இதுவரை புலிகள் மீண்டு தாக்குதல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் கூறிவந்த இலங்கை அரசு இப்போது அவ்வாறான சாத்தியங்கள் கிடையாது எனத் தெரிவித்துள்ளது. முழு வீச்சில் ஆயுதக் குழுவாக மீளவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தலையெடுக்க முடியாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே உள்நாட்டில் இவ்வாறான போராட்டங்கள் வெடிக்கக் கூடுமென இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஆயுத போராட்டமொன்றை தொடர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போன அழிக்கப்ப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.









தமிழ்மக்கள் தாங்களாகவே மீளவும் ஆயுதக் குழுவாக இலங்கையில் செயற்பட முன்வரமாட்டார்கள் என்பது தெளிவானது.
தமிழ்மக்களை ஆயுதக் குழுவாக மாற்றிக்காட்டி உலகை ஏமாற்றுவதற்கு, இலங்கை அரசு முயற்சிக்கும் என்பதும் தெளிவானது.