை என்ற கருத்தும் நிலவுகிறது. அதேவேளை சிறந்த இலக்கியங்கள் சிலவற்றை கைலாசபதி தனது விமர்சனத்திறனால் ஒதுக்கி வைத்திருந்தர் எனவும் கூறப்படுகிறது. அவரால் ஒதுக்கப்பட்ட ‘மஹாகவி’ பின்னர் முக்கியப்படுத்தப்படும் நிலையே பற்றியும் பேசப்படுகிறது.
1985 களில் யாழ்ப்பாண பல்கலைக்கழ அரங்கொன்றில் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்றா நிலையிருப்பதாக கைலாசபதி அவர்கள் குறிப்பிட்;ட போது, அதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தமை தங்களது விமர்சனமே என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
கைலாசபதி அவர்கள் ‘இலக்கிய தரம்’ குறித்த விமர்சனத்திற்கான விடையினை முன்வைக்க முனைந்திருந்தார். தனது நூலொன்றில், முதலாளித்து இலக்கியங்களுக்குரிய அழகியல் விதிகளைக் கொண்டு மக்கள் சார் இலக்கியங்களை மதிப்பிட முடியாது என்ற வகையில் ( ஞாபகத்தில் இருப்பது இதுவே) எழுதியிருந்தார். ஆயினும் மக்கள் இலக்கியங்களுக்கான இலக்கிய அழகியல் குறித்து அவர் விரித்து எழுதியிருந்தாரா? என்பதனை அறிய முடியவில்லை.
கைலாசபதி அவர்களின் கருத்தியலால் கவரப்படவர்களுள் நானும் ஒருவன். ஆயினும் முக்கியமான தளங்களிலிருந்து அவர்மீதான விமர்சனங்கள் முன்வைக்;கபட்டு வருகிறது. கைலாசபதி அவர்கள் மீதான ‘அவதூறுகள்’ இன்றும் பரப்பப்பட்டு வருகிறது. இவை குறித்து விவாதிப்பதினூடாக சரியான மதிப்பீடுகளை பெற்றுக் கொள்ள வழிகாண்போம்;.
நண்பரே கலாநிதி கைலாசபதி அவர்கள் 1982இல் இறந்துவிட்டார்.
அப்படியானால் 1985இல் அவர் இப்படி எவ்வாறு கருத்துரைக்க
முடியும்?
காலம் பற்றிய தெளிவின்மையால்தான் 1985கள் எனக்குறிப்பிட்டேன்.
சின்னவயதில் என் கையில் தட்டுப்பட்ட வழுவழுப்பான புத்தகம் கவிதைகளா அவை தெரியாது படித்த மாத்திரத்தில் பிடித்துப் போய் அதை பக்குவமாய் பேணீய நான் சிறூவன் அப்போது அதுதான் மகாகவி.சந்தமும் நடையுமாய் தமிழின் முதல் கைக்கூ கவிஞ்ன்.நம் மண்ணீன் மாபெரும் கவிஞ்ன்.எத்தனை பேர் வந்து போனாலும் அவனை விஞ்ச யாராலும் முடியாது.குமுதம் இதழில் சுஜாதா விதந்துரைக்கும் வரை நம்மில் பலருக்கு அவரது அடையாளமே தெரியாது.கைலாசபதி அவர்களூக்கு என்ன கட்டாயமோ யாருக்குத் தெரியும்? புதுவையின் காலத்து கவிஞ்ர் ராதேயன் போல.நட்சத்திரங்கள் கண்ணூக்கு தெரியாமலே இருக்கின்றன.
I have the following questions. Can anyone enlightn me please?
i. If Kailasapathy was true marxist why did he join Lake House and worked under its owner who was a Sinhala Buddhist extremist and a capitalist.
ii. Kailasapathy encouraged Eelam tamil writers to write in Thinakaran where he worked. But this was mainly due to Lake House owner’s refusal to pay money to the Indian tamil writers whose writings were appearing in Thinakaran. He had to fill in the pages of the paper so he used this opportunity and encouraged the local tamil writers to write. Am I right to say that he would not have supported Eelam tamil writers wholeheartedly, had the owner of lake House continued his payments to Indian tamil writers?
iii. What Murukapoopathy doing now – organising a writers meeting with the connivance of government – kailasapthy and his progreesive writers group did it in 1970s. ( Not sure of the year) when they had a writers meeting ( Thesiya Orumaipaddu mahanadu ) in Colombo where Government ministers participated. What was his marxist position then?
iv. Has kailasapathy a member of any left oriented political party at any time?
v. What did he do when thousands of up country Tamils were forcefully removed to India in 1970s? Did he raise his voice or engaged in mass protests?
இந்தக் கட்டுரையை எளுதுவது பேராசான் கைலாசபதியை போற்றாவா? அல்லது போனால் லெனிண் மதிவாணமுக்கு பிடிக்கதவர்களை திட்டவா?
ரவீந்திரனினிடம் கச்சாலா?
தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளை
என்ரு அவரினுக்கு ஏன் நக்கலடிக்கிறார்?
எந்திரவியலாளர்களும் என்ரு அவரினுடைய மைத்துனரையும் எண் வம்புக்கிளுக்கிரார்?
இவரினுடைய கட்டுரை எல்லாம் பேராசான் கைலாசபதியத் திட்டுவதினுக்கு தான் வளி காட்டுகிறது என்ரால் இவரினில் என்னவோ மிஸ்ஸிங்கா?
நீங்கள் கூறியவாறு எனது கட்டுரை இரவீந்திரனையோ அல்லது அவரது மைத்துனனையோ பற்றியதாக அமையவில்லை. கட்டுரையை கவனமாக வாசிக்கின்றபோது புரியும். ஒருவகையில் கைலாசபதியின் வழிதடத்தை சிதையாதவகையில் முன்னெடுப்பதில் இரவீந்திரனுக்கு முக்கிய இடமுண்டு.
கட்டுரையை படிக்கிற போது அது யாரையோ திட்டுறதுக்காக எழுதின மாதிரித் தான் தெரிந்தது.
திட்டின ஆளை பத்தி சொன்ன விசயங்கல் அப்படியே ரவீந்திரனை சொல்லுகிற மாதிரி இருந்தது.
அப்போ யரை நினைச்சு திட்டினீங்கள் என்று சொல்லுங்கள். இல்லையானால் பாவம் ரவிந்திரன் வாத்தியார் ரொம்ம்ப வருத்தப் படப் போறார்.
அன்பரே !
முருகபூபதி சக்கையாகிப் போன முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதிநிதி.
எஸ்போ நடத்திய ” சத்திய ” இலக்கியம் என்ன சாதனை புரிந்தது.?
மதிவாணம் இக்கட்டுரையில் என்ன விடயம் பற்றிக் கூறியுள்ளார்? தயவுசெய்து எதையும் ஏனையோருக்குக் கொஞ்சம் விளங்கும் வகையில் உண்மைகளைத் தெரிந்து தெளிந்து ஆதாரத்துடன் எழுதவும்.
மகாகவி பற்றிக் கைலாசபதி தனது பல கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக அவரின் அடியும் முடியும் நூலில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
இக் கட்டுரை கைலாசபதியையும் அவர் காலத்தில் இயங்கிய இலக்கிய அமைப்பு பற்றியதுமாகும். அதற்கான முக்கியத்துவ முக்கியத்துவமே இங்கு வழங்கப்பட்டுள்ளது. மஹாகவி பற்றிய கைலாசபதியின் நிலைபாடு தொடர்பாக வேறோரு கட்டுரையில் எழுதியுள்ளேன். அக்கட்டுரை எனது மலையகம் தேசியம் சர்வதேசம் என்ற நூலிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
புலிகளைக்கொன்று குவிக்க புலி இயக்க கருணாவை பயன்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் இராஜ தந்திரத்தை மதிவானம் சரியாக தேசிய கலை இலக்கிய பேரவையையும் மார்க்ஸியத்தையும் தகர்க்க பயன் படுத்துகின்றார் அரசாங்கத்தின் மூலம் இராஜ தந்திரம் கற்பதற்காக மலேசியா அனுப்பப் பட்டேன் என்று கூறித்திரியும் லெனின் மார்க்சிய எதிர்ப்புக்காக பேராசிரியர் கைலாச பதியை பயன்படுத்துகின்றார் முன்னொரு காலத்தில் தேசிய கலை இலக்கிய பேரவையில் இணைந்து கொள்வதற்காக கையேந்தி நின்ற காலத்தில் பேராசிரியர் கைலாஸை பற்றி பேசி தான் இணைந்து கொண்டார் கவிஞர் முருகையனின் மரணத்திற்கு பின் பேரவையின் தலைமை பதவிக்காக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்கள் வரிசையில் இரவிந்திரன் மதிவானம் என பலர் தோல்வி கண்டதன் விலைவே மேற்படி விமர்சனங்கள் எதை கூறினாலும் கேட்டுக் கொண்டிருக்க இனிஒரு வாசகர்கள் ஒன்றும் மதிவானத்தின் குடும்ப உறுப்பினர்களைமாத்திரம் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முச்சந்தி அல்ல இது இரவீந்திரனுக்கு முதுகு சொறியும் நீங்கள் காங்கிரஸ் கல்வி அமைச்சர சச்சிதாநந்தனுக்கும் முதுகு சொறிந்து விட்டது உலகமறிந்த உண்மையல்லவா
என் மீதான அர்த்தமற்ற விவாதங்களை முன் வைப்பதை விடுத்து எனது கருத்துக்கள் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள். சச்சிதானந்தன் பிரதி அமைச்சராக கல்வி அமைச்சில் கடமையாற்றியிருக்கின்றார். அதே காலப்பகுதியிலும் இன்றும் நான் கல்வி அமைச்சுக்கு கீழ் இயங்குகின்ற நிறுவனத்தில் நான் இன்று வரை பணிப்புரிகின்றேன். இதற்கு அப்பால் அவருக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறே ஒரு காலத்தில் தேசிய கலை இலக்கிய பேரவை சில நிகழ்வுகளுக்கு என்னை அழைத்திருந்தது அக் கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளேன். இன்று அவவமைப்புடன் எனக்கு மாறுப்பட்ட கருத்துக்களின் காரணமாக விலகி நிற்கின்றேன். எமது கருத்துக்களுடன் உடன்பட்ட சிலரை இணைந்துக் கொண்டு முச்சந்தி இலக்கிய வட்டமாக இயங்குகின்றோம். இதில் பல தரப்பட்டோர் அங்கம் வகிக்கின்றனர். பதவிக்காக மற்றவர்களின் ஆதாரமற்ற குற்றங்களை சுமத்துவது, அதற்காக நாயாக அலைவது, காலத்திற்காலம் சொருவப்படுகின்ற மெமரி காட்(ரோபா மனிதன் எந்திரனுக்கு) ஏற்றவகையில் தாக்குவது எமக்கு தேவையற்ற ஒன்று.
மிஸ்டர் மதிவானம்
ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் இந்த வார்த்தைகள் எதற்காக எவருக்காக ஏன் என்மாதிரி எழுதினீர்கள் என்றால் சற்று வாசிப்பவர்களுக்கு பிரயோசனப்படும் என்று நினைக்கிறன்
எந்திரன் மெமரி காட் என்ற தங்கள் தமிழ் ரசனைக்குரியது.
இந்த கட்டுரையை போன ஞாயிற்றுக் கிழமை பேப்பரிலையும் பார்த்தேன். ஆனால் எழுதினவர் பேர் பாரதி தீட்சண்யா என்று இருந்தது.
லேனா மாவன்னாவே ரொம்ப டிபென்ட் பண்ணி இந்த வெப்சைட்டிலே எழுதுபவரும் அவரும் லேனா மாவன்னாவும் ஒரே ஆளா?
கடந்த ஞயிற்றுக் கிழமை வெளியான கட்டுரை கைலாசபதியின் பல்கலைகழகம் சார்ந்த பங்களிப்பு பற்றியது. அவசரஅவரமாக வாதித்திருப்பீர் போலும்…. அது சரி எனது கருத்துக்களுடன் உடன்படாவிடில் கருத்துக்களை நேர்மையுடன் விமர்சிப்பது நாகரிகமாகும். அதைவிடுத்து ஏன் மீதான ஆதாரமற்ற தாக்குதல்களை நடாத்தி ஏன் ஐயா நேரத்தை வீணடிக்கின்றீர்கள். இனியொரு இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
கட்டுரையை பயண்படுத்தி நீங்கள் ஏன் ஐயா நேரத்தை வீணடிக்கின்றீர்கள் அதுவும் கைலாஸ் என்னும் மனித நேயனைக் கொண்டு அல்லவா மாக்ஸியத்தை புரட்ட பார்க்கின்றீர் இங்கே பட்டுக் கோட்டையின் பாடல் உமக்கு மிகப் பொருந்தும் பாரும் ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி
தேசம்நெற்றில் காலம் சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்கள் மீதும் சேறு அள்ளி எறிந்திருக்கிறார்கள். சேறு அள்ளி எறிந்தவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த காலத்தில் பள்ளிக்கூடமே செல்லாத நாலு வயது சிறுவனாக இருந்த அருணோதயன் (நட்சத்திரன் செவ்விந்தியன்), கேள்வி செவியன் ஊரைக் கெடுத்த மாதிரி தேசம்நெற்றில் ஜெயபாலனின் அனுசரணையோடு அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். உயிருடன் இல்லாத பேராசிரியர் கைலாசபதி அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதுதான் ஜெயபாலனின் தேசம்நெற்றின் பண்பு. அருணோதயன் போன்றவர்களின் அவதூறுகளை தேசம்நெட் வெளியிடுவதன் மூலம் தனது ஊடக தர்மம் எத்தகையது என்பதை அனைவருக்கும் காட்டியிருக்கிறார். தேசம்நெற்றில் காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி பற்றிய அவதூறுகளின் ஒரு பகுதிய கீழே காண்க.
http://thesamnet.co.uk/?p=22539
“நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பதவி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். தனிநாயகம் அடிகளார் (1913-1980). சீ.ஜே.எலியேசர் (1918-2001). சின்னப்பா அரசரட்ணம்.(1930- 1998) ஜெயரட்ணம் வில்சன் (1928-2000) போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடையவை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள். கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்திலேயே நிராகரிக்கப்பட்டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பதில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxist indoctrination) ஆட்கொள்ளப்பட்டவராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்.
சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்துடனேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் கைலாசபதி குதிரை வியாபாரத்திலும் (Horse trading) அரசியல் காய் நகர்த்தல்களிலும் மிக வல்லவராக இருந்தார். இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லாம் ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோது தலைவர் பதவியை அடித்துப்பறித்தார்.
கைலாசபதி வெளிப்பூச்சுக்குத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை.
முதற்கோணல் முற்றும்கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்போது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும்.”
சேற மிதித்தால் கழுவி விட்டு வர வேண்டியதுதானே பவித்திரன் இங்கும் கொண்டுவர வேண்டுமா? குப்பைகள காவித்திரியும் மனநோயாளீ போல இணப்பு வேறூ கொடுக்கிறீர்கள்?
பேராசிரியர் கைலாசபதிக்கு எதிராக யார் சேறடிக்க முற்படுகிறார்களோ அவர்கள் அடக்கியொடுக்க பட்டமக்களுக்கெதிராக செயலில் இறங்குகிறார்கள் என்பதே உண்மையான வாதமாகும்.
இலங்கையில் அடக்கியொடுக்க பட்டமக்களுக்கு எதிராக தமிழ்மக்களின் குட்டிமுதாலித்து பிரிவினர் கடந்த முப்பது வருடங்களில் தமது கடமையாற்றி ஓய்ந்து விட்டார்கள். மிகுதியை ஏதாவது ஒருவகையில் தமது இலட்சியத்தை அடைவதற்கு முற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அருணோதயன் என்கிற முகமூடிச் நச்சத்திரசெவ்விந்தியனும் பலமூகமூடிகளை மாற்றி தானே த.ஜெயபாலன் என வலம் வருகிற தேசம்நெற்றும் தமது இறுதிமூச்சை விட தயாராகிக் கொண்டிருக்கிறன. அவர்களை யாரும் தடை செய்யாதீர்கள். பைத்தியம் தெளியும்வரை அவர்கள் பாட்டுக்கு விட்டுவிடுவதே சிறந்தது. இவர்களுக்கு உண்மையில் இருக்கிற சித்தப்பிரமை தெளியுமா? என்பதே சந்தேகமே! எதற்கும் காலஅவசாசம் எடுப்பது ஆரோக்கியமானதே. கடந்த காலத்தில் தமிழ்மக்களில் இருந்த பிற்போக்கு எண்ணங்களும் சிந்தனையுமே பிறிதொருகாலத்தில் புலியாக உருவெடுத்தது. இன்று புலிகள் அழித்தொழிக்கப் பட்டாலும் அதன்மறு பிரதிகளையே அருணோதயன் த.ஜெயபாலன் வடிவத்தில் காண்கிறோம். 2008 மார்கழிமாதத்தில் தனது பதிவில் த.ஜெயபாலன் எழுதுகிறார்.” புலிகள் அழித்தொழிக்கப்பட்டால் தமிழ்மக்களின் போராட்டஉணர்வு மழுங்கடிக்கப் பட்டு விடுமாம” எப்படியிருக்கிறது? இவர்கள் போராட்டஉணர்வு. இவர்கள் தான் பல்களைகழகத்தை பற்றி அதன் சிதிலப்போக்குகள் பற்றி ஆய்வு செய்கிறார்களாம்.