ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் உள்ளார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தங்கியுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீடிக்கப்பட்டது. ஜூலை மாதம் 28-ஆம் தேதிவரை அவருக்கு பரோல் விடுப்பு உள்ள நிலையில் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவருக்கு மருத்துவர்கள் பலவிதமான பரிசோதனைகளைச் செய்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.