பொதுபல சேனா என்ற இலங்கை பௌத்த பயங்கரவாத அமைப்பானது நோர்வே அரசின் நிதியில் இயங்குகிறது என்றும் நோர்வேயில் புலிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்றும் இலங்கை அரசின் அமைச்சரான விமல் வீரவன்ச கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமரிக்காவில் தமிழர்களைச் சந்திதுப் பேச்சு நடத்தியது போன்றே நோர்வேயில் புலிகளின் முகவர்களையும் சந்திதுப் பேச்சு நடத்தினோம் எனக் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம் தேசிய இனத்தை அழிக்கும் நோக்குடன் செயற்படும் சிங்கள பௌத்த பயங்கரவாத அமைப்புடன் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறும் புலிகளின் முகவர்கள் நோர்வேயில் நடத்திய இரகசியப் பேச்சு அவமானகரமானது,
தேசியம், பிரபாகரன் துதிபாடல் என்பவற்றின் ஊடாக மக்களை ஒன்றுபடுங்கள் என்று கூக்குரலிடும் பிழைப்புவாத புலிகளின் முகவர்கள் பொதுபல சேனா பயங்கரவாதிகளுடன் இரகசியத் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப் பிழைப்புவாதிகள் ஒன்றுபடக் கோருவது ராஜபக்ச பாசிசத்தை வளர்ப்பதற்கா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. ஏற்கனவே தமிழ்ப் பேசும் மக்கள் அதிகாரங்களின் அடிவருடிகளான மனிதாபிமானமற்ற வியாபாரிகள் என்ற விம்பத்தை ஏற்படுதி தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிவின் விழிம்ம்பு வரை நகர்த்திச்சென்ற அதே பிழைப்புவாதிகள் தான் இவர்கள். இதற்காக தமிழ்ப் பேசும் மக்கள் சார்பில் ஒடுக்கப்படும் முஸ்லிம் தேசிய இனத்திடம் சமூக உணர்வுள்ளவர்கள் மீண்டும் மன்னிப்புக்கோரவேண்டும்.