வன்னிப் போருக்குப் பின் ஏராளமான பொது மக்களையும் போராளிகளையும் கூட்டுக் கொலை செய்தது இலங்கை இராணுவம். இந்த நிகழ்வை தலத்தில் இருந்த பல சிங்கள இராணுவத்தினர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அப்படி பிடிக்கப்பட்ட படங்களே இப்போது இலங்கை அரசுக்கு எதிரான இனக்கொலை ஆவணமாக வெளி வந்து கொண்டிருக்கிறது. இப்படியான செல்போன் காணொளிகள் சிங்கள வீரர்களால் விற்கவும் படுகிறது. இந்நிலையில் மட்டக்களப்பில் புலிகள் தொடர்பான வீடீயோ காட்டிகளைக் கொண்ட செல்போன்களை வைத்திருந்ததாக மட்டக்களப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளர். மட்டகளப்பு நாவற்காடு பகுதியைச் சார்ந்த அவர்களை பயங்கரவாத தடுப்புப் போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.