2009 ஆண்டில் யுத்தம் நடந்த பகுதிகளில் இராணுவக்குவிப்பை இலங்கை அரசாங்கம் நியாயப்படுத்தி சிங்கள மக்களையும் உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஏமாற்ற புலிகள் மீண்டும் தோன்றிவிட்டனர் என திட்டமிட்ட கொலைகளை நடத்துகிறது. தமது உளவாளிகள் ஊடாக போராட்ட உணர்வுடன் வாழ்பவர்களை உள்வாங்கி அழிக்க முற்படுகிறது. அதனையே இராணுவ மயமாக்கலுக்கான நியாயமாகக் கூறுகிறது. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கோபி உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும், ஒரு இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரும் கொல்லப்பட்டனர்.
முன்னை நாள் போராளிகளிலிருந்து சமூகப்பற்றும் போராட்ட உணர்வும் கொண்ட பலரை தமது உளவாளிகள் ஊடாக உள்வாங்கி அழிக்கும் முயற்சியில் இந்திய இலங்கை அரசுகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் பரவலாக ஏற்பட்டுள்ளது.
கோபி உள்ளிட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் கொல்லப்பட்டதன் ஊடாக வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் நிலையாயமானது என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகிந்த அரசின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க, கண்டி அஸ்கிரி மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், நெடுங்கேணி சம்பவம் இதற்கான பதிலை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்ட உணர்வுள்ள போராளிகளை உள்வாங்கி அவர்களை அழிக்கும் திட்டத்தை இலங்கை அரச பயங்கரவாதிகள் நடைமுறைப்படுத்தும் அதே வேளை அவர்களின் நடவடிக்கைகளை புலிகளின் மீட்சி எனக் கூறி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வளர்க்கிறது,
இதில் நிக்கும் இரானுவம் அத்தனையும் புலியின் மறுபக்கமாகவே நான் பார்க்கிறேன் ..இந்தியன் ஆமி வெளியேறி அடுத்த நிமிடம் செட்டிகுளம் முசள் குத்தி முகாம் இரவு பகலாக ஜந்து நாட்கள் இலங்கை இரானுவத்துடன் சேர்ந்து புலிகள் துடைத்து வழித்ததை எப்படி வர்னிக்கல்லாம்…..????