26.12.2008.
பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அவ்வாறு மீறி சேர்த்தால் பள்ளிகள் குண்டு வைத்து தகர்க்கப் படும் என்று பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தலிபான் தீவிர வாதிகள் மிரட்டியுள்ளனர்.
ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் 1,580 பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் உயர்தரப்பள்ளி கள் என்ற பட்டியலில் இப் பகுதியிலிருந்து பல்வேறு பள்ளிகள் இடம் பெற்றுள் ளன. இப்பகுதிகளில் தலி பான்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். பெண் குழந் தைகளை அனுமதிக்கும் பள்ளிகளை தகர்த்து வரு கின்றனர். இதுவரை சுமார் 12 பள்ளிக்கூடங்களை தலி பான்கள் நிர்மூலமாக்கியுள் ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
இதுகுறித்து தலிபான் கள் நடத்தும் எப்.எம். ரேடியோவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஜனவரி 15 வரை நாங்கள் காலக்கெடு விதித்துள்ளோம். அதற்குள் பள்ளிகளுக்கு பெண் குழந் தைகளை அனுப்புவதை நிறுத்தாவிட்டால் அந்தப் பள்ளிகள் தகர்த்தெறி யப் படும். அதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் பெண் குழந்தை களை சேர்ப்பது நிறுத்தப் பட வேண்டும். பள்ளிக ளுக்கு அனுப்பப்படும் குழந் தைகளுக்கும், அனுப்பும் பெற்றோர்களும் தாக்கப் படுவார்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
தலிபான்களின் மிரட் டல்களுக்கு வடமேற்கு மாகாண அரசே பணிந்து போகும் நிலை உருவாகி யுள்ளது. பள்ளிகளை குண் டுகள் வைத்து தகர்க்க வேண் டாம் என்ற வேண்டுகோளை மட்டுமே முன்வைத்து வருகிறது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படவில்லை.