பெல்ஜியம் நாட்டில் இரண்டாவது அணு உலையிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அதனையும் மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதே வகையான விரிசல் ஒன்று அதன் முதலாவது ஆலையில் கடந்த வியாளன் கண்டுபிடிக்கப்பட்டது. திகாஞ்ஜே அணு உலையில் கண்டுபிடிக்கப்பட்ட விரிசல் டோவெல் அணு உலையின் விரிசலுக்கு ஒத்ததாக உள்ளதாக அணு உலையில் உரிமத்தை வாங்கியிருக்கு பிரஞ்சு நாட்டின் ஜீ.டி.எப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Rotterdamsche Droogdok Maatschappij (RDM) என்ற ஐரோப்பாவில் 20 அணு உலையை உருவாக்கிய ஜேர்மனிய நிறுவனமே இந்த இரு அணு உலைகளையும் நிறுவியது. இந்த நிறுவனம் பல வருவருடங்களுக்கு முன்பு பெரும் பணத்தைச் சுருட்டிக்கொண்டு மூடுவிழா நடத்தியுள்ளது.
2011 ஆம் ஆண்டு புக்குஷிமாவில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தைத் தொடர்ந்து ஜேர்மனியில் எட்டு அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன. 2022 ஆம் ஆண்டுக்குள் எஞ்சியிருக்கும் அணு உலைகளையும் மூடிவிடுவதாக ஜேர்மனிய அரசு அறிவித்துள்ளது.
சுவிஸர்லாந்தும் ஸ்பெயினும் புதிய அணு உலைகளை நிறுவுவதற்கான தடைச் சட்டத்தைப் பிறப்பித்துள்ள்ன. இத்தாலியப் பாராளுமன்றம் அந்த நாட்டை அணு மின் உற்பத்தி அற்ற நாடாக மாற்றுவதற்குரிய தீர்மானத்தைக் கடந்த வருடம் நிறைவேற்றியது. கிரேக்கம், அவுஸ்திரேலியா, அஸ்திரியா, இத்தாலி, நோர்வே, டென்மார்க், அயர்லாந்து, போத்துக்கல், மெக்சிக்கோ, நியுசிலாந்து, மலேசியா போன்ற நாடுகள் அணு உலைகள் மனித குலத்திற்கு ஆபத்தானவை என்பதால் அவற்றை எதிர்ப்பதாகவும் மாற்று வழிகளிலான மின் உற்பத்திய உபயோகிப்பதாகவும் முடிவு செய்துள்ளன.
புக்குஷிமா அழிவின் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குள் அணு உலைகளை மூடிவிடுவதாகத் தீர்மானித்த பெல்ஜியம், இரண்டு உலைகளிலும் ஏற்பட்ட விரிசல்களின் பின்னர் அதற்கு முன்பதாகவே மூடிவிடுவதாத் உறுதியளித்துள்ளது.
உலகம் முழுவது இந்த மாற்றங்கள் ஏற்படு அதே வேளை மக்களின் அழிவில் அணு மின் உற்பத்தி பாதுகாப்பானது என இந்திய மேட்டுக்குடிகளும், ஏகாதிபத்தியத்தின் பங்காளர்களும் மக்களுக்குப் பொய் கூறிவருகிறார்கள்.
உலகின் மிகவும் அருவருப்பான, பண வெறிக்காகத் தனது மக்களையே கொல்லும் அரசு இந்திய அரசு என்பதற்கு அணு உலையே நிமிர்ந்து நின்று சாட்சி சொல்லும்.