இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களான,
வடக்கு – கிழக்கு இணைப்பு,
சட்டம் – ஒழுங்கு விவகாரம்,
அரச நிலங்களை மாகாண சபைகளுக்கு உரித்தாக்குதல்
ஆகிய விடயங்களை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அரச தரப்பு அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 15 ஆவது பேச்சுவார்த்தையின் போது பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பில் அரச தரப்பால் கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து இரு தரப்புக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இந்நிலையில், மீண்டும் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் மாலை சுமார் 3 மணிமுதல் 5 மணிவரை இடம்பெற்றது.
இன்றைய பேச்சு வார்த்தையில் கடந்த வாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தெரிவுக் குழுதொடர்பில் எந்தவொரு விடயத்தையும் அரச தரப்பு முன்வைக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.