புஷ் வருகைக்கு தென்கொரியாவில் எதிர்ப்பு! பல்லாயிரம் பேர் பங்கேற்பு!!

07.08.2008.
தென்கொரியாவில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் வருகையின் போது பல்லா யிரக்கணக்கான எதிர்ப்பா ளர்கள் போராட்டம் நடத் தினர். இந்தப் போராட்டக் காரர்களை கலையச் செய்ய போலீசார் தண்ணீர்க் குண் டுகளை வீசினர்.

அமெரிக்க ஜனாதிபதி புஷ் 3 நாடுகள் ஆசிய பயண மாக தென்கொரிய தலை நகர் சியோலுக்கு வந்தார். அவரது வருகையின் போது இரண்டு விதமான வரவேற்பு அவருக்கு கிடைத்தது. அவரை எதிர்த்து ஒருபுறம் பல்லாயிரம் பேர் போராட் டம் நடத்தினர். ஆனால், சியோல் சிட்டி அரங்கில் 30 ஆயிரம் பேர் கூடி நின்று அமெரிக்க கொடியுடனும், புஷ் வரவேற்பு பேனர்களு டனும், வரவேற்றதாக தேசிய போலீஸ் ஏஜென்சி தெரிவித்தது.

புஷ் வருகையை யொட்டி 18 ஆயிரத்து 300 போலீசார் உஷார் நிலையில் இருந்த னர். போப்ப நாய்களும் கண்காணித்தபடி இருந்தன.

செவ்வாய்க்கிழமையன்று மாலை 20 ஆயிரம் புஷ் எதிர்ப்பாளர்கள் கூடி கோஷம் போட்டனர். புதனன்று தலைநகர் சியோலில் ஜனா திபதி லீ மியுங்கை புஷ் சந்தித்தார். தென்கொரிய பய ணத்தை தொடர்ந்து 8 ம் தேதி பெய்ஜிங்கில் துவங் கும் ஒலிம்பிக் போட்டிக் காக புஷ் சீனா செல்கிறார்.

ஆசியப் பயணத்தின் போது புஷ் கூறுகையில், சீனா, தனது மக்கள் கருத் துகளை சுதந்திரமாக கூற அனுமதிக்க வேண்டும் என்றார்.