விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து 2010ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி மத்திய அரசும், மே 17ஆம் தேதி தமிழக அரசும் உத்தரவிட்டன.
இந்த உத்தரவை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் எலிபி தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ”இந்த வழக்கில் அரசு தனது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
விடுதலைப் புலி வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார் நீதிபதிகள் தள்ளிவைத்தனர் புலிகள் புலிகள்தான் “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் நிராகரித்து சிங்கள அரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச தீர்வான அந்த ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்தது தவறு என்று இப்போதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா
தமிழர்களுக்கு உதவிக்கு வந்த இந்தியாவை, அன்று தமிழர்களின் பொது எதிரியான சிங்களவர்களுடன் சேர்ந்து விரட்டி அடித்தீர்களே இன்று அதே இந்தியா உதவ வேண்டும் என்று தங்களின் விசுவாசிகள் மூலம் கோருவது வெட்கப்பட வேண்டிய விடயமா? இல்லையா