புலிகள் மீதான தடை மே 14 ஆம் திகதி மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. சட்டவிரோதநடவடிக்கைகள் தடைச்சட்டத்தின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையானது பெறுமதி வாய்ந்ததா என்பதை ஆராய்வதற்காக தனியொருவரைக் கொண்ட நீதிமன்றத்தை இந்திய மத்திய அரசு உருவாக்கியிருந்தது. புதுடில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த நீதிமன்றத்தின் தலைவராக உள்ளார்.
இந்தத் தருணத்தில் தடையை அகற்றுவதானது இந்த மாதிரியான வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பானது இந்தியாவில் முழுமையாக இயங்குவதற்கு இடமளிப்பதாக அமையுமென்றும் அத்துடன், இந்த அமைப்புக்கு பாரியளவு உளரீதியான உற்சாகத்தைக் கொடுக்கும் எனவும் தமிழ்நாடு அரசாங்கம் கூறியுள்ளது. தமிழக மாநில அரசு சார்பாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் ஆஜராகியிருந்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,புலிகள் மீதான தடையை நீக்குமாறு நீதிமன்றத்துக்கு மனுச் செய்திருந்தார். சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினரொருவர் அல்லது அலுவலர் மட்டுமே தடைக்கு சவால் விடுத்து மனுச்செய்ய முடியுமென நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பிரகாரம் விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டுவிட்டதென்று வைகோ கூறியுள்ளார். விடுதலைப்புலிகளால் நீதிமன்றத்தின் முன்னிலையில் தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியாதெனவும் ஏனெனில் அந்த அமைப்பு உத்தியோகத்தர்கள் எவரையும் கொண்டிருக்கவில்லையெனவும் இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளில் ம.தி.மு.க.வும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தடை செய்யப்படுவதற்கு இதுவே காரணமென தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் வைகோ கூறியுள்ளார். ஆதலால் தான் தமிழர்களின் சார்பாக பிரதிநிதித்துவத்தை மேற்கொள்வதற்கு உரிமை பெற்றவர் என்று அவர் கூறியுள்ளார். தடையை அமுல்படுத்துவதற்கு பெறுமதியான எந்தவொரு காரணமும் இல்லையென்று வைகோ தெரிவித்தார்.இந்தத் தடையின் அடிப்படையில் இலங்கையிலிருந்து வருகைதரும் அப்பாவி பையன்களும் பெண் பிள்ளைகளும் புலிகளின் ஆதரவாளர்களென வகைப்படுத்தப்பட்டுவிடுவார்கள் எனவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் தடையை வைத்திருப்பதற்கு எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லையெனவும் வைகோ வாதாடினார்.
எவ்வாறாயினும் சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை வைகோவால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாதென்று சட்டத்தரணி தனஞ்சயன் கூறினார். அவர் பாதிக்கப்பட்ட தரப்பினரல்ல என்றும் அரச சட்டவாதியான தனஞ்சயன் தெரிவித்தார். வைகோ தனது வாதங்களை சட்டத்தரணி ஊடாக முன்வைக்க முடியுமென நீதிபதி கூறினார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு அரசாங்கம் விடுதலைப்புலிகள் அமைப்பானது மத்திய,மாநில அரசாங்கங்களுக்கும் தலைவர்களுக்கும் எதிரானதென்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி,மகள் பிரியங்கா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்,தமிழக முதலமைச்சர் கருணாநிதி,தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,வெளிவிவகார செயலாளர் ஆகியோருக்கு எதிரானதாக இருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவர்கள் (அனுதாபிகள்) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்போதும் உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஐந்தாவது ஈழப்போருக்கு அவர் தலைமைதாங்குவார் என அவர்கள் நம்புகின்றனர். தனித் தமிழீழத்தை வென்றெடுக்க ஐந்தாவது ஈழப்போர் இடம்பெறுமென அவர்கள் நம்புகின்றனர். இது நாட்டின் ஐக்கியத்தையும் சுயாதிபத்தியத்தையும் இறைமையையும் பாதிக்கும்.
புலிகளுக்குச் சார்பான,தமிழின மேலாதிக்கவாத சக்திகள் புலிகளுக்கு ஆதரவை வழங்குகின்றன.பொதுக்கூட்டங்கள்,ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துவதன் மூலமும் புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் உரைகளை நிகழ்த்துவதன் மூலமும் இந்த புலிகள் சார்பு சக்திகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது இறைமைக்கும் பாதுகாப்புக்கும் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கும் எதிரானவையாகும். அத்துடன், இந்திய மக்களின் பல்வேறு தரப்பினர் மத்தியில் அமைதியின்மைக்கு இது சவாலாக அமையும்.
தடையை மேலும் நீடிக்காவிடில் 1992 இலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்படும் தடை அமுல்செய்யப்பட்ட நோக்கமானது நிறைவேற்றப்படாமல் போவதுடன் நீடிக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையும் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்று தமிழக அரசாங்கம் கூறியுள்ளது.
ஒரு புறம் பிற்போக்கு நலன் கொண்ட தமிழ்த் தேசிய வாதிகள் இந்திய அரசிற்கு சவாலாக உள்ள அதே வேளையில் இவர்களின் எதிர்ப்புணர்வு நெறிப்படுத்தப்படுமானால் தெற்காசிய போராட்ட சக்திகளின் இணைவிற்கு வழிவகுக்கும் என்பதில் இந்திய இலங்கை அரசுகள் உறுதியாக உள்ளன. இவர்கள் மத்தியிலான பிளவுகளை உருவாக்க இந்திய இலங்கை அரசுகள் புலம் பெயர்நாடுகள் ஈறாகப் பல தளங்களில் செயற்படுகின்றன. ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் தமிழக ஊடகவியலாளர்கள் மீதான திட்டமிட்ட அவதூறுகள் இலங்கை இந்திய அரசநிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே என பல தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் : தரன்
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக என் தலைவா,தமிழ் மக்களீன் தைத் திருநாளே,என்னை உன் தமிழால் ஆளூம் பரம் பொருளே வணங்குகிறேன்.
சித்தமெல்லாம் கலங்கி நுரை வழிய – தமிழ்மாறன்
போதையில் உளறுகிறார் .இறைவா
தென்னாட்டில் கொமன்வெலத் கேம்ஸ் தமிழ்நாட்டில் நிகழ்ந்து இருந்தால் இப்படி ஒரு அவமானம் இந்தியாவுக்கு வந்திருக்காதுகலைஜரை தெரிந்து கொள்ளூங்கள் யோகன்.
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்கா இந்த தடை