தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஜேர்மனிய குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம் யூரோவைத் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டே இவரக்ள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பில்லியன் டொலர்கள் பெறுமதியான மக்கள் சொத்துக்களைப் பதுக்கியுள்ள பெரும் தலைகள் சுந்தந்திரமாகத் தலைவர்களாக உலா வரும் அதே வேளை செயற்பாட்டாளர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும், சுமதி உதயகுமார் என்பவருக்கு, 7 மாதங்களும், கோபாலபிள்ளை ஜெயசங்கர் என்பவருக்கு 8 மாதங்களும், பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 22 மாதங்களும், குமணன் தர்மலிங்கம் என்பவருக்கு 6 மாதங்களும், வைத்திலிங்கம் ஜோதிலிங்கம் என்பவருக்கு 1 ஆண்டும், யோகராஜா சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு 1 ஆண்டும், செந்தில்குமரன் கந்தசாமி என்பவருக்கு 1 ஆண்டும், துஸ்யந்தி அருணாசலம் என்பவருக்கு 9 மாதங்களும், தயாபரன் ஆறுமுகம் என்பவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குற்றவியல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதைத் தடுக்கின்ற சட்டத்தின் கீழேயே இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Wheels of justice turns very slowly. When it finally locks a person, there is no escape valve!
Job well done in Germany. Next i wish this happens in UK and then in Canada.
“Wheels of justice turns very slowly.”, except in MR’s Lanka that you admire.
Sutharsan, I admire Sri Lanka becos it is my homeland.
I admire MR becos he relieved us from LTTE terrorism.
What I do not admire is MR’s Sri Lanka. Sri Lanka will be released from MR soon.
Be patient. In 2008, if I had told you that VP will surrender to SLA like a coward, you would have laughed at me. But what happened in May 2009, is history now. So wait, my dear. The wheel is turning but slowly!!!
One day it is Mahinda and another it is Maithri, you are the number one turncoat of the century man.
இவர்களில் யார் கூலிக்காக பணம் சேர்த்தவ்ர்கள்,தமிழரில் அக்கறை கொண்டு சேவைக்காக செயற்பட்டவர்கள், அல்லது கண்மூடித்தன்மாக
பின்னால் சென்ற்வர்கள் என்பது அவர்களிற்கே தெரியும்.
ஆனால் இவர்களின் பின்னால் இவர்களை வைத்து பிழைப்பு நடத்திய
ஆசாமிகள் தமிழரின் உருமைக்கான போராட்டத்தை பயங்கரவாதமாக
தமது சொந்த நலஙளிற்காக துர்ப்பிரயோகம் செய்தவ்ர்கள் அகப்படாமல்
தப்பி வாழ்கின்றனரே. அவர்களை தமிழினத்தின் விழிப்புணர்வு ஒன்றினால் மட்டுமே தண்டிக்க முடியும்.
புலிகளுக்கு யாருமே எங்குமே ஒருபோதும் பணம் சேகாித்தவா்கள் கிடையாது, மாறாக மிரட்டிப்பணம் பறித்தவா்கள். ஒரு சில அப்பாவிகளைத்தவிர மிகுதியினா் அத்தனைபேரும் பணம் சுருட்டிய கூட்டமாகும்.
http://www.vetd.org/p/uber-uns-koordinationskomitee.html
more about Jeyasangar Gopalapillai (Berlin)
எய்தவர்கள் எங்கோ இருக்க அம்புகளாய் செயற்பட்டவர்கள் அகப்பட்டிருக்கலாம். இவர்கள் விடுதலையாகி வரும் போது அவர்களை வைத்தும் ஒரு பிழைப்பை நடத்துவார்கள்.