புலிசார் இணையத் தளங்கள் குறித்து இணையத் தளங்கள் குறித்து நான் முள்ளிவாய்க்கால் அதற்கு முதல் என இரண்டாக இனங்காண்கிறேன். இவற்றில் முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு முதல் எப்போது இணையவழி செயற்பாட்டில் எமது பிரச்சினைகள் சர்வதேச மயப்பட்டதோ அன்றே இதனை முறியடிக்கும் செயற்பாட்டை புலிகளின் விரோத சக்திகள் முன்னெடுக்கத் தொடங்கி விட்டனர்.
அது எவ்வாறு? நடந்தது என்பதை பார்ப்போம். உள்ளுரிலும், சர்வதேச நாடுகளிலும் புலிவேசம் போட்டுக்கொண்டு நரிகளும் ஈழப் போராட்ட அல்லது புலிகளின் ஆதரவாளர்களாக மூக்கை நுளைக்கின்றனர். (இதனை வெறும் கதையாடல் என்று கூறுபவர்களுக்கு மின்னல் ஸ்ரீரங்கா எவ்வாறு புலிகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் கையாண்டார், வெறும் சில்லறை பபூன் ஸ்ரீரங்காவே புலிகளின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கு இடையில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து அவதானிக்க கூடியவகையிலே இருக்க முடியுமானால் எத்தனை பேர் பூந்து நோண்டியிருப்பார்கள்)?
ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, புலிகளுக்கு எதிரானவர்களுக்கு எதிராக, புலிகளின் அனைத்து கூட்டங்களிலும் முதல் ஆளாக நின்று செயல்படுதல், பிரபாகரனையும் புலிக்கொடியையும் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தல் இவைதான் ஒருவரை புலி ஆதரவாளராகவோ அல்லது புலி உறுப்பினராகவோ இருக்கப் போதுமான தகுதிகள். குறிப்பாக புலிகளை விமர்சிப்பவர்களை புலிகள் பச்சை மட்டை கொண்டு அடிப்பது வழக்கம். புலிகளுக்கு வால் பிடிப்பவர்களை புலிகள் தமது ஆதரவாளர்களாக பார்ப்பதுண்டு இந்த பலவீனமே பொதுவாக புலனாய்வாளர்கள் போராளி அமைப்பிற்குள் புகுவதற்கு சுலபமான வழிமுறையாக இருந்தது.
இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கலுக்கு முதல் அல்லது முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்த காலப் பகுதியில் புலிகளின் இணையங்கள் பல புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு வெளியில் சென்று கொண்டிருப்பதை காணக் கூடியதாகவே இருந்தது. யாவரும் புலிகளின் இழப்பு ராணுவத்தின் இழப்பு இவற்றை கணக்கு பார்பதிலுமே எமது கவனம் செலுத்தப் பட்ட நேரத்தில் தமிழ் மக்கள் உட்பட புலிகளும் புலிசார் இணையங்களால் எமை வேறு நிகழ்ச்சித் திட்டங்களுக்குள் இழுத்துச் சென்றனவா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் சரணடைவின் பின் வன்னியில் இருந்து இயக்கப்பட்ட இணையங்கள் பல ராணுவத்திடம் சரணடைந்த புலிகளால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் பின் புலத்தில் இயக்கப் படுகின்றாதா? என்ற ஐயம் அவ் இணையங்களை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் வருகின்றது.
வடக்கு கிழக்கில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை எனக் கூறுவதும், மற்றும் அரசை மற்றும் EPDP போன்ற அரச சார்பு அமைப்புகளையும் ஒப்புக்கு விமர்சிக்கும் போக்கையும் கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பார்வையில் கேட்பதாயின் புலிகளாலேயே சாதிக்க முடியாதவற்றை எப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிக்க முடியும் உண்மையில் புலிசார் இணையங்கள் இதனை புரிந்தது கொண்டு புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசின் இன அழிப்பை மிக நேர்த்தியான நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் அம்பலப் படுத்தி போராடுவதன் மூலம் இலங்கை அரசிற்கு சர்வதேச நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும், ஆனால் இவ் இணையங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தையே முன்னெடுப்பது போல் தெரிகின்றது.
இதிலிருந்து நாம் எண்ணக் கூடியது எல்லாம் எமைச்சூழ நாம் இலங்கை புலனாய்வுத் துறையால் இலங்கை கொள்கை வகுப்பாளர்களால் நன்கு திட்டமிட்ட முறையில் அதல பாதாலத்திற்குள் இழுத்துச் செல்லப் படுகின்றோம் என்பதுதான்.
இதில் புலிகள் (முன்னைய/பின்னைய) மாற்று தமிழ் அமைப்புகள் இன்னும் தமிழ் மக்களில் பலர் தெரிந்தோ தெரியாமலோ இழுத்துச் செல்லப் படுகின்றோம். ஆக விடிவு எமக்கு கிட்டத்தில் இல்லை என்பதே உண்மை.
தமிழ் மக்களிடம் சேர்க்கப்பட்ட போர் நிதி அவலத்தில் வாழும் எம்மக்களுக்கு போய்ச்சேரும் என்றோ அல்லது இன அடக்குமுறைக்கு எதிராக கட்டி எழுப்பப்படும் போராட்டத்திற்க்கு போய்ச்சேரும் என்று பார்த்துக் கொண்டிருப்போமானால் யாரோ சொன்னது போன்று எருதின் விரை எப்போ விழும் என எருதின் பின்னால் அலையும் நரியின் நிலை தான் நமக்கு.
மற்றும் தன்னிச்சையாக புலிகள் தவிர்ந்து யாராவது எம்மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுபதற்கு மேல் எழுவார்களானால் அவர்களை குழப்புவதற்கு புலிகளின் இணையங்கள் போன்று வேடமிட்டிருக்கும் இணையங்களும், இலங்கை படை புலனாய்வாளர்களால் இயக்கப்படும் இணையங்களும், மற்றும் புலிக்கொடியும் தலைவரின் புகைப் படமும் தமிழீழ போராட்டத்திற்கு போதுமானது என நம்பும் குறைவளர்ச்சி உடையோரும், புலிக்கொடியையும் தலைவர் பிரபாகரனின் படத்தை மகிந்த கம்பனியும் அதன் பரிவாரங்களும் பிடித்தால் அவர்களையும் இணைத்தே தமிழ் ஈழம் காண்போம் முட்டாள் தனமாக செயல் படவும் அல்லது அப்படித்தான் செயல்பட முனையும் பச்சோந்திகளுமே போதுமானவர்கள். அதுதானே இங்கு இப்போ நடக்கின்றது.
எங்கும் புலிகள் எதிலும் புலிகள் என்ற புலிகளின் தந்திரம் பல புல்லுருவிகளை, இலங்கை புலனாய்வு ஆளர்களை புலிகளின் பாசறையில் இனம் பிரிக்க முடியாத வகையில் ஒட்டவைத்துள்ளது அதனை வேறு பிரித்து அறிதல் என்பது சிரமம் ஆனதே.
ராகவன்,
வெறும் ஊகங்களை எழுத்தாக்வது தவறு.
பிரபாவே இதற்குமேல் புலிச்சாயத்தை தன் இனத்தின் மேல் படியவிடாது கரைத்து சென்றபின் இன்னும் ஏன் நாம் அங்கேயே நிற்கிறோம்? என்பது புரியவில்லை. இங்கு முற்போக்குவாதம் பேசுபவர்களும் பிற்போக்குத்தனமாக நடந்ததையே விமர்சித்துக்கொண்டிருகிறார்கள். சமூகம் என்பது தனித்து நாவலவன், அஜித், ராகவன் போல் சிந்தனை “வயப்படும்” செறிவுடைய ஒரு ௬ட்டம் அல்ல இதை நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியும் என்பதும்மில்லை ஆக தொடர்ந்தேச்சையாக பிரபாவையோ புலிகளையோ விமர்சிப்பதன் மூலம் எப்படி இந்த தமிழ் சமூகத்தை இனத்தை ஒழுங்கு படுத்த போகுறீர்கள்? ஏனெனில் இன்னும் புலிகளை விசுவாசிக்கும் மக்கள் இருக்கின்ற போது, இல்லை தவறுகளில் இருந்து பாடம் கற்கிறோம் கற்பிக்கிறோம் என்பது, சாமானியர்களை எவ்வாறு சென்று அடைகிறது? அவர்களது புரிதல் தான் என்ன? மறுவளமாக புலிகள் எப்படி துரோகி நாமம் சூட்டினார்களோ அதையே நீங்களும்; புலிகள் படுபாதக செயல்களை செய்தார்கள் என்பதை மட்டும் அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள். சமூக ஒருங்கிணைவே மிகப்பெரிய தேவையாக இருக்கின்ற போது, தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சனகங்ளை முன்வைப்பது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது? நடந்ததை பேசாது விடுதல் என்பதல்ல முதலில் அதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்.
நீங்கள் சொ hல்வது சத்தியமாக உண்மை.தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது மகிந்த அரசுக்கு நல்லெண்ணத்தை காட்டுகிறதாம். அப்ப இதற்கு முதல் கெட்ட எண்ணத்கைாட்டியதா யார் உண்மையானவா;கள்என்பது எமக்கு தொpயவில்லை.எமக்கும ; உமது பலம்பெயா; சகோதர்களுக்கும் எதிர்கால் இலக்கு தொpயவில்லை.
சிரமம் என்பதை நினைப்பதில் இருந்து தெளிவை ஏற்படுத்த வேண்டியது தேவை ஆகின்றது. தமிழ் மக்களின் விடுதலைகான நியாயத்திற்கு மக்களின் மனதை வெல்லப்பட வேண்டும் . இன்றைய நிலையில்தான் எதர்காலத்திற்கான பதில் உள்ளது. சில சந்தேகங்களே தெளிவைத்தரும்.
கட்டுரையாளரின் வரிகளில் சில சில துளிகள் உண்மைதான். அதனால்தான் உண்மையான புலி தன் மௌனத்தை இன்னும் கலைக்கவில்லை. அவ் மௌனம் வேண்டியதை அடையாளம் காண்பதற்கான நேரமும் கூட. புலி வரும் பொழிவுடன்.
என்னை பொறுத்தவரை புலிகளை விமர்சிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் நான் இதனை எழுதவில்லை, சில விமர்சனங்களை முன் வைக்கும் போது மக்கள் தெளிவடைவார்கள் என்பதும் நாம் இனிமேலும் தவறுகள் எது சரியானவை எது என்று பகுத்து ஆராயும் பண்பு மற்றும் எச்சரிக்கை உணர்வு ஏற்ப்படும் என்பதும் என்னில் ஏற்படும் ஆதங்கமாகும் பரா சொல்வது போன்று வெறும் ஊகங்கள் என்ற அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டாம், சரி பிழைகளை பகுத்து ஆராயுங்கள் என்பது எனது வேண்டுகோள். சில சந்தேகங்களே தெளிவைத்தரும் என்ற ஜீவாவின் கருத்து பொய்மையானது அல்ல.
கிறுக்கன் எனது பின்னூட்டங்கள் அதில் வந்த விடயங்கள் பலவற்றில், நீங்கள் சொல்லிய விடயங்கள் பலவற்றை நானும் வலியுறுத்தியிருக்கிறேன். இருப்பினும் கிறுக்கன் அழுத்திச் சொன்ன விடயங்கள் அனைத்திலும் எனக்கும் வலுவான உடன்பாடு உண்டு. கிறுக்கன் நீங்கள் குறிப்பிடும் “சமூக ஒருங்கிணைவே மிகப்பெரிய தேவையாக இருக்கின்ற போது, தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சனகங்ளை முன்வைப்பது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது? நடந்ததை பேசாது விடுதல் என்பதல்ல முதலில் அதற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்.” இது குறித்து ஒரு ஆரோக்கியமான பார்வை ஒன்றை செலுத்தி ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் வழிமுறையுடன் கூடிய கருத்துக்களை முன்வையுங்கள்.
புலி பளையமொந்தையில் வார்க்கப்பட்டு வராமல் இருந்தால் மாத்திரம் அரிச்சந்திரன் உங்கள் வாக்கு உண்மையில் மெய்யாகும். இல்லாது பழைய மோந்தையானால் …………. எனக்கு மாத்திரம் அல்ல முழு தமிழர்களுக்கும் புளிச்ச …….. வரும்.
தமிழகத்தில் நக்கீரன் பத்திரிக்கை நல்ல உதாரணம்… கருணாநிதியின் எண்ணத்தை அதாவது ஈழ ஆதரவாளர்களை முனை மழுங்க வைப்பது.. என்பதில், , ஜெகத்கஸ்பர் என்ற துரோகியை பரபரப்பாக எழுதவைத்து.. ஈழ ஆதரவாளர்களை தன் செய்தியின்பால் ஈர்த்து…. தனது வியாபாரத்தை பெருக்கிக் கொண்ட… அதே வேளையில் கருணாநிதியின் துரோகத்தை தோலிரிப்பதை தவிர்த்து… பிரபாகரன் மரணம் என்ற செய்தியால் தமிழகத்தில்.. எழுச்சி ஏற்படாமல் செய்த.. நக்கீரனின் அயோக்கியத்தன,, சாணக்கியத்தன… துரோகம்… கவனிக்கப்படாமல் போனது.. இதே வேலையை இந்திய உளவுத்துறை இலங்கை உளவுத்துறையோடு இணைந்து.. உலகெங்கும் பரவியுள்ள ஈழ தமிழர்களிடம் செய்துகொண்டுள்ளதோ என் சந்தேகிக்கும் படியாக பல விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன….
என்னை பொறுத்தவரை குறுந்தேசியவாதத்திற்கும், தனிநபர்பயங்கரவாதத்திற்கும் எதிரான அதன் அழிவு அரசியலையும், அது தமிழ்மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்ற பொதுமனநிலைக்கும் எதிரான கருத்துபொதுவெளியை ஒருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும். வெறுமனே தமிழ்மக்களின் ஒருங்கிணைவை கோருவது அதே பழைய குறுந்தேசிய புலிகளின் அரசியலாகவே எனக்குப்படுகின்றது. நாம் முற்போக்கான தேசியவாதத்தை முன்னெடுக்கவேண்டுமாகில் முதலில் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவேண்டும். தமிழ்சமூகத்தில் உள்ள பல்வேறுசமூகக்கூறுகளுக்கும் தங்கள் தேவையை,உரிமையை, இருப்பை உறுதிசெய்வதற்கான குரலை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். நாம் நவீன தேசிய இனமாக ஒடுக்குமுறைக்கெதிராக பன்முகத்தன்மையை உறுதிப்படுத்தியவாறு ஒன்றுபடலாம். தனிநபர் பயங்கரவாத அரசியல் தோல்வியின்பின் சரணாகதிஅரசியல் செய்ததையும், காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டதனையும், வரலாறு ஏற்கனவே கண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் தனிநபர்பயங்கரவாததிற்கு எதிர் அரசியலை மக்களிடம் கொண்டுசென்று க்ருத்துபொதுவெளியை உருவாக்கியபின்னரே புரட்சி சாத்தியமாயிற்று. உதாரணத்திற்கு ரஸ்யாவில் தனிநபர்பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தியலை பிளக்நேவ் சுமார் இருபதுவருடங்களாக முன்னெடுத்தார். அதன்பிறகே ரஸ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாவது சாத்தியமாயிற்று. புலனாய்வு அரசியல் என்னும் பூச்சாண்டிகள் வேண்டாம். பேரினவாதத்தை பற்றிமட்டுமே பேசி தமிழினஒருங்கிணைவை கோருவது இனவாத அரசியல் என்பது என் துணிபு.
தங்கள் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன். இலங்கை அரச படைகளின் தாக்குதல்களிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுமாறு நாம் கேட்டிருந்தால் சல வேளைகளில் உலகம் உதவியிருக்குமோ என்ற ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு. தலைவரின் படத்தையும்இ கொடியையும் கொண்டு வந்து எமக்கு உதவ வந்த மேலைநாட்டினரைத் தூரவிலக்கிவர்கள் எம்மவரா இல்லை எதிரிகளா என்பது விவாதத்துக்குரியது. உணர்ச்சிவசப்பட்ட சிலரை உள்நோக்கம் கொண்ட சிலர் பயன்படுத்தியிருந்தனரா என்பது ஆய்வுக்குரியது.
பூனை இல்லாத வீட்டில் எலிகள் சன்னதம் என்பது போல இப்போது புலிகள் இல்லை என்ற நினைப்பில் முற்போக்குவாதிகள் மனம் போன போக்கில் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தமிழத் தேசியத்தின் அசைக்க முடியாத அடையாள சின்னங்களே தலைவர் பிரபாகரனும் புலிக் கொடியும். தலைவரின் படத்தையும்இ கொடியையும் கொண்டு வந்து எமக்கு உதவ வந்த மேலைநாட்டினரைத் தூரவிலக்கினார்கள் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. இலண்டன் ஒக்ஸ்போட்டில் பத்தாயிரம் மக்கள் இதே புலிக்கொடியின் கீழ்த்தான் திரண்டார்கள் என்பது நினைவிருக்கட்டும். அமெரிக்காவுக்கு ஒரு யோர்ஜ் வோஷிங்டன்> பாகிஸ்தானுக்கு ஒரு அலி ஜின்னா> செஞ்சீனாவுக்கு ஒரு மாவோ> தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன். இது தான் வரலாறு;.
இப்படியே போனால், ஜேர்மனிக்கு ஒரு ஹிட்லர், இத்தாலிக்கு ஒரு முசோலினி, ஆப்கானுக்கு ஒரு ஒசாமா, …………. ஐயா நக்கீரா, யார் யாராகவும் இருக்கட்டும், இப்போது இலங்கை அரசின் கோரப்பசிக்கு இரையாகுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு என்னையை சொல்றீங்க? பிரபாகரன் படத்தோட மகிந்த வீட்டு வாசல்லையா நிக்கச் சொல்லிறீங்க? /
/பூனை இல்லாத வீட்டில் எலிகள் சன்னதம் என்பது போல இப்போது புலிகள் இல்லை என்ற நினைப்பில் முற்போக்குவாதிகள் மனம் போன போக்கில் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்// இப்படி சண்டித்தனம் காட்டிக்கொண்டே இருங்கோ….. சீச்சீசீ
வாழ்த்துக்கள்! இன்று அதை இல்லாததுபோல் சிலர் காட்ட முனைந்தாலும் வரலாறு அழிந்து போகாது,
“அமெரிக்காவுக்கு ஒரு யோர்ஜ் வோஷிங்டன்> பாகிஸ்தானுக்கு ஒரு அலி ஜின்னா> செஞ்சீனாவுக்கு ஒரு மாவோ> தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன். இது தான் வரலாறு;.”
அமெரிக்கா> பாக்கிஸ்தான்> செஞ்சீனா உருவானது தெரியும். தமிழீழம் எப்போது பிறந்தது?
கனவு காணும் உரிமையை கூட மறுப்பது அந்த கனவில் அமிழ்ந்து மகிழ்திருப்பது அதை இப்படி புட்டுவைத்து வைத்து விமர்சிப்பது ஒரு ஜனநாயக சுகந்திரத்தை மறுப்பதாவும் எனக்கூட இந்த கோந்துகள் சொல்லக்கூடும். …… அதற்கு முன்னுதாரணமாகத்தானே
இப்பொழுதுதே நாடோடித் தமிழீழத்தை உலவவிட்டிருக்கிறார்கள். இதை இன்று நாங்கள் செய்கிறோம்.நாளை எமது பிள்ளைகள் செய்வார்கள். அதன்பிறகு பேரப்பிள்ளைகள் இந்த இலட்சியத்தை கொண்டு செல்வார்கள் என்று வெள்ளைத்தாடிக்கார சீனக்கிழவன் சொன்னது போல தத்துவத்தை உதிர்ப்பார்கள். இப்படிப் பட்ட ஆசைகளை எல்லாம் நிராயுதஆசையாக்கி விடாதீர்கள். கனவுகாண விடுங்கள்.
பின்னூட்டம் விட சரித்திரம் படித்திருக்க வேண்டுமென்று யார் சொன்னது? இதற்கு வக்காலத்து வாங்க இன்னொருவரின் புலம்பல் வேறு. சாடிக்கு மூடி! ஓடி ஓடி உழைக்கிறார், யாருக்காக?
உடைத்த கச்சான்கோது பின்னோட்டத்தால் யாருக்கு என்ன சுகம்? பரந்தபட்ட உழைப்பாளி மக்களுக்கு சுகமா? இல்லை. தமிழ் என்கிற இனத்திற்கு தான் சுகமா? சிலவேளைக்கு நுளம்புக்கு புகைப்பதற்கு பயன் படலாம். அதுவும் ஒரு இரவு நித்திரையுடன் “அவுட்”.
………..”தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன். இது தான் வரலாறு;.”
அவர் ஏன் மக்களுக்கு தெரியாமல் சரணடைந்தார் என்ற கேள்வி குறி தான் இன்றைய வரலாறு.
கணேஷ் அவர் சரணடைந்தார்
என்று யார் ஐயா உங்களுக்கு சொன்னது
சங்கத்தமிழன் தமிழன்
மாப்பிள்ளை பாஸ் போர்ட் ,புலி அடையாள அட்டை போன்றவற்றுடன் சரணடைந்தார்.இது யாரையோ நம்பி ஏமாந்த ஒரு துயர நாடகம் .உங்கள் அறிவுக்கேற்ப நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.