விசுவமடுவில் ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் அமைத்த வெசாக் வெளிச்சக் கூடுகளை மாடுகள் மோதி விட்;டன என்பதற்காக முல்லைத்தீவில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் உள்ள குமாரசுவாமி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மாடுகள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வெளிச்சக் கூடுகளைத் தட்டிவிட்டன என்பதற்காக அந்த இளைஞர் இராணுவத்தினரால் சுடப்பட்டுள்ளார். சூட்டுக் காயத்துடன் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய அவர் வைத்தியசாலையில் கூட இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை.
அவ்விடத்திற்கு அம்பியூலன்ஸ் வர நீண்ட நேரம் ஆகியுள்ளது. அதன் பின்னர் ஹெலிகொப்டரில் அவ்விளைஞர் அநுராதபுரத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் வெளியே தெரிவிக்கக் கூடாதென இராணுவத்தினரால் அந்த இளைஞரின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளனர்.
Thank God that boy is alive. Things are very tense here too at Batticaloa.. I am very cautious. Let us all pray for that boy.
இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படமாட்டாது.சிங்கள இனத்துக்காக போராடிய ஆமிக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது என்பதில் உறுதியாக உள்ளனர்.