விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்திருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளதக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலிகள் மீதான தடை தொடர்பான மனு ஒன்றை இந்திய உள்நாட்டமைச்சர் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் மத்தியில் போதுமான சாதகத்தன்மை ஏற்படாததைத் தொடர்ந்தே புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பதாக நீதிவான் விக்ரம்ஜீத் சென் தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை செய்துள்ளன.1991ஆம் ஆண்டு ராஜீவ காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.