இலங்கையில் நடந்தது இன படுகொலையே….ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர்.
ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ ‘இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும் வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம். அதனால் இந்த போராட்டம் செய்கிறோம். மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்’ என கல்லூரி உள்ளேயே போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் கோபமான முதல்வர் காவல்துறைக்கு பேசி அவர்களை வரவழைத்தார். மாணவர்களில் ஒரு பிரிவினர் தொடர் காலைவரையற்ற உண்ணாவிரதத்திற்கு தயாராகினர். மாலை ஆக ஆக அங்கே குவிந்த காவல்துறை மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தது.
கல்லூரி முதல்வர் அனைத்து மாணவர்களின் பெயர்களையும், ரோல் நம்பரையும் எழுதி வாங்கிகொண்டு உங்களை எல்லாம் கல்லூரியை விட்டே டிஸ்மிஸ் செய்ய போகிறேன் என மிரட்டி வந்தார்.
நடந்தவைகளை மாணவர்கள் சார்பாக விவரிக்கின்றனர் மாணவர்கள் வினோத் மற்றும் வேல்முருகன்,
“நீங்க படிக்க வந்துருக்கிங்களா இல்லை, இப்படி தண்ட சோறு மாதிரி போராட வந்தீங்களா? எங்கயோ எவனோ செத்தா உங்களுக்கு இங்க போராட்டம் உங்க எல்லா போரையும் கொடுங்க டிஸ்மிஸ் செய்றேன் என கல்லூரி முதல்வர் மிரட்டினாரு….உளவுப் பிரிவோ காலையில் இருந்து ‘நீங்க போராடினீங்கண்ணா உங்களை விடுதலை புலிகள்னு உள்ள தள்ளிடுவோம்.
உங்க எதிர்காலமே போயிடும் அரசு வேலை கிடைக்காது, காலத்துக்கும் கோர்ட்டுக்கும் போலிஸ் ச்டேசனுக்கும் நடையா நடந்துகிட்டே இருக்கணும் ‘னு பயமுறுத்தி வந்தாங்க…காவல்துறையோ ‘உங்க எல்லோரையும் தூக்கி உள்ள போட்டுடுவோம் சிறையில கழி திங்கணும்னு மிரட்டினாங்க இதுல தான் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் கொஞ்சம் தொய்வு அடைந்தது ஆனாலும் மாலை வரை நடத்திட்டோம்
தற்காலிக, மாணவர் உணர்ச்சிவயமான எழுச்சிகள் என்பவற்றையும் கடந்து நிறுவனமயப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியமானவை. இந்திய பல்தேசிய நிறுவனங்கள் சார்பில் இலங்கையில் ராஜபக்ச அரசு நிலப்பறிப்பில் ஈடுபடுகிறது. இந்தியாவின் ஆணைப்படி நடைபெற்ற வன்னிப் படுகொலைகளின் பின்பும் இந்திய ஆணைப்படியே பல்தேசிய நிறுவனங்களின் தேவைக்காக பௌத்த சிங்கள வெறியோடு நிலங்கள் அபகரிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடைபெறுகின்றது. இந்தியாவில் எல்லைக்குள்ளேயே இவற்றிற்கு எதிராகப் போராடும் ஏனைய மக்கள் பிரிவுகளின் ஆதரவோடு மாணவர்களின் போராட்டம் புதிய பரிணாமத்தைப் பெறவேண்டும்.
I like the Viswarupam thing of Kamal Hassan. I am not neither a King nor a Slave to anyone. I am a Sengunthar born in December 27, 1950. 1970. Peradeniya Campus.