தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக இயங்கிவந்த சில முகப்புப் புத்தகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத் தளங்கள் அரச அதிகாரங்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அரேபிய நாடுகளில் உருவான எழுச்சிகளில் இவ்வாறான சமூக வலைத் தளங்களும் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. இதன் பின்னர் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்கள் இவற்றைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக சில அரேபிய நாட்டு எழுச்சிக் குழுக்களோடு தொடர்புடைய கணக்குகள் முடக்கப்பட்டன. இவ்வாறான கணக்குகள் முடக்கப்பட்டமை கருத்துரிமைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகக் கருதப்படலாம்.
புதிதா என்ன?நான் அடிப்பது போல் அ(ந)டிக்கிறேன்,நீ அழுவது போல் நடி!என்று கற்றுக் கொடுத்தவர்கள் தான்,விடுதலைப் போரை பயங்கரவாதமாக சித்தரித்து உதவி விட்டு,இப்போது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருப்பது போல் நடிக்கிறார்கள்! வாழ்க ஜன(பண)நாயகம்!