பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எம் சிந்தனைகளையும் இதயங்களையும் கவர்ந்தவர். 79வது வயதில் அவரது மரணம் எமது சிந்தனைகளை மழுப்பி கண்களை குலமாக்கியது. மாத காலங்கள் உருண்டோடிவிட்டன. அப்போதிருந்த துயரப் பழு இப்போதில்லை. இன்று பேராசியரின எழுத்துக்களையும் சமூக பங்களிப்பினையும் பின்னோக்கி பார்க்ககும் போது தமிழ் சமுதாயத்தின் வாழ்க்கைக் கூறுகளில் அவரது பார்வை பாயாத இடம் ஏதுவுமே இல்லை என்றுக் கூறும் அளவுக்கு அரசியல், பொருளியல், சமூகவியல், அழகியல், மெய்யியல், அரங்கியல் அறியல் என அவரது பார்வை வேர்கொண்டு கிளை பரப்பி விசாலித்து நிற்கின்றது. அத்தகைய அறிஞரின் இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். ஆனால் பேராசிரியரின் இறப்புக்கு பின்னர் எதிர்பார்த்த வகையில் அவர் பற்றிய ஆக்கப்பூர்வமான ஆய்வுகள், மதிப்பீடுகள், நினைவுக் குறிப்புகள், அறிமுககக் குறிப்புகள் யாவும் வரவில்லை என்ற போதிலும் அவர் பொறுத்து சில கட்டுரைகள் உரைகள் கறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இதுவரை வெளிவந்த மதிப்பீடுகளை ஒப்புநோக்குகின்ற போது, போரசிரியரை குறுகிய வரம்புக்குள் நிலை நிறுத்தி தத்தம் வக்கிர நோக்குகளை அவர் மீது சுமத்த முற்படுகின்றவர்களை மேதாவிகளை ஒருப்புறத்தில் பார்க்கின்றோம்.
இவர்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அம் முயற்சிகள் யாவும் இரு தளங்களில் இடம்பெற்று வந்துள்ளதை- வருகின்றமையை காணலாம். ஓன்று பேராசிரியரின் அரசியல்- இலக்கிய சமூக ஈடுபாடுகளில் பல உண்மைகளை வெளிக் கொண்டு வருபவையாக சிலவும், போராசிரியரின் மேதாவிலசத்தின் பண்புகளை எடுத்துக் காட்டுபவையாக சிலவும் அமைந்துள்ளன. இத்தகைய விளக்கங்களினூடாக தொழிற்பட்டு நிற்கும் கருத்து நிலைகளை நோக்கும் போது அவற்றில் சில பேராசிரியரின் சமூக பங்களிப்பை ஆதாரமாகக் கொண்டு புரட்சிகர சமூகமாற்றத்திற்கு அவரிடமிருந்து பெறக் கூடிய ஆளுமைக் கூறுகளை இனங் காணும் முயற்சியாக அமைந்துள்ளது. மாரக்சிய முற்போக்கு அறிஞர்களே இத்தகைய ஆய்வுகளை முன் வைத்துள்ளனர். மற்றொன்று, அவரது தேசிய இலக்கியம், மண்வாசைன இலக்கியம் என்பனவற்றில் அவர் முன்னெடுத்த கோட்பாட்டு போராட்டம் சார்ந்த பங்களிப்பபினையோ அல்லது அந்த வளர்ச்சியின் பின்புலத்தில் அவர் சார்ந்து இருந்த மார்க்சியத் தத்துவத்தையோ தாக்கும் வகையில் பேராசிரியர் அத்தகைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த காலத்தை இருண்ட காலமாக காட்டும் முயற்சிகள் இன்னnhருபுறத்தில் நடந்தேறிவருகின்றன.
பின் அவர் அந்தப் பாதையிலிருந்து நீங்கி தமிழ் தேசியத்திற்குள் சென்ற போது அவரது இலக்கிய ஆளுமை உயிர்க்கின்றது என மக்கள் விரோத பஜனைக் கும்பல் ஒன்று பேராசியரைப் போற்றிவருகின்றது. அந்தவகையில் இன்றைய சூழலில் சமூகமாற்றத்திற்கான பேராசிரியரின் ஆளுமைக் கூறுகள் வெளிக் கொணரப்படுவதை விட அவரது பலவீனமான பக்கங்களே முதன்மையாக போற்றப்படுவதை அண்மைக்கால நிகழ்வுகள், எழுத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறானதோர் சூழலில், அவரது மறைவின் ஒருவருட நிறைவையொட்டி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ‘போராசிரியரின் நினைவுப் பகிர்வு’ என்ற தலைப்பிலான கருத்தாடலொன்றினை மலையக மக்கள் கலையரங்கு(ம.ம.க) ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வக்கு கவிஞர். சு. முரளிதரன் தலை தாங்கினார். ம.ம.க யின் தலைவர் பிரான்சிஸ் ஹெலன் வரவேற்புரை நிகழ்த்தியதடன் பேராசிரியர் கா.சியை மலையகத்துடன் இணைத்து பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந் நிகழ்வில் முதன்னை விருந்தினராக கலந்துக் கொண்ட கல்லூரின் அதிபர் விஜசிங் அவர்களால் பேராசிரியர் கா.சி யின் உருவ படம் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ‘போரரிரியர் கா.சியின் ஆய்வு நோக்கு’ என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து திருவாளர்கள் லெனின் மதிவானம், மல்லியப்பு சந்தி திலகர் முதலானோர் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். அவ்வுரைகளின் சாரம்சம் பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தன. அவை வருமாறு:
கலாநிதி ந. இரவீந்திரன் தமதுரையில் ;
‘சிவத்தம்பியின் தனித்துவப் பங்களிப்பில் முதன்மையாக வலியுறுத்த வேண்டிய திணைக் கோட்பாட்டில் அவர ;காட்டிய ஈடுபாடும் சாதியம் குறித்த ஆய்வுக்கான தொடக்கனராக அமைந்தமையும் ஆகும். ஏற்கனவே பார்த்ததுபோல மாநாட்டு நிகழ்வில் வெளிப்பட்டதைப்போல, தலைசிறந்த தொடக்குனராக விளங்கியபோதிலும் வளர்த்தெடுக்கத்தவறிய போதாமை இருந்து தொலைத்துவிட்டது. பிற்கூறில் மார்க்சியத்திலிருந்து ஏற்பட்ட விலகலினால் தொடக்குனராகப் பங்களித்த சாதனையைக் குறைமதிப்பீடு செய்யமுடியாது.
திணைகள் படிமுறை வளர்ச்சி பெறும் மரபுக்கருத்தை விரித்துரைத்த போதிலும், தமிழகத்தில் சமநிலையில் நான்கு திணைகள் நிகழ்ந்துள்ள ஐயப்பாட்டையம் அவர் வெளிப்படுத்ததத்தவறவில்லை. அதன் தொடர்ச்சசியாக குறிஞ்சியின் வணிக வாய்ப்பைக் கண்டிருக்க வேண்டும். விவசாய எழுச்சிக்கு முந்திய வணிகமும், வீரயுகத்திலேயே (சங்ககாலத்திலேயே) வணிகமும் வணிகக் கருத்தியல்களான ஆசீவகம் – சமணம் – பெத்தம் என்பன நிகழ்ந்தமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவற்றைக் காணத்தவறினார். அது குறித்து அவரோடு விவாதித்ததுண்டு. வலிமையாக மறுக்காத போதிலும் சந்தேகங்களையே வெளிப்படுத்தினார்.
அவரது ஆழமான ஆங்கிலப் புலமை இங்கு அவரைப் பலவீனப்படுத்தும் தடையாக இருந்துள்ளது. விவசாயத்துக்கு முந்திய வணிகம் பற்றிய ஆய்வு ஏதும் ஆங்கிலத்தில் இருந்திருப்பின் கண்டிப்பாக திணைக்கோட்பாட்டை இன்னொரு தளவீச்சடன் வெளிப்படுத்தியிருப்பார். தமிழின் துயர், அது தமிழகத்துக்கு மட்டுமே வாய்த்த ஒர் சிறப்பு அம்சமாய் இருந்து தொலைத்தது. இருப்பினும், இப்புதிய விவாதத்;தை நிர்மூலமாக்கும் எந்தச் செயலிலும் அவர் ஈடுபடவில்லை. தலைசிறந்த ஆய்வறிஞருக்கு இருக்க வேண்டிய பண்பின் பிரகாரம் ஐயப்பாட்டைக்கிளர்த்திப் புதிய ஆய்வுச்செல்நெறியின் ஊடாக விடைதேடவேண்டிய கடப்பாட்டினை ஏற்படுத்தி தந்தமையாகும். திணைக் கோட்பாட்டின் அருட்டுணர்வு காரணமாய் எமது சமூகத்தை வெறும் வர்க்க பேதமாய் மட்டுப்படுத்திப் பார்க்காமல் சாதி அமைவுகள் குறித்து ஆய்வுக்குட்படுத்தினார் சிவத்தம்பி.
‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்?’ என்ற அவரது கட்டுரை இவ்விடயத்தில் முக்கியத்துவம்மிக்கது. யாழ்ப்பாணச் சமூக அசைவியக்கத்தில் சாதிகளின் வகிபாகம் குறித்த ஆய்வுத் தொடக்கத்தை அவர் ஏற்படுத்தியதன் பேறாக ஈழத்தமிழ்தேசியம் யாழ் வெள்ளாளத் தேசியமாக உள்ளமையை இன்றைய பல ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. திராவிடர் இயக்கச் செல்நெறி குறித்த அவரது ஆய்வுகளும் பெரும் தாக்கத்;தை ஏற்படுத்தின. தமிழினத்தேசியம் குறித்த சரியான புரிதலை எட்டுவதற்கு அவர் தொடக்கிவைத்த தளங்கள் உறுதியாய் உள்ளன.’
மார்க்சிய சமூகவியல் அடிப்படையில் பேராசிரியர் பற்றிய மேலும் மேலும் ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த பின்னணியில் வர்க்க ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது? பேராசிரியரில் இழையோடியுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது எப்படி? பேராசியரை அவரது காலப்பின்னணியில் நோக்கி காய்த்தல் உவத்தலற்ற ஆய்வுகளை வெளிக் கொணர்வது எவ்வாறு? முதலிய சிக்கலான பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்குவதாக கலாநிதி ந. இரவீந்திரனின் உரை அமைந்திருந்தது. மேலும் அவ்வாய்வு பேராசிரியர் கா.சி பற்றிய ஆய்வில் மாத்திரமல்லாது, இலக்கிய வரலாறு தொடர்பான பிரச்சனையொன்று தொடர்பாகவும் முக்கியத்துவம் உடையதாகும். இலக்கிய வரலாற்றுப் போக்கில் பேராசிரியர் கா.சி. எவ்வாறு இனங்கண்டு கொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டு பிரச்சனை மேற்கிளம்பியதையும் இவ்வாய்வில் காணக் கூடியதாக இருந்தது.
தொடந்து நினைவுரையாற்றிய லெனின் மதிவானம் தமதுரையில் ;
‘பேராசிரியரின் ஆராய்ச்சித் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது முறையியலே ஆகும். அவருடைய முறையியல் பல்துறைசார்பானது. இந்த முறையியலும் ஆய்வுப் பார்வையும் பேராசிரியரிடம் சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற தமிழ்த் சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து ஆய்வுகளை வெளிக் கொணர்ந்ததார். தமிழ் புத்தி ஜீவிகள் பலர் தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில் சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்சியத்தைக் கண்டடைய முடியும். பேராசிரியர் இதனைப் புரிந்து கொண்டு தமிழியல் ஆய்வினை மேற்கொண்டார். அத்துடன் தமிழர் பண்பாட்டில் கலை இலக்கியம், நாடகம், வரலாறு, சமூகம், கல்வி, தொடர்பாடல் மற்றும் ஊடக நெறி என பல்துறை சார்ந்த விடயங்களில் தமது பார்வையைச் செலுத்தி அதன் ஒளியிலேயே தமது ஆய்வுகளை முன்வைத்தார். அவரது ஆய்வுகள் இன்றுவரை பல்துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அந்த வகையில் கைலாசபதி – சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது. காலப்போக்கில் இயக்க செல்நெறி தொடர்பில் அவரில் ஏற்பட்ட விலகல்கள் குறிப்பாக மொஸ்கொ சார்பு நிலைப்பாட்டை முன்னெடுத்தமை, பிற்போக்கா தமிழ் தேசியத்திற்குள் சென்றமை முதலிய அம்சங்களை விட்டு விட்டுப் பார்த்தால் அவர் தமிழியல் அறிஞர் என்ற வரகயில் தொடரந்;து தமிழுக்கு பங்களிப்பு செய்து வந்துள்ளார்.’
இவ்வுரை காலத்திற்கு காலம் பேராசிரியரில் முனைப்புற்றிருந்த சமூக அரசியல் கருத்துநிலைகளின் பின்னணி யாவை என்பதையும் அதன் பின்னணியில் எத்தகைய கருத்துக்களை இலக்கிய கோட்பாடுகளை பேராசிரியர் முன் வைத்திருந்தார் என்பதையும் வெளிப்படுத்தியது. மேலும் அவ்வுரையில் இன்றைய சூழலில் பேராசிரியரை எத்தகைய ஆய்வுகளுக்குட்படுத்தி அதன் மூலமாக சமூகமாற்றத்திற்கு சாதகமான உள்ளடக்க கூறுகளை கவனத்திலெடுக்கப்படவேண்டும் எனும் விடயமும் வலியுறுத்தப்பட்டது. நுpகழவின் இறுதியாக உரையாற்றிய
மல்லியப்பு சந்தி திலகர் தமதுரையில் ;
‘2001 – 2002 காலப்பகுதி ஒருவருடம் நான் பேராசிரியரின் மாணவன். இதழியல் டிப்ளொமாவின் பகுதி தேவையாக ஒரு ஆய்வு கட்டுரை வழங்க வேண்டும். தலைப்புக்களை பேராசிரியரிடம் பரிசீலித்தோம். எனது தலைப்பைச் சொன்னேன். ‘மலையக மக்களின் பிரச்சினையை வெளிக்கொணர்வதில் இலங்கை ஊடகங்களின் பங்கு’ என்றேன். இலங்கைக்கு பக்கத்தில் அடைப்புக்குறி போட்டு (தமிழ்) என்று சேர்த்துக் கொள் என்றார். இல்லாவிட்டால் நீ ஆய்வு செய்து முடிக்கமாட்டாய். உனக்கு முடிவு கிடைக்காது. மற்றவனுக்கு என்னடா மலையகத்தைப் பற்றி அக்கறை முதலில் நம்மவனுக்கு இருக்குதா என்று பார்? என்றார். என் தலைப்பு அதுவாகவே ஆனது. முன்வரைபு, வினாக்கொத்து, விடயப்பொருள் என பல விடங்கள் அவரிடம் ஆலோசனை பெற்றேன். அப்போதுதான் தெரிந்தது. மலையகம் பற்றி, அதன் சமூக, கலை, இலக்கிய, அரசியல் செல்நெறிகள் பற்றி அவர் கொண்டிருக்கும் அறிவு, ஆர்வம், வியப்பு, விரிந்து கிடக்கும் ஏக்கம் என எல்லாம் தெரிந்தது. மலையக மக்கள் பற்றிய நுணுக்கமான அவரது ஆய்வுகள் பெறுமதியானவை என எனக்கு வழிகாட்டிய அவர், பின்னாளில் மல்லியப்பு சந்தி’ கவிதைகள் தொகுதிக்கான முன்னுரை வாங்கச் சென்றபோது ‘ இந்தக் கிழவனுக்கு கண்ணுப் பார்வை சரியில்லை. வைத்தியருகிட்ட போனா சின்ன எழுத்தெல்லாம் வாசிக்க முயற்சி செய்யக்கூடாது. அதனால் பல வருத்தங்கள் வரும் என்று அட்வைஸ் பண்ணினார். அதனால் உன்னால முடியுமானால் எனக்கு நெடுக வந்து வாசித்து காட்டினால் முன்னுரை தாரத்துக்கு தயார்.’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நான் ஆர்வத்தோடு ஒத்துக் கொண்டேன். ஆவ்வாறே மிகுந்த நிதானத்துடனும் பொறுப்படனும் எனது கவிதைத் தொகுப்புக்கான முன்னூரையை வழங்கினார்’ என குறிப்பிட்டார்.
பேராசிரியரின் வாழ்க்கையை ஆராய்ந்து நிறுவும் ஆய்வுகள், நினைவுப்பதிவுகள் இப்போதுதான் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன. பேராசிரியரை அறிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், அபிமானிகள் போன்றோராலேயே அத்தகைய பதிவுகளை கொண்டு வரமுடியும். இதன் மூலமாக பேராசிரியரின் அருமையையும் ஆய்வுத் திறமையையும் ஈடுபாபடுகளையும் நாம் அறிந்துக் கொள்ள வாய்பாக அமைந்துள்ளது. மனிதர்களுக்குரிய மறதியுணர்வினாலும் சில மனிதர்களுக்குரிய மறைப்பு வேட்கையாலும் இவ்வகையான இலக்கிய ஆளுமைகள் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டு விடக் கூடிய அபாயம் இருக்கின்றது. இவ்வாறான சூழலில் பேராசிரியர் பொறுத்து வெளிவந்த நினைவுக் குறிப்புகளில் ஈழத்தின் முத்த எழுத்தாளர் தெணியான் எழுதிய ‘நெஞ்சில் பதிந்துள்ள பேராசியர் கா. சிவத்தம்யின் நினைவுகள்’, என்ற நீண்ட கட்டுரையும் ஏ.எம்.நாஹியா ‘எழுதிய யானறிந்த பேராசான்: காத்திகேசு சிவத்தம்பி'(நினைவுப் பேருரை, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்க வெளியீடு) என்ற சிறு நூலும் முக்கியமானவையாகும். இந்த வரிசையில் கவிஞர் மல்லியப்பு சந்தி திலகரின் பேராசிரியர் பற்றிய நினைவுகள் பதிவு செய்யவேண்டியதொன்றாகும். மிக முக்கியமாக, தாம் நோய்வாய் பட்டக் காலத்திலும் அவர் தமிழியியல் ஆய்வின் பால் இருந்த ஆர்வம் காரணமாக எத்தகைய துன்பதுயரங்களுக்கு மத்தியிலும் தமது எழுத்துப் பணியினை மேற்கொண்டிருந்தார் என்பதையும் கூடவே, நண்பர்களை நேசித்து அவர்களுடனான தொடர்பை பேணி வந்தார் என்பதையும் அவரது உரையில் காணக் கூடியதாக இருந்தது. மேலும் பேராசிரியரின் மலையகம் சார்ந்த பங்களிப்பினையும் மலையக எழுத்தாளர்கள் (சி.வி வேலுப்பிள்ளை, தெளிவத்தைஜோசப், லெனின் மதிவானம்) மீது அவர் கொண்டிருந்த பற்றினையும் நேசத்தினையும் தமது உரையில் வெளிப்படுத்தியிருந்தார். மல்லியப்பு சந்தி திலகரின் உரை முழுமையாக எழுத்தில் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
முடிவாக நோக்குகின்றபோது, பேராசிரியர் கா.சி தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடர் அல்லர். அவர் அவ்வாறு கருதிக் கொண்டவரும் அல்லர். அவருடன் கருத்து மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்த அவரத மாணவர்கள், நண்பர்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே கூறியிருக்கின்றாரகள்;. மனிதர்களின் பால் நேயம் கொண்ட மார்க்சியவாதியொருவர் தன்னை ஒருபோதும் புரட்சிகர புனிதனாக கருதமாட்டான்.
அவர் மார்க்சியத்தை மாறிவருகின்ற சூழலுக்கு எற்றவகையில் பிரயோகித்து அதன் ஒளியிலே நாட்டைப் பற்றியும் சமுதாயத்தை பற்றியும் தெளிவாக சிந்தனைகளை முன்வைப்பார். அந்தவகையில் பேராசிரியர் கா.சி.யின் மார்க்சிய பார்வை தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாட்டு முதலிய துறையைகளை வளம் படுத்தவும் செழுமைப்படுத்தவும் துணைப்புரிந்துள்ளது. காலப்போக்கில் அவர் தான் வரித்திருந்த பாதையிலிருந்து தடம் மாறி போயிருப்பினும் தமிழறிஞர் என்றவகையில் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் தொடர்ந்து பங்களிப்பு செய்துள்ளார்.
பேராசிரியர் பொறுத்து அவர் காலத்து நம்பிக்கையை இன்னொரு தலைமுறையினரிடம் ஒப்படைக்கின்ற போது மேலும் பல தளங்களை தொட முனைதல் அவசியமாகும். இக் கூட்டத்தில் அதிகமான மாணவர்களை காண முடிந்தது இந்நிகழ்வின் இன்னnhரு சிறப்பாகும். பேராசியரின் பல் துறை சார்ந்த பங்களிப்புகளை சமூகநோக்கில் ஆராய்வதற்கான முயற்சியாகவும் இந்நிகழ்லைக் குறிப்பிடலாம். இத்தகைய சிறப்பானதொரு நிகழ்வை ஒழுங்கமைத்த ம.ம.க அமைப்பினரையும் அதன் தலைவர் பிரான்சிஸ் ஹெலன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
-மதியம் கடந்த வேளையில் நான் சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திக்கிறேன். அவ்வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தவுடன் சிவத்தம்பி அரசியல் தொடர்புகளைப் பேணிவந்தார். சிவத்தமபியிடம் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு, பல்கலைக் கழகத்தில் உடனடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதனைத்தொடர்ந்து புலிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்க தான் முன்வருவதாகக் கூறினார்.
அதற்காக டெலோ இயக்கம் இன்னமும் பலத்துடன் நிலைகொண்டுள்ள கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.
அவரை அழைத்துவருவதற்கு நானும் யோகன் என்பவரும் இணக்கம் தெரிவிக்கிறோம். யோகனை எனக்கு நன்கு அறிமுகமில்லாதவர். புலிகளின் ஆதரவாளர். அவரது மூத்த சகோதரர் புளட் அமைப்பின் அரசியல் பிரிவில் காண்டீபன் என்ற பெயரில் செயற்பட்டவர்.
நாங்கள் கார்த்திகேசு மாஸ்டரை அழைத்துவரப் புறப்பட்ட வேளையில் டெலோ இயக்கத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கள்வியன்காடு பகுதியில் மட்டும் டெலோ இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்து. அங்கு டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் தங்கியிருந்ததால் இராணுவ பலமும் அதிகமாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.
கள்வியன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் சட்டநாதர் கோவில் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியவாறிருந்தனர். அவர்கள் முதலில் எங்களைக் கைது செய்து விசாரணை செய்கின்றனர். யோகன், சிவத்தம்பி ஆகியோர் மீது அதிக சந்தேகம் கொள்ளவில்லை என்பதால் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தின் நிலைகளைத் தாண்டிச் செல்லும் போது டெலோ இயக்கத்தினர் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர். நாங்கள் ஏற்கனவே தயார்செய்திருந்த வெள்ளைத் துணிகளை உயர்த்திக் காட்டுகிறோம். கொல்லப்படுகின்ற அவலங்களைப் பார்த்த எங்களுக்கு எமது உயிர் மீது கூட வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவாறு கள்வியன்காட்டை அடைந்ததும், டெலோ இயக்கப் போராளிகளிடம் எமது நோக்கத்தைச் சொல்கிறோம். அவர்கள் எங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.
மிகுந்த ஏமாற்றத்துடன் நாங்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை நோக்கித் திரும்பிவருகிறோம். சிவத்தம்பி அப்போது அங்கிருக்கவில்லை. அவருக்காகக் சில மணிநேரங்கள் காத்திருக்கிறோம். டெலோ இயக்கம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட செய்தியோடு அவரும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். -இது நான் முன்னர் ஒரு பதிவில் எழுதியது.
அதற்குப் பின்னர் பல தடவைகள் இயக்கப் போராளிகளும் இயக்கங்களும் அழிக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என சிவத்தம்பியிடம் பலமுறை பலர் கோரியிருக்கிறார்கள். சிவத்தம்பி எப்போதுமே அதற்குத் தயாராக இருக்கவில்லை.
விஜிதரன் என்ற பல்கலைகழக மாணவன் கடத்தப்பட்டு புலிகள் இயக்கத்தினாரால் கொலை செய்யப்பட்ட போது பல்கலைக்கழகத்தில் ஒரு வெகுஜனப் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களை ஆரம்பத்தில் முழுமையாக ஆதரிப்பதாகக் கூறிய சிவத்தம்பி ஒரு நாள் என்னை தனிப்பட அழைத்து இனிமேல் இவற்றை நிறுத்திவிட்டு வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லுமாறு ஏனையோரைக் கேட்குமாறும் கோரியது எனக்கு நினைவிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்த டக்ளஸ் தேவானத்தவுடன் அவரின் நட்பு இறுதிவரை தொடர்ந்தது. மறுபுறத்தில் புலிகளை நியாயப்படுத்துபவராகவும் செயற்பட்டார். இறுதியில் கருணாநிதியிடம் சரணடைந்தார்.
இவை சிவத்தம்பியின் அரசியல் செய்ற்பாடுகளாவே வெளிப்பட்டன.
ஆக, சிவத்தம்பி எந்தக் காரணத்தைக் கொண்டும் புதிய தலைமுறைக்கு முன்னுதாரணாமகக் கூடாது. இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உருவாகும் கோப்ரட் புதிய உலக ஒழுங்கமைப்பிற்கு மனிதர்கள் நசுங்குச் செத்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
சரணாடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இணங்காத புதிய அரசியல் தலைமையும், அது உருவாக்கும் புதிய சிந்தனையும், இன்று அவசியமாகிறது. சிவத்தம்பியின் பங்களிப்பை உள்வாங்க வேண்டாம் என நான் கூறவில்லை. ஆனால் அவரின் அழுகிய அருவருக்கத் தக்க மற்றைய பக்கத்தை சரணடைவிற்கு அப்பால் விமர்சனத்திற்கு உபடுத்தவேண்டும்.
அவ்வாறான அரசியல் தத்துவார்த விமர்சனமின்றி சிவத்தம்பியின் பங்களிப்புக் கூட முழுமை பெறாது.
ஒவ்வொன்றையும் உள்வாங்குதலும் அவற்றை விமர்சித்தலும் இறுதியில் முடிவுகளுக்கு வருதலும் அவசியமானது. நாங்கள் ஆண்டவர்களை உருவாக்கத் தேவையில்லை. அவர்கள் மூவாயிரம் வருடங்களாக அழிக்கப்படாமல் இருக்கிறார்கள். மனிதர்கள் தான் ….
சிவத்தம்பியின் தனிப்பட்ட வாழ்கை மிகவும் மோசமான ஒன்னு…குறைந்த பட்ச அறம்கூட இல்லாதவர். அனால் அவரின் தமிழியல்
ஆய்வை நாம் மதிக்க வேண்டும்.
“கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.” என பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் நல்லது மக்கள் போராட்டம் கூட்டுழைப்பு என்பது பற்றி எல்லாம் பேசும் நண்பரே வன்முறைகள் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழ்நிலையில் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரால் தனிப்பட்டமுறையில் செய்ய கூடிய பங்களிப்பின் எல்லை எதுவாக இருக்கும் என்பது பற்றிய அறிதல் அவசியமானது என்பது எனது கருத்து மேலும் ஒரு பேராசிரியர் சகல செல்வாக்குகளையும் அதிகாரங்களையும் கொண்ட ஒருவர் என்பது போன்றும் உங்கள் எதிர் பார்ப்புகள் பொய்த்து போய் விட்டது போன்றும் பேசுகிறீர்கள் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எல்லா இயக்கதினரோடும் நட்பை பேணினார் என்பதை ஒரு வாதத்துக்கு தவறு என எடுத்துக் கொண்டாலும் அவர் எழுத்துகளில் எந்த இயத்தினரையும் தூக்கி பிடிக்கவில்லை (பிற்காலத்தில் விடுதலைப் புலிகளைத் தவிர) புலிகளின் எழுச்ச்சிக்குப் பின்னால் முந்நாள் மார்சியர்கள் மற்றும் புத்திஜீவிகள் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டார்கள் என்பது யதார்த்தம் இதில் சிவத்தம்பியை மட்டும் குறி வைத்து தாக்குவது முறையான விமர்சனப் பண்பாகத் தெரிவதில்லை
சிவத்தம்பி பற்றிப் பேசும் போது அவரது தமிழியல் மற்றும் வரலாறு, பண்பாடு தொடர்பான ஆய்வுகளை முன் வைத்து விவாதிப்பது பொருத்தமானது. நீங்கள் சேறு பூச வேண்டும் என்பதற்காகவே அவரது அரசியல் நிலைப்பாடு பற்றி மட்டுமே பேசுகின்றீர்கள். அவர் மாக்சியர் இல்லை இவர் மார்க்சியர் இல்லை என எல்லோரும் தங்களை அசல்களாகவும் மற்றவர்களை போலியாகவும் காட்டுவதில் முனைப்பு காட்டியதால் தமிழ் மக்களுக்கு மாக்சியம் குறித்த புரிதல் அருகிப் போனது நீங்கள் கொண்டுள்ள அக்கறையைப் போலவே எனக்கும் எதிர்காலம் குறித்தும் வரும் தலைமுறை குறித்தும் அக்கறை உண்டு ஒருவர் பற்றிய முற்கற்பிதங்களை நாங்கள் ஏற்படுத்துவது ஆபத்தானது சிவத்தம்பி குறித்து மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களிடத்தில் தோன்றி வளர்ந்த ஆளுமைகள் குறித்தும் அதனூடாக நகர்ந்த வரலாறு குறித்தும் ஆய்வுகள் அவசியமே ஆனால் தடாலடியான சிறு பந்திகள் அல்ல.
ka.si avargalaip patriya oru nalla alasalaip padikkath thanthamaikku nanri.neengal avarathu mugththai (thamizh & arasiyal) arimugappaduthhiya pin thaan ,thallatha vayathilum thamizhukkum inaththukkum uzhaikkum appadiyoru manitharai nan arinthu konden.
matrapadi katturaiyin ulladankalai avvalavaaga ennal ulvaanga iyalavillai.
maa.ulaganathan,thiruneelakudi,kumbakonam