செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நடந்த போது கருணாநிதியின் மகள் கனிமொழி மூலமாக மலேஷியப் பேராசியர் இராமசாமியை செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கும் சந்திப்பு அதிகாரபூர்வமற்ற முறையில் மலேஷியாவில் நடந்தது. பல்லாயிரம் மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லபப்ட்ட போது மக்கள் கொலைகளை மறுத்து நாடகமாடிய கருணாநிதி மொழிக்காக நடத்தும் மாநாட்டில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அழைப்பு விடுத்தவர்களிடம் தெரிவித்தார் இராமசாமி. இதையே சில பொதுக்கூட்டங்களிலும் வெளிப்படையாகவே பேசினார்..ஏற்கனவே இந்திய அரசின் டில்லி மாநாட்டிற்கான அழைப்பையும் இராமசாமி நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் பேராசிரியர் ராமசாமி செம்மொழி மாநாட்டிற்கு வர இசைவு தெரிவித்தது போலவும். ஆனால் அவரை தமிழகத்திற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி…
நரபலி நாயகன் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டுக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்டவர்ர் பேராசிரியர் இராமசாமி.அவரை செம்மொழி மாநாட்டிற்கு வரவிடக்கூடாது என்று மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்பியிருப்பது கருணாநிதியின் மனநோயையேக் காட்டுகிறது.
இன்றைய தேதியில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களில் – அதுவும் அரசியல்அதிகாரப்பொறுப்பில் அமர்ந்திருக்கும் தமிழர்களில் தமிழின உரிமைக்காக பேசும் ஒரேநபர் பேராசிரியர் இராமசாமி மட்டுமே.
அதிகாரத்தில் இருந்தாலும் பதவிக்கும்,பணத்திற்கும்,புகழுக்கும் அடிமையாக வாழும் தன்மானச்சிங்கம் கருணாநிதி
இன்றைய நிலையில் தந்தை பெரியார் இராமசாமியே செம்மொழி மாநாட்டுக்கு வந்தாலும் தடைபோடத்தயங்க மாட்டார்..