12.03.2009.
வத்திக்கான்: மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டு பெண்களின் விடுதலையில், கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமையை விட சலவை இயந்திரங்கள்தான் அதிக பங்காற்றியுள்ளதாக வத்திக்கான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வத்திக்கான் பத்திரிகையில் வெளியான சலவை இயந்திரமும் பெண்களின் விடுதலையும் என்ற கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
அக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மேற்கத்திய நாடுகளின் 20 ஆம் நூற்றாண்டு பெண்களின் விடுதலைக்கு எது அதிகமாக உதவியது என்ற விவாதத்தில் மாத்திரைகள், கருச்சிதைவிற்கான உரிமை, வீட்டிற்கு வெளியே பெண்கள் பணியாற்ற அனுமதி என்ற பல்வேறு கருத்துக்களுடன் சலவை இயந்திரம் என்ற கருத்தையும் பெண்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் துணியுடன் சலவைத்தூளைப்போட்டு சகல ஏற்பாடுகளுடனும் சலவை இயந்திரத்தை இயக்கினால் சலவை செய்யும் வேலை நிறைவு பெறும்.
அத்துடன் சலவை இயந்திரத்தில் துணிகளை சலவை செய்யும் போது வேறு வேலைகளும் செய்யலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.