09.11.2008.
ரஷ்ய நகரம் விளாடி காவ்காஸில் தற்கொலைப் படை கொலையாளி நடத் திய தாக்குதலில் ஒன்பது பேர் இறந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட வர்களும் அதிகாரிகளும் கூறினர்.
விளாடிகாவ்காஸ் ரஷ் யாவில் உள்ள வடக்கு ஒசெட்டியா பகுதியில் உள்ள நகரம். பெண் தற் கொலைப்படை கொலை யாளி நடத்திய தாக்குதல் என்று புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் தற்கொ லைப் படை கொலையாளி என்று கருதப்படும் பெண் ணின் தலை கிடந்தது என்று பிராந்திய தலைமை அதி காரி டைய் முராஸ் மம் சுரோவ் இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறி னார்.
விபத்து பேருந்து நிறுத்தத்தில் மினி பஸ் நின்ற போது நடந்தது. விபத்து மினி பஸ்சுக்குள் நடக்க வில்லை. மினி பஸ்சுக்கு வெளியே நடந்தது. வெடி குண்டுக்குள் நட்டுகளும் போல்ட்டுகளும் இருந்தன என்று இன்டர்பாக்ஸ் நிறுவனம் கூறியது.
சம்பவ இடம் முழுவ தும் சதைப் பிண்டங்கள் தெறித்துக் கிடந்ததாக ஏஎப்பி செய்தியாளர் கூறி னார்.
எப்பாடுபட்டேனும் குற்றம் புரிந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டு மென்று ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் உத்தரவிட் டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில் ஆறு பேர் இறந்தனர். மூவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழி யில் இறந்தனர். இந்த தாக்கு தலில் பலர் தீக்காயங்கள் அடைந்துள்ளனர்.