Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்

இனியொரு... by இனியொரு...
10/17/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

ltteதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை முன்வைக்காது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை தவறானது என்றும் இது நடைமுறை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அத்தீர்ப்பு தெரிவிக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை ஆராயாமல் ஏனைய நாடுகளின் முடிவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முடிவில் சட்டச்சிக்கல்கள் உள்ளதால் மட்டுமே இத்தடை நீக்கத்தை ஐரோப்பிய நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வெறுமனே சட்டம் சார்ந்த பிரச்சனையாகவே இம் முடிவை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புலிகள் மீதான் இத் தடை ஊடக மற்றும் இன்டர்நெட் தகவல்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐரோப்பிய நீதி மன்றம் மேலும் தெரிவித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடைவிதிக்கப்பட வேண்டிய அமைப்பா இல்லையா என்பதை முன்வைக்கும் பணி நீதிமன்றத்தைச் சார்ந்ததல்ல.

ஆக, மூன்று மாத அவகாசத்தினுள் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைவிதிப்பதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அதுவரை தடை செல்லுபடியற்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூன்று மாத காலம் வரை தடை செல்லுபடியற்றதாகும். அதன் பின்னர் தடை செய்வதற்குரிய புதிய காரணங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்தால் தடை நீடிக்கும்.

புலிகள் அமைப்பு மட்டுமல்ல ஒரு அரசியல் இயக்கத்தைத் தடைசெய்வதென்பது, அவ்வியக்கத்தின் போராட்டத்திற்கான அரசியல் காரணங்களையும் தடைசெய்வதாகும். இந்த வகையில் புலிகளின் மீதான தடை அரசியல் உள் நோக்கங்களை கொண்டதும் நியாயமற்றதுமாகும். ஆயினும் புலிகளின் இன்றைய அடையாளம் தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கேள்விக்குள்ளாக்க்கும் நிலையிலுள்ளது என்ற அடிப்படையிலிருந்தே இதன் தீர்ப்பின் அரசியல் ஆராயப்பட வேண்டும்.

புலிகள் என்ற அடையாளம் இன்று அடிடாஸ், நைக், ப்ராடா போன்ற பல்தேசிய வர்த்த நிறுவனங்களுக்கு உரித்தான வியாபார அடையாளங்களைப் போல புலம் பெயர் நாடுகளில் காணப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி மல்ரி  பில்லியன் வியாபாரம் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

eu_ltteஇந்தியாவில் புலிகள் தடைசெய்யப்பட்டிருந்தாலும் புலிகளின் சின்னங்களோ, பிரபாகரனோ தடை செய்யப்படவில்லை. ஒசாமா பின்லாடனின் படத்தை இந்தியத் தெருக்களில் கொண்டுசெல்லும் ஒருவர் சிறைப்பிடிக்கப்படுவார். அதே காராணங்களுக்காக இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவரின் படத்துடன் அரசியல் கட்சி நடத்தினால் அது தடைக்கு உள்ளாகாது. இவற்றிற்குரிய காரணம் இன்று புலிகளின் இருப்பு  பல்தேசிய வியாபார அமைப்பாக மாறிவிட்டது. வியாபாரிகள், மொள்ளைமாரிகள் முடிச்சவிக்கிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் போன்ற அனைத்துத் தரப்பிற்கும் பயன்படும் அடையாளமாகவும் அமைப்பாகவும் புலிகள் சார்ந்த அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை நீக்கவும் புலிகளை மீண்டும் மீட்சி பெறச் செய்யவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதுவுத சங்கடமும் கிடையாது.

புலிகள் மட்டுமல்ல சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிய அனைத்து இயக்கங்களும் இந்திய அரசு அல்லது மேற்கு ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலையே முன்வைத்தன. புலிகள் எப்போதும் ஐரோப்பிய நாடுகளோடு முரண்பட்டதில்லை. மறுபக்கத்தில் மேற்கு ஏகாதிபத்தியங்களால் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தக் குழுக்கள் போன்று கையாளப்பட்ட புலிகள் அதற்கான தேவை அற்றுப்போன போது அழிக்கப்பட்டனர்.

தேவையானபோது புலிகளை வளர்த்து தேவையற்ற போது புலிகளை மக்களோடு சேர்த்து அழித்த ஐரோப்பிய – அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாற்றை மறந்துவிட்டு தீர்ப்பு என்பது நியாயம் கிடைத்ததற்கான ஆரம்பம் என்று கூறுவது பொய். தீர்ப்பின் உள் நோக்கத்தையும் பின்புலத்தையும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

கடந்தவாரம் கிளிநொச்சிக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச புலிகள் மீட்சி பெறுவதால் தான் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்போது புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டமை மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நீடிப்பதற்கான நியாயமாகச் சிங்கள மக்களுக்குச் சொல்லப்படும்.

எதிர்க்கட்சியான யூ.என்.பி மற்றும் சந்திரிக்கா பிரிவினர் ஐரோப்பிய நாடுகள் சிங்களவர்களுக்கு எதிரானவை அல்ல ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரானது என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சாரம் ஒரு வகையில் சிங்கள மக்களால் உள்வாங்கப்பட்டிருந்தது. இன்று மகிந்த ராஜபக்சவும் பரிவரங்களும் ஐரோப்பிய நாடுகள் நாட்டைத் துண்டாட முனைகின்றன எனவும் சிங்கள மக்களுக்கு அவை எதிரானவை எனவும் பிரச்சாரம் மேற்கொள்ள உதவிசெய்யும். எதிர்க்கட்சிகள் பலவீனமடைய மகிந்த ராஜபக்ச தனிக்க்காட்டு ராஜாவாக இன்னும் சில வருடங்களுக்கு உலாவருவார்.

அண்மையில் கே.பி இன் நெர்டோ அமைப்பில் பணிபுரியும் உதயன் என்பவர் ஜேர்மனிக்குச் சென்றிருந்த போது புலம் பெயர் நாடுகளில் புலிகள் வாழ்ந்தால் மட்டுமே தாங்கள் இலங்கையில் அரசியல் ரீதியாகப் பலமடையாலாம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆக, புலிகளின் இருப்பும் மீட்சியும் தடை நீக்க நாடகமும் மகிந்தவை இன்னும் நீண்டகாலத்திற்கு ஆட்சியில் நீடிக்க உதவி புரியும்.

தான் கொள்ளையடித்து தனது குடும்பத்தைச் சொர்க்கபுரியில் வாழவைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாருடனும் இணையத் தயாரான கொள்கையற்ற குரூரமானவர். இவ்வாறான கொள்ளைக்காரனை மிரட்டிப் பணியவைப்பதற்கு ஐரோப்பிய நாடுகளிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் தாராளமாகக் கையிருப்பிலுள்ளன. இதனால் இலங்கையில் மகிந்தவின் ஆட்சி ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் பொன் முட்டை போடும் வாத்து.

இதனால் புலிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் மீட்டெடுத்து மகிந்தவை வாழவைப்பது ஐரோப்பிய அரசுகளுக்குத் தேவையானதே.

இன்று புலம்பெயர் நாடுகளில் இளைஞர்கள் மத்தியிலும், தேசிய விடுதலைப் போராட்டங்களோடு தொடர்புடையவர்கள் மத்தியிலும், பல்தேசிய நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிரான குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு ஏகாதிபத்திய அரசு சார்பான அமைப்புக்களைத் தொடர்ந்து தமிழ்த் தலைமைகளாகப் பேண ஐரோப்பிய நாடுகள் முயல்கின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகர சிந்தனை கொண்ட குழுக்கள் தோன்றுவதை விட புலிகளின் இருப்பு ஐரோப்பிய நாடுகளுக்குத் சார்பான ஒன்றாகவே இன்று அமையும்.

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிக்கவும், தமிழ்ப்பேசும் மக்களின் அழிவிலிருந்து தனது ஆதிக்கத்தை நிலைனிறுத்தவும், தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை ஏகாதிபத்திய சார்பானதாக்கிச் சிதைக்கவும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலிகள் தேவை. மகிந்த அரசு அதிகாரத்தில் நீடிப்பதற்குப் புலிகள் தேவை. புலம்பெயர் வியாபாரிகள் தமது வியாபாரத்தை இலாபகரமாக நடத்தப் புலிகள் தேவை.

ஆக, மூன்று மாதக் காலகெடுவின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் மீதான தடையை நீக்க வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!

மல்லாகம் நீதி மன்றத்தை எரித்தது இயக்கங்களே : அதிகாரவர்க்க அடியாள் விக்கி

Comments 6

  1. mannan says:
    11 years ago

    புலிகள் இயக்கம் இப்போ  பயங்கரவாதத்தினை இலங்கையில் தொடரமுடியாது.  புலிகளின் பெயரால்  புலம்பெயர்நாடுகளில்
    பணப் பயங்கர்வாதிகழும்    தமிழரை மிரட்ட முடியாது.

    புலியின்  பல்லும் கழட்டப்படு வாலும் வெட்டப்பட்டு  நான்கு கால்கழும்
    முறிக்கப்பட்ட  நிலமைதான்.. இவ்வாறன  புலியினை   கூட்டில்
    பூட்டி வைப்பதாலோ   திறந்து  வைப்பதாலோ    யாருக்கும்  எந்த ஆபத்தும்மில்லை.

    அவ்வாறு  ஆபத்து  வருவதானால்   தமிழருக்குத்தான்.    வீட்டு கதவினைத்
    தட்டி  புலம்பெயர்  நாடுகளில்  பணம் கேட்பார்கள்.  கொடுக்காதவ்ர்களை
    முன்பு  இலங்கையில்  தண்டித்தார்கள்  இனி  புலம்பெயர்  நாடுகளில்
    தண்டிப்பார்கள்..   பொலிசாரோ  தன்னினத்தை  தானே அழிக்கும்  புலியென
    கண்மூடிகொள்வார்கள்.

  2. TwoFeetTigers says:
    11 years ago

    I hope, There is no more violence. They will peacefully fight for the peace of this planet. 

    • mannan says:
      11 years ago

      உலகில் பணத்திற்காகவே   எல்லோரும் போராடுகின்றார்கள். புலிகழும்
      அப்படியே.

      • lala says:
        11 years ago

        அதில்  காந்தி தாத்தா ,நெல்சன் , மாவோ உட்பட  செந்தோழர்கள் , கம்யூனிஸ்ட் கள் , இடது சாரிகள் எல்லோரும் உள்ளடக்கம்தானே !

  3. கரிகாலன் says:
    11 years ago

    கட்டமைப்பு தகவல்கள்:-
    இனியொருவின் இந்தா ஆய்வு முற்றிலும் உண்மை. இதனை சரியான தருணத்தில் இனியொரு வெளியிட்டது வரவேற்கத்தக்கது. இப்போது ராஜபக்சே அரசாங்கம், புலம்பெயர் நாட்டு புலிகள், கே.பி இன் ஆட்கள் எல்லோரும் ஒன்றிணைந்தே தடை எடுப்பிற்கு எதிராக வேலை செய்துள்ளனர். இனியொரு  எழுதாத மேலும் தகவல்:
    சிறிலங்கா அரசாங்க சிறையில்ருந்து முக்கிய முன்னாள் இயக்க நிதிப் பொறுப்பாளர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் கே.பி தனது தூதுவர்களை யூ.கே, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு அனுப்பினார். இவர்களின் நோக்கம் புலிகளின் பேரில் புலம் பெயர் நாடுகளில் முடங்கி உள்ள சொத்துக்களை மீட்டுப் பங்கிடுவதே. இப்படிப் பங்கிடுவதற்கு நெடியவன், கே.பி போன்றவர்களுடன் பலர் இணைந்துள்ளனர். 
    இந்த எல்லாரும் சேர்ந்தே பரிதி அண்ணனை முதலில் போட்டனர். தடை நீக்கப்பட்டதும் பயமில்லாமல் சொத்துக்களை விற்று காசுகளை மாற்றும் வேலையை ஆரம்பிக்க உள்ளனர். அதன் பங்கு, கோதபய, நெடியவன், கே.பி, ஐரோப்பாவில் சிலர் பங்கிட்டுக்கொள்வார்கள். இப்படி பங்கிட்டு முடிந்ததும் இலங்கையில் இயக்கத்திம் பேரால் தாக்குதல் நடத்திவிட்டு எல்லாவற்றையும் தடை செய்வார்கள். காசை கடத்துவதற்கு சில வியாபார கொம்பனிகள் பயன்படுத்தப்படலாம்.
    இனியொரு மட்டும் இதனை எழுதியுள்ளதற்கு நன்றி. மேற்குறிப்பிட்ட குழுவிடம் இருந்து இனியொரு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் ஆதரவை சேர்த்து கொள்ளுங்கள்.
    வேறு  தகவல்கள் கிடைத்தால் இங்கு அறியத்தரப்படும்.

    • mannan says:
      11 years ago

      இவ்வகையான உண்மைகளை தேடவும் சிந்திக்கவும் செயற்படவும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்  கூட  புலம்பெயர் தமிழரில் இல்லாதபடியால்
      தான்  தமிழரின் இரத்தம் குடிப்போரும்,பிணம் தின்னுவோரும் போல்
      பணத்த்திற்காகவும்  தமது சுயநலத்திற்குமாக  இலங்கை இந்திய உளவுத்துறைகழுடன்  ஒன்று பட்டுவிட்டன்ர்.

      ஒரு பிரபல  மொபைல் நிறுவனத்தின்  பங்குதாரர்கள் ஸ்தாபர்கர்கள்
      போர் முடிந்தவுடன் அதாவது  வன்னியில் தமிழரின்  பிண வாடை போகுமுன்பே   இலங்கையின் அரச  தூதுவர்கழுடன்   இரகசியமாக
      தொடர்பு கொண்டார்கள்.  அதன் பின்னரே  தலைகடாக்களாக  மற்ரவர்கள்
      செயற்படுகின்றார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...