உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெறவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் மக்கள் கலை இலக்கியக் கழகப் போராட்டக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது.