Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புலிகள் கொலைசெய்த 80 பேரும் புலி எதிர்ப்பாளர்களின் பிரச்சாரமும் புலி ஆதரவாளர்களும்

இனியொரு... by இனியொரு...
08/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
21
Home இன்றைய செய்திகள்

ltteமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளிபுரம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்ரன் உள்ளிட்ட 80 தமிழர்களை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார் என் இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புபிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் இந்த அறிக்கையைப் பிரதானப்படுத்தி அரச சார்பு புலியெதிர்ப்பு ஊடகங்கள் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. இதனை முன்வைத்தே தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் நியாயமற்றது என இவர்கள் பாசிச அரசின் அடியாட்கள் போல தமது அரசியலை ஆரம்பித்துவிட்டனர். முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னர் மக்கள் பற்றுள்ள ஒரு சிலராவது புலிகளின் அரசியல் தவறுகளைச் சுய விமர்சனம் – விமர்சனம் செய்து புதிய அரசியல் வழிமுறைகளைப் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நோக்கி முன்வைத்திருந்தால் இன்று அரச அடியாட் படைகளின் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக இலங்கை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திர்க்க்க முடியாது.

நாங்கள் எங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறோம் ஆனால் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடரும் என மக்கள் நலன் சார்ந்து சொல்வதற்கு 30 வருடம் போராத்தில் ஒரு புலியாவது எஞ்சவில்லை.

புலி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் கொலைகளே நடக்கவில்லை என்றும் மறுபகுதியினர் இன்னும் கொலைகளை நியாயப்படுத்தியும் வருகின்றனர். அரச உளவாளிகளின் கொலைகளை இன்னொரு தளத்தில் விவாதித்தாலும் புலிகளி போராட்ட வழிமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்களும் அழிவுகள் குறித்து எச்சரித்தவர்களும் போராடுவதற்கான ஜனநாயகம் கோரிப் போராடியவர்களும் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டதைக் கூட இவர்கள் சுய விமர்சனம் செய்து கொள்ள மறுத்து, அழிந்துபோன அதே வழிமுறைகளோடு மக்கள் மத்தியில் தேசிய வியாபாரம் செய்கிறார்கள்.

புலி ஆதரவாளர்களான பிழைப்புவாதிகள் மக்கள் நலன் குறித்துச் சிந்திப்பதில்லை. அவர்கள் தமது தேசிய வியாபாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு இவ்வாறு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்கிஸ்ஸை பொலிஸ் வலய பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் 2005.04.20 அன்று நள்ளிரவு 12 மணிக்கு கல்கிஸ்ஸை ஹோட்டலில் வைத்து புலிகள் இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
வெள்ளை வேனில் சிலாபம் நோக்கி கடத்திச் செல்லப்பட்ட ஜெயரட்ணம் படகு மூலம் மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் விடத்தல் தீவிலிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெயரட்ணம் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இராணுவ கப்ரன் ஒருவரும் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட நபர்களும் புலிகள் இயக்கத்தில் தவறிழைத்த நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 பேர் 2006 மே மாதம் கைகளுக்கு விலங்கிட்ட வண்ணம் லொறிகளில் எற்றப்பட்டு ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
அத்தோடு 2006 ஜூலை மாதம் குறித்த சிறையிலிருந்த 50 பேர் லொறியிலும் றோசா பஸ்ஸிலும் அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இராணுவ கப்ரன் விஸ்வமடு தொட்டியடி பிரதேசத்தில் சிறை வைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த கொலைகளுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட நபர்கள் மற்றும் இடம் தொடர்பிலும் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வட மாகாண சபைத் தேர்தலில் யார் வென்றாலும் எமக்குப் பாதிப்பில்லை : பசில்

Comments 21

  1. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ////பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்////

    சித்திரவதையின் கீழ் பெறப்படும் வாக்குமூலம் நீதி மன்றில் செல்லுபடியாகும் என தெரிவிக்கும் சட்டம் தான் பயங்கரவாத தடைச் சட்டம்

    சிறீலங்கா அரசு அத்தனை பொய்களும் சொல்லும் அரசு .

    இதற்கு மேல் இந்த செய்தியை பிரசுரிப்பதும் அது பற்றி விவாதம் செய்வதும். சிங்கள அரசின் சூழ்சிக்கு பலியாகும் செயல் .

    விடுதலைப் புலிகள் தவறு விட்டார்களா இல்லையா என்பதை விவாதிப்பதன் நோக்கம் தமிழீழ விடுதலை நோக்கியதாக இருந்தால் அதை செய்யலாம் . அதுவும் உட்கட்சி விவகாராமாக செய்ய வேண்டிய விடயம் .

    இங்கே இனப்படுகொலை செய்யும் சிறீலங்கா அரசு இந்த விவாத்தைக் கிளப்புவதன் நோக்கம் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதும் தமிழீழ இலட்சியத்தை வேரறுப்பதும் ஆகும் . புரட்சியை எதிர்ப் புரட்சியாளனின் சதி வேலைகளுக்கு மேடை போடக் கூடாது.இதற்கு மேல் இந்த செய்தியை பிரசுரிப்பதும் அது பற்றி விவாதம் செய்வதும். சிங்கள அரசின் சூழ்சிக்கு பலியாகும் செயல் .

    • YAROO says:
      13 years ago

      உங்களின் அப்பட்டமான சமூகவிரோத முகம் இங்குதான் முகத்திரை கிழிக்கப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றது. முள்ளிவாய்காலில் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் நாங்கள் சுதந்திரமாக அரசியல் பேசக்கூடியதாக இருக்கிறது என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் வேட்பாளர் விக்னேஎஸ்வரனையும் கடவுள் என்கிறீர்கள். போராட்டத்தில் தவறுகளை மக்கள் முன்வைத்து அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வழிமுறைகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறவர்களை அரசுக்குத் துணை போவதாகக் கூறுகிறீர்கள். உங்களது நோக்கம் என்ன? நீங்கள் போராட்டத்திற்கும் மக்களுக்கும் எதிரானவர்களா இல்லையா?
      கேட்டால் சர்வதேசம் அழித்துவிட்டது அதுதான் பிரச்சனை என்கிறீர்கள். வியட்னாமில் பல நாடுகள் இணைந்து சிறிய போராட்டக்குழுவை அழிப்பதற்காக மக்கள் மீது அணுகுண்டுகளைக் கூட வீசிய போது போராட்ட முறைகளை சுய விமர்சனம் செய்துகொண்டு அவற்றைப் புதிய வழிகளில் முன்னெடுத்து வெற்றிகொண்ட வரலாறெல்லாம் நம்முன் உள்ளது. இறுதியில் காட்டுமிராண்டிகளோடு நாம் யுத்தம் செய்யமுடியாது என்று அமரிக்க இராணுவம் புறமுதுகுகாட்டி ஓடியதே! அதுதான் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம்.உங்களைப் போல சர்வதேசத்தைக் காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு விக்கி போன்ற ஒருவரின் வேட்டித்தலைப்பில் தொங்கவில்லை.
      நீங்கள் காலத்திற்குக் காலம் ஒருவரைக் கடவுளாக்குவது அனாவசியமான நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்குவது பின்னர் அந்த நம்பிக்கைகளை வைத்து வாழ்க்கை நடத்துவது ….. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்:.? இப்போது இன்னொரு பக்கத்தில் இலங்கை அரசுக்கும் அழிப்பவர்களுக்கும் எதிரான போராட்டத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு எதிராக குறைந்தபட்சம் கருத்தியல் யுத்தத்தை நடத்த நாங்கள் உறுதியக இருக்கிறோம்.. கடந்த காலத்தில் இது நாங்கள்விட்ட தவறு.. இதை உணர்ந்துகொண்டுள்ளோம்….

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Now Sinhala lawyers have started to defend Tamils.

  2. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    உண்மைகள் அறியப்படவேண்டும் என கூக்குரல் எழுப்புவன் முதலில் தான் உண்மையானவனாக சுத்தமானவனாக இருக்க வேண்டும்.

    சிறீலங்கா அரசு தான் புரிந்து வரும் இனப்படுகொலையை மறைக்க புலிகள் பற்றிய விவாததைக் கிளப்புகின்றது . அது சர்வதேச விசாரனைக்கு தயாராக இல்லை .

    இதே போக்குத் தான் புலிகளை வசை பாடும் அத்தனை பேரிடமும் இருக்கு .

    உண்மையை பேசு என்பவன் உண்மையை நேசிப்பவனா என்பதில் இருந்து தான் எல்லாம் அரம்பிக்கின்றது .

    விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய பல ஆயிரக் கணக்கானவர்கள் உலகமெல்லாம் பரவி இருக்கின்றார்கள் . ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக கேள்விகள் உண்டு .

    விடுதலையை உண்மையாக நேசித்து விடுதலைப் புலிகளில் இணைந்தவர்கள் அப்புறுவர் ஐயர் போல ஆகி இரத்தச் சோறு தின்னி காதர் வகையறக்களுக்கு தீனி போட முன் வரமாட்டார்கள் –

    உண்மையை பேசு என்பவன் உண்மையை நேசிப்பவனா என்பதில் இருந்து தான் எல்லாம் அரம்பிக்கின்றது .

    • YAROO says:
      13 years ago

      உங்களின் அப்பட்டமான சமூகவிரோத முகம் இங்குதான் முகத்திரை கிழிக்கப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றது. முள்ளிவாய்காலில் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் நாங்கள் சுதந்திரமாக அரசியல் பேசக்கூடியதாக இருக்கிறது என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் வேட்பாளர் விக்னேஎஸ்வரனையும் கடவுள் என்கிறீர்கள். போராட்டத்தில் தவறுகளை மக்கள் முன்வைத்து அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வழிமுறைகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறவர்களை அரசுக்குத் துணை போவதாகக் கூறுகிறீர்கள். உங்களது நோக்கம் என்ன? நீங்கள் போராட்டத்திற்கும் மக்களுக்கும் எதிரானவர்களா இல்லையா?
      கேட்டால் சர்வதேசம் அழித்துவிட்டது அதுதான் பிரச்சனை என்கிறீர்கள். வியட்னாமில் பல நாடுகள் இணைந்து சிறிய போராட்டக்குழுவை அழிப்பதற்காக மக்கள் மீது அணுகுண்டுகளைக் கூட வீசிய போது போராட்ட முறைகளை சுய விமர்சனம் செய்துகொண்டு அவற்றைப் புதிய வழிகளில் முன்னெடுத்து வெற்றிகொண்ட வரலாறெல்லாம் நம்முன் உள்ளது. இறுதியில் காட்டுமிராண்டிகளோடு நாம் யுத்தம் செய்யமுடியாது என்று அமரிக்க இராணுவம் புறமுதுகுகாட்டி ஓடியதே! அதுதான் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம்.உங்களைப் போல சர்வதேசத்தைக் காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு விக்கி போன்ற ஒருவரின் வேட்டித்தலைப்பில் தொங்கவில்லை.
      நீங்கள் காலத்திற்குக் காலம் ஒருவரைக் கடவுளாக்குவது அனாவசியமான நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்குவது பின்னர் அந்த நம்பிக்கைகளை வைத்து வாழ்க்கை நடத்துவது ….. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்:.? இப்போது இன்னொரு பக்கத்தில் இலங்கை அரசுக்கும் அழிப்பவர்களுக்கும் எதிரான போராட்டத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு எதிராக குறைந்தபட்சம் கருத்தியல் யுத்தத்தை நடத்த நாங்கள் உறுதியக இருக்கிறோம்.. கடந்த காலத்தில் இது நாங்கள்விட்ட தவறு.. இதை உணர்ந்துகொண்டுள்ளோம்….

    • யோகன் says:
      13 years ago

      ” யாரோ ” 
      மிக நுணுக்கமாக மௌலீசன் அவர்களின் குளறுபடியான கருத்துக்களை  அலசி .துவைத்துக் காயப் போட்டிருக்கின்றீர்கள்.கலாதியாக இருக்கிறது.

  3. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    இனப்படுகொலை நடை பெறுகின்றது அதைத் தடுத்தாக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கின்ற பொழுது விடுதலைப் புலிகள் பிழை விடவில்லையா என்ற விவாத்தைக் கிளப்புவது வழுநிலை விவாதம் fallacious argument. திசை திருப்பும் சிங்களத்தின் சதி . விடுதலைப் புலிகள் எவரையும் அழிக்க வேண்டும் என்பதற்காக ஜெயச்சந்திரனையோ வேறு எவரையுமோ கொலை செய்யவில்லை . தமது இனத்தை அழிக்க வந்தவனைக் கொலை செய்தார்கள். தற்பாதுகாப்பு யுத்தம் நடாத்தினார்கள்.
    சிங்கள அரசு தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்தார்கள்.

    வழுநிலை விவாதத்துள் fallacious argument நாம் விழுந்துவிட முடியாது , முதலில் இன அழிப்பு பற்றி சிங்களம் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும்.

    More on Fallacious argument @http://tmwtmw.blogspot.dk/2013/07/blog-post_2110.html

    • சி. சந்திரமௌலீசன் says:
      13 years ago

      மேலெ உள்ள ///சிங்கள அரசு தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக கொலை செய்தார்கள்./// என்பதைத் தயவு செய்து பின்வருமாறு திருத்தி வாசிக்கவும் .

      சிங்கள அரசு தமிழர்களை அழித்து விடக் கூடாது என்பதற்காக , அதைத் தடுத்துவிடவேண்டும் என மனதார நம்பி சில கொலைகளைச் செய்தார்கள். அங்கே கபடம் இருக்கவில்லை . முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம் . சிங்களத்த்தின் கொலைகள் இன ழிப்பு என்ற கபட நோக்கம் கொண்டது .

    • YAROO says:
      13 years ago

      நீங்கள் கூறுவது போல் ஒரு அழுத்தமும் எங்கும் அதிகரிக்கவில்லை. இனப்படுகொலையை நீங்கள் கும்பிடும் சர்வதேச நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுடன் இணைந்தே நடத்தினார்கள். நாங்கள் எங்களை சுய விமர்சனம் செய்துகொள்ளாவிட்டால் இலங்கை அரசும் உங்கள் சர்வதேசங்களும் அதனைக் குற்றச்சாட்டாக முன்வைக்கும். அதுதான் நடக்கிறது. யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை, நீங்கள் ஆதர்சிக்கும் இரண்டு வடமாகாணசபை வேட்பாளர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள். எம்மைப் போல ஒரு சிலர் மட்டும் தான் இனப்படுகொலையை தொடர்ச்சியாக மக்கள் முன் அமபலப்படுத்தி அதற்கு எதிரான புதிய மக்கள் யுத்தப்பாதையை முன்வைக்கிறோம்.
      உங்களின் அப்பட்டமான சமூகவிரோத முகம் இங்குதான் முகத்திரை கிழிக்கப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றது. முள்ளிவாய்காலில் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் நாங்கள் சுதந்திரமாக அரசியல் பேசக்கூடியதாக இருக்கிறது என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் வேட்பாளர் விக்னேஎஸ்வரனையும் கடவுள் என்கிறீர்கள். போராட்டத்தில் தவறுகளை மக்கள் முன்வைத்து அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வழிமுறைகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறவர்களை அரசுக்குத் துணை போவதாகக் கூறுகிறீர்கள். உங்களது நோக்கம் என்ன? நீங்கள் போராட்டத்திற்கும் மக்களுக்கும் எதிரானவர்களா இல்லையா?
      கேட்டால் சர்வதேசம் அழித்துவிட்டது அதுதான் பிரச்சனை என்கிறீர்கள். வியட்னாமில் பல நாடுகள் இணைந்து சிறிய போராட்டக்குழுவை அழிப்பதற்காக மக்கள் மீது அணுகுண்டுகளைக் கூட வீசிய போது போராட்ட முறைகளை சுய விமர்சனம் செய்துகொண்டு அவற்றைப் புதிய வழிகளில் முன்னெடுத்து வெற்றிகொண்ட வரலாறெல்லாம் நம்முன் உள்ளது. இறுதியில் காட்டுமிராண்டிகளோடு நாம் யுத்தம் செய்யமுடியாது என்று அமரிக்க இராணுவம் புறமுதுகுகாட்டி ஓடியதே! அதுதான் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம்.உங்களைப் போல சர்வதேசத்தைக் காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு விக்கி போன்ற ஒருவரின் வேட்டித்தலைப்பில் தொங்கவில்லை.
      நீங்கள் காலத்திற்குக் காலம் ஒருவரைக் கடவுளாக்குவது அனாவசியமான நம்பிக்கைகளை மக்களுக்கு வழங்குவது பின்னர் அந்த நம்பிக்கைகளை வைத்து வாழ்க்கை நடத்துவது ….. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்:.? இப்போது இன்னொரு பக்கத்தில் இலங்கை அரசுக்கும் அழிப்பவர்களுக்கும் எதிரான போராட்டத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு எதிராக குறைந்தபட்சம் கருத்தியல் யுத்தத்தை நடத்த நாங்கள் உறுதியக இருக்கிறோம்.. கடந்த காலத்தில் இது நாங்கள்விட்ட தவறு.. இதை உணர்ந்துகொண்டுள்ளோம்….

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        There are a lot of things to be cleared. They are taking their own time. Nobody can do anything about that. None can compensate the damage done to them here from abroad.

  4. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    விடுதலைப் புலிகளை பெரும் பான்மையான தமிழ் சமூகம் தமது பிரநிதிகளாக ஏற்றுக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் அந்த சமூகத்தை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க வேன்டும் என்ற உளச்சுத்தியுடன் இறுதி வரை போராடினார்கள்.

    சமூகம் சார்ந்த அவர்கள் நிலைப்பட்டை ஆதரிப்பது எப்படி சமூக விரோதமாக முடியும் – சமூகத்துக்காக மனச்சுத்தியுடன் நடந்தவர்கள் அவர்கள் . அவர்களை ஆதரிப்பது சமூக விரோதிகள் என்றால் அவர்களும் சமூக விரோதிகளா?

    • Yaaro says:
      13 years ago

      சந்திரமௌலீசன்,
      இலங்கை பாசிச அரசின் முள்ளிவாய்க்கால் கொலைகளை நியாயப்படுத்தும் விக்னேஸ்வரன் போன்றவர்களைக் கடவுளாக்கிக் கும்பிடும் நீங்கள் புதிய போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்காக கடந்தகாலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளை விமர்சிக்க வேண்டும் என்று சொல்லும் எங்களை அரசிற்குத் துணை போவதாக கூறுவதை சமூகவிரோதம் என நான் கூற நீங்கள் விவாதத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள். தயவு செய்து திசைதிருப்பாமல் பதில் சொல்லுங்கள். நீங்களே புலிகள் தவறிழைத்துள்ளார்கள் அதனை உட்கட்சியில் விமர்சிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். நான் சொல்கிறேன் மக்களுக்கு உண்மைகளை மறைக்காமல் விமர்சனத்தை முன்வைத்து தவறுகளை திருத்த உதவினால் நாளைய போராட்டம் வெற்றியை நோக்கி நகரும்.
      //விடுதலைப் புலிகளை பெரும் பான்மையான தமிழ் சமூகம் தமது பிரநிதிகளாக ஏற்றுக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் அந்த சமூகத்தை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க வேன்டும் என்ற உளச்சுத்தியுடன் இறுதி வரை போராடினார்கள்.//
      பெரும்பானமையானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதால் சரியானதாகிவிடாது. பெரும்பான்மை என்பதால் மட்டுமே ஆதரிப்பது பிழைப்புவாதம். கிட்லரை ஜேர்மனிய மக்களில் 90 வீதமானவர்கள் ஆதரித்தார்கள். அப்படியான கிட்லர் என்ற மனிதக் கொலையாளி சரியானவரா? இதைப் போல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இன்று பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் புலம் பெயர் நாடுகளில் வியாபாரத்தின் அடையாளம். அவர்கள் மக்கள் பற்றுள்ளவர்களாக இருந்தால் எங்கெல்லாம் தவறிழைத்திருக்கிறோம், இதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன இனிமேல் எப்படிப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். அது நடக்கவில்லை.
      இவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்கவேண்டும். இலங்கை அரச பாசிஸ்டுக்களுக்கு எதிரான போராட்டம் புதிய வழிகளில் முன்னெடுப்பதற்கான அடிப்படையே இதிலிருந்துதான் ஆரம்பமாகும்.

    • thevan says:
      13 years ago

      some clips,may fit for some of comments: ,.
      . சிரிப்பு தான் வருது ,.
      .
      .https://www.youtube.com/watch?v=RP4abiHdQpc
      .,.
      .படித்தவுடன் கிளித்துவிடவும்.
      .
      https://www.youtube.com/watch?v=DaYR3t2hZXo,.
      . மண்டை மேலே இருக்கிற கொண்டை ,.
      . https://www.youtube.com/watch?v=DIO993DjIoA

    • thevan says:
      13 years ago

      DUNG BEATLE: they roll the dung as they wish in their own direction, MOULEE is rolling the DUNG. not coming to the point as dung roller beatle. is called POO ROLLER . https://www.youtube.com/watch?v=Q1zbgd6xpGQ

  5. சி. சந்திரமௌலீசன் says:
    13 years ago

    தேசிய விடுதலைப் போருக்கும் வர்க்க விடுதலைப் போருக்கும் இடையே உள்ள அடிப்படை வேறு பாட்டை மறந்து நீங்கள் வர்க்க விடுதலைப் போராட்டம் தான் தேசிய விடுதலைப் போராட்டம் எனக் குழம்பிப் போயுள்ளீர்கள் என்பதே மேலே உள்ள பதிவிலும் , முன்னைய பதிவுகளிலும் காண முடிகின்றது .

    வர்க்க விடுதலை ஊடாகத் தான் ஒரு தேசிய இனம் வளம் பெறமுடியும் என்பது உண்மை. அதற்கு முன்னர் அந்த தேசிய இனம் இனழிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் . தேசிய வாதிகள் இடசாரிகளாக இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதில் தான் சிக்கலே!!!

    ஒரு தேசத்தை இடதுசாரிகள் தான் அழிவில் இருந்து காப்ப்பாற்ற வேண்டும் என்று பெரும்பாலான நாடுகலில் அந்த நாட்டு மக்கள் நினைத்ததாக நான் கருத வில்லை .
    மாறாக பெரும்பாலான தேசிய இனங்களை அழிவில் இருந்து காப்பாற்றிய தேசிய வாதிகள் முதலில் தேசிய வாதிகளாகவும் அதன் பின்புதான் இடது சாரிகளாகவும் இருந்திருக்கின்றார்கள் . ஆதாரத்துடன் மறுக்க முடியுமா ? அப்படி ஒரு 10 நாடுகள் சொல்லுங்கள் பார்க்கலாம் .

    • Yaaro says:
      13 years ago

      //தேசிய விடுதலைப் போருக்கும் வர்க்க விடுதலைப் போருக்கும் இடையே உள்ள அடிப்படை வேறு பாட்டை மறந்து நீங்கள் வர்க்க விடுதலைப் போராட்டம் தான் தேசிய விடுதலைப் போராட்டம் எனக் குழம்பிப் போயுள்ளீர்கள் என்பதே மேலே உள்ள பதிவிலும் , முன்னைய பதிவுகளிலும் காண முடிகின்றது .//
      நான் தேசிய விடுதலை என்றோ வர்க்க விடுதலை என்றோ வார்த்தை ஜாலங்களுக்குள் விழவில்லை. சாதாரண மனித நியாயத்தைப் பேசுகிறேன். எங்காவது ஒரு இடத்தில் வர்க்க விடுதலை, லெனின் சொன்னார், மாவோ சொன்னார் என்று பேசியிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் தான் அவற்றை மூட்டைகட்டி லேபல் பண்ணுகிறீர்கள்.
      நாங்கள் சாதாரண மனிதர்களாக நியாயங்களைப் பேசுவோம்.
      //வர்க்க விடுதலை ஊடாகத் தான் ஒரு தேசிய இனம் வளம் பெறமுடியும் என்பது உண்மை. அதற்கு முன்னர் அந்த தேசிய இனம் இனழிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் . தேசிய வாதிகள் இடசாரிகளாக இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பதில் தான் சிக்கலே!!!//
      இதைப்பற்றியெல்லாம் நான் இதுவரை பேசியதே கிடையாது, நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காகச் சொல்லுகிறேன். தேசிய விடுதலை என்பதே வர்க்கங்களிடையேயான ஐக்கிய முன்னணி சார்ந்த போராட்டம். அதாவது ஒடுக்கப்படும் தொழிலாளர்கள் விவசாயிலளிலிருந்து தேசிய முதலாளிகள் வரைக்கும் ஓரணியில் திரண்டும் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராகவும் அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் போராட்டமே தேசிய விடுதலைப் போராட்டம். இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்களிடம் தான் சிக்கலே இருக்கிறது. நீங்கள் அன்னிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தேசியவதிகள் அல்ல, அன்னியர்களை ஆக்கிரமிக்குமாறு கூப்பாடுபோடும் விதேசிகள். நாங்களோ உங்களது தவறுகளை விமர்சித்து ஐக்கிய முன்னணி வட்டத்துக்குள் தேசிய நோக்கங்களுக்காக கொண்டுவர முனைகிறோம்.
      //ஒரு தேசத்தை இடதுசாரிகள் தான் அழிவில் இருந்து காப்ப்பாற்ற வேண்டும் என்று பெரும்பாலான நாடுகலில் அந்த நாட்டு மக்கள் நினைத்ததாக நான் கருத வில்லை . மாறாக பெரும்பாலான தேசிய இனங்களை அழிவில் இருந்து காப்பாற்றிய தேசிய வாதிகள் முதலில் தேசிய வாதிகளாகவும் அதன் பின்புதான் இடது சாரிகளாகவும் இருந்திருக்கின்றார்கள் . ஆதாரத்துடன் மறுக்க முடியுமா ? அப்படி ஒரு 10 நாடுகள் சொல்லுங்கள் பார்க்கலாம் .//
      இன்றுவரை அன்னிய ஆதிக்கத்திற்காகவும் தேசிய விடுதலைக்ககவும் போராடிய வெற்றிபெற்ற நாடுகளைப் பட்டியலிட்டால் அங்கு இடதுசாரிகளே போராட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைத்து வர்க்கப்பிரிவுகளையும் இணைந்த ஐக்கிய முன்னணி ஊடாகவே போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அப்படியில்லாத நாடு ஒன்றும் எனக்கு ‘கடவுள் சத்தியமாக’ தெரியாது!

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Yes. That where the Caste thing comes in here in Sri Lanka and the Tamils. He redefined it for us for ever. 

  6. malar says:
    13 years ago

    பல நாடுகள் இணைந்து சிறிய போராட்டக்குழுவை அழிப்பதற்காக மக்கள் மீது அணுகுண்டுகளைக் கூட வீசிய போது போராட்ட முறைகளை சுய விமர்சனம் செய்துகொண்டு அவற்றைப் புதிய வழிகளில் முன்னெடுத்து வெற்றிகொண்ட வரலாறெல்லாம் நம்முன் உள்ளது. இறுதியில் காட்டுமிராண்டிகளோடு நாம் யுத்தம் செய்யமுடியாது

    என்ற கொள்கையை பின்பற்றி தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுத ரீதியாக மெளனிகப்பட்டுள்ளது .

    என்ற உண்மை உணர்ந்து உலகத்தைப்புரிந்து ஈழத்தமிழிர் வரலாற்றை ஈழத்தின் விடுதலையாக ஒப்படைகப்பட வேண்டுமானால் தமிழர் வாழ்விடங்களை விட்டு சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட்டு தமிழர்களது சுதந்திரமான செயல்பாடுகள் பதிவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பின் போட்டு பொது நலவாய மாநாடு வடமாணத் தேர்தல் என்பதினுடாக இவற்றை தீர்கப்படாமல் ஒரு கையால் கொடுப்பதனை இன்னொரு கையால் எடுப்பதற்கு இனியும் இலங்கை அரசாங்கத்தினது திட்டமிடலில் கூட்டமைப்பினது நகர்வை தவிர்கப்பட வேண்டும் என்பதனை இந்தியாவும் சர்வதேசமும் புரிந்து கொள்வதே எதிர்கால யதார்தத்திற்கான தேவை.ஆகும்;
    அதனை ஊடகங்களும் பின்பற்றி கொள்வது காலத்தினது தேவை.

    • Yaaro says:
      13 years ago

      இறுதியில் காட்டுமிராண்டிகளோடு யுத்தம் செய்ய முடியாது என்று புறமுதுகு காட்டி ஓடியவர்கள் வியட்னாமை ஆக்கிரமித்த அமரிக்கர்களே. முதலில் அமரிக்கர்கள் பிரஞ்ச்சு நாட்டோடு சமரசத்திற்கு வந்து தேர்தலில் வெற்றிபெறுமாறு கூறினார்கள், அதனை நிராகரித்த போராளிகள் ஆயுதமேந்திட் மக்கள் யுத்தத்தை ஒழுங்கமைத்தார்கள். இதுவே அமரிக்கர்களை ஓட விரட்டியது. இலங்கையிலோ, அரசியல் சூனியங்களும் பிழைப்புவாதிகளும் அன்னியர்களதும், இலங்கை அரச பாசிஸ்டுக்களதும் உளவுப்படையாக அல்லவா செயற்படுகிறார்கள். இவர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட ஹாவெஸ்ட் ஒன்று நடத்தப்பட் வேண்டும்.

  7. Ramanados says:
    13 years ago

    இனியொரு தோழர்களே,
    உங்கள் தோழர் ஒருவரை பாண்டிசேரியில் தற்செயலாக சந்தித்த போது மக்கள் போராட்டம் என்ற்ய் சொல்லக்கூடது என்றும் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் என்ற்ய் சொல்ல வேண்டும் என்றும் அதுபற்றிய சமீபத்திய நுல் ஒன்று பற்றியும் சொன்னார், அதைதான் நீங்கள் இங்கே மீன்டு ம் சொல்ரீர்களோ?

  8. Mano says:
    13 years ago

    இது போன்ற இன்னும் பல முன்னாள் புலிப் போராளின் அதிர்ச்சி தரும்  வாக்கு மூலங்களும் அவற்றின் மீதான நீதி மன்ற விசாரணைகள் தீர்ப்புகளும் நிறையவே உருவாக்கப்படும். 

    இவற்றின் மூலம் முள்ளிவாய்க்கால் படு கெலைகளும் அதனைத் பெஃதாடர்ந்து அரசு நடத்தும் இராணுவ ஆட்சியும் உல யரசுகளால் ஏற்;கப்பட்டு நியாயப் படுத்தப்படவும் வழி சமைக்கப்படும்.

    இன்று வரை பயங்கரவாத தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும் தமிழ்த் தலைமைகளால் ஏற்றக் கொள்ளப்பட்டே வருகிறது. எனவே அனைத்துலக சமூகமும் இன்று தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக நடத்தி வருவதையே காண்கிறோம்.

    சிங்களத்தின் மனம்போல சர்வதேசம் நடப்பதும் சர்வதேசத்தின் விருப்பம் போல தமிழர் தலைமைகள் அரசியல் செய்வதும் நடைமுறையாகிவிட்டது.

    மாத்தி யோசித்துப் பார்த்தால் தமிழனே தமிழனை பயங்கரவாதி என ஏற்பதும் அதன் பயனாய் தன்னினத்தை தானே அழிப்பதும் டஎமது தனிச் சறப்பாக உள்ளது.

    தமிழன்  என்று சொல்லடா ! பயங்கரவாதி என்று கொல்லடா என்று புதுப் பரணி பாடுவோமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...