ராஜபக்ச குடும்பத்தினருடன் இணைந்து இனப்படுகொலையைத் திட்டமிட்ட சரத் பொன்சேகாவிற்கு சிறைத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தில் உள்ளக முரண்பாடுகள் ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் இன்றைய சூழலில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவுக்கு 30 மாதகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த தண்டனை இன்று முதல் அமுலாகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் கடந்த 17 ஆம் திகதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று நேற்று நாடு திரும்பிய நிலையில் இந்த தீர்ப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆயுத கொள்வனவின் போது அவருடைய மருமகன் தனுன திலனரட்னவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகள் மேற்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.
இதுதான் விதி என்பது.கே.பிக்கு சிம்மாசனமும் சரத்திற்கு சிறவாசமும்.சரத்தின் ஈகோ தான் இதற்கெல்லாம் விதை போட்டது.தனக்கு சலூட் அடித்த கோத்தபாயா என்ற நினைப்பு அவரிடம் போகாததால் வெறூம் அர்ச்சுனனாக மட்டுமே இருந்த சரத்தால் கோத்தபாயா கிருஸ்ணன் எனும் உண்மை புரியாது போய் விட்டது.வெறூமனவே வில்வித்தை காட்டி பிரபாகரன் வெல்லப்படவிலை, கே.பி, கருணா எனும் அஸ்திரங்களீன் தேவையை நன் கு கோத்தா பயன் படுத்திக் கொண்டார்.மதி நுட்பமும்,நம்பிக்கையும் அவரிடம் இருந்ததை ரீபிலேயில் பாருங்கள்.
கோத்தபக்கயனாலோ அல்லது சிங்கள் காடையர் கூட்டத்தாலோ தமிழர் படையை தனித்து நின்று வெற்றிபெற்றிருக்கமுடியாது, இறுதி நேரத்தில் சிங்களகடையர்கூட்டம் தங்களால் இதற்க்குமேல் இழப்பை தாங்கமுடியாதுஎன்று முன்னேற மறுத்தபோதுதான் தமிழின விரோதியான வட இந்திய காடையர்கூட்டத்துடன் இணைந்து கிளஸ்ரர் குன்டுகளை பாவித்து தன்னை ஒரு கொலைகார வெற்றிவீரனாககாட்டியது, காகம் இருக்க பனம் பளம் விழுந்த கதை போல்தான் கே பீ, கருணா போன்ற அடிவருடிகளின் கற்பனைக்கதையும், ஆயுதம் இல்லாத கப்பலை சிங்கள காடையர்களுக்கு தகவல் கொடுத்து கடலில் தாக்கி அழிப்பதற்க்கு உதவினான், கருணா – இந்த தெருப்பொறுக்கிகளால் சிங்கள்வனுக்கு எந்த நன்மையும் கிடையாது.