Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் போதைபொருள் கடத்தலில் மரணித்தவர்களுக்கு நிக்கோபர் தீவில் நினைவிடம்:சாத்திரி

இனியொரு... by இனியொரு...
02/23/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

ltte_cointமக்கள் சார்ந்த மக்களின் நலன்களுக்காகப் போராடும் ஒரு கட்சி மக்களை நேசிக்கவேண்டும். ஒரு பகுதி மக்களின் அழிவில் மற்றொரு பகுதியினரைக் காப்பாற்றுதல் என்பது போராட்டமல்ல. உலகின் அதிபயங்கர ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும், மாபியக் குழுக்களும் குழந்தைகள் உட்பட இளைய சமூகத்தின் ஒரு பகுதியையே கொன்றுகுவிக்கும் போதைப் பொருட்களின் விற்பனையில் மக்கள் சார்ந்த போராட்டம் நடத்த முடியாது. உலகின் மிகவும் பிந்தங்கிய சிந்தனையையும், பிற்போக்குக் கலாச்சாரத்தையும் கொண்ட சமூகம் ஒன்றின் மத்தியிலிருந்து எழுந்த விடுதலை இயக்கங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை போராட்டத்தை நோக்கி அணிதிரட்டவில்லை. மாறாக சமூகத்தை மேலும் மேலும் மனித நேயமற்ற பிற்போக்கு சேற்றுக்குள் அமிழ்த்தியுள்ளன. ஏனைய மக்கள் மீதும், தேசிய இனங்கள் மீது, வெறுப்பையும் வன்முறையையும் விதைக்கும் வக்கிரம் மிகுந்த, சுய நலம் மிக்க பிற்போக்கு தேசிய இனமாகவே தமிழ்த் தேசிய இனத்தைக் உலகின் ஜனநாயகவாதிகளுக்கும் போராடும் மக்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் போன்ற தேசிய வெறிகொண்டவர்களாகவே உலகின் ஜனநாயக முற்போக்குப் பிரிவுகளுக்கு ஈழத் தமிழர்கள் குறித்த விம்பம் வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திலுமிருந்து விடுதலை பெற்று, உலகின் நேர்மையான ஜனநாயக முற்போக்குப் பிரிவுகளோடு எம்மை அடையாளப்படுத்தும் பணி நீண்டது. அதற்கான சுய விமர்சனமும், விமர்சனமும் இன்றை எமது சமூகத்தின் தேவை.

இந்த நிலையில் அருளினியனின் இணையத் தளத்தில் சாத்திரி என்ற விடுதலைப் புலிகளின் முன்னை நாள் உறுப்பினர் வெளியிடும் தகவல்கள் முக்கியமானவை. இவற்றை சுயவிமர்சனமாக சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்வதும், இச்சம்பவங்களின் பின்னணியிலுள்ள அரசியலை அறிந்துகொள்ள முனைவதும் அவசியமானது. ராஜபக்ச பாசிஸ்டுக்களோ, பேரினவாதிகளோ அன்றி ஏகாதிபத்தியங்களோ குற்றமாக முன்வைப்பதற்குப் பதிலாக நாம் சுயவிமர்சனம் செய்வதும் அதனூடாக எதிர்காலத்தில் போராட்டத்தைச் செழுமைப்படுத்துவதும் அவசியமானது.

சாத்திரியின் நேர்காணலின் போதைப்பொரு ள் தொடர்பான பகுதிகள் கீழே:

புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?
ஆசியாவில்  ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக  ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின்போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக  அமெரிக்க  உளவமைப்பே  இந்த போதைப் பொருள் உற்பத்தியினை  ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையாக உள்ள பாகிஸ்தான் கிராமங்களில் உற்பத்தியாகும் போதைப் பொருட்களிற்கும். இமய மலைச் சாரலில் இயற்கையாக விளையும் கஞ்சாவிற்கும் மேலை நாடுகளில் ஏகப் பட்ட கிராக்கி இருக்கிறது. அவற்றை தரை மற்றும் கடல் வழியாக  மும்பைக்கு கொண்டு வரப் பட்டு  அவை சரக்கு கப்பல்கள் மூலம் மேற்கு நாடுகளிற்கு பயணமாகும்.
எந்த வருடத்தில் இருந்து புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்?
எண்பதுகளின் ஆரம்பத்திலேயே சிறிய அளவில் புளொட் அமைப்பும் புலிகளும்  போதைப்பொருள் கடத்தலை தொடங்கியிருந்தாலும்  84 ம் ஆண்டு புலிகள் உறுப்பினர்கள் சிலர் மும்பையை மையமாக வைத்து கடத்தலை தொடங்கிய பின்னரே பரவலடைந்தது. சாதாரண கப்பல்கள் மூலமாக  போதைப்பொருள் கடத்தலானது தொடங்கப்பட்டது. பின்னர் அவர்களே சொந்தமாக கப்பல்களை வாங்கி உலகளாவிய ரீதியில்  செய்யத் தொடங்கியிருந்தனர்.
புலிகளின் இந்த போதைப் பொருள் வலையமைப்பை பொறுப்பாக நின்று வழி நடத்தியவர் யார்?
இது பல குழுக்களாக இயங்கியது. அதில்  தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர்  முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை  இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இறந்த புலிகளுக்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டதா?
யாரிற்கும் மாவீரர் பட்டம் வழங்கப்பட்டிருக்கவில்லை.   அது மட்டுமல்ல ஆயுதக் கப்பல்கள் தாக்கப்பட்டு அதில் இறந்துபோனவர்கள், விபத்தில் மற்றும் கடுமையாக நோய்வாய் பட்டு  இயற்கை மரணம் அடைந்த எவருமே முறையாகப்  பெயர்கள் அறிவிக்கப்பட்டு மாவீரர்களாக கெளரவிக்கப்படவில்லை. விதிவிலக்காக  கிட்டு சென்ற கப்பலில் இறந்தவர்களும் இறுதி சமாதான காலத்தின் போது தாக்கியழிக்கப்பட்ட ஒன்பது கப்பல்களில் இரண்டு கப்பல்களில் பயணித்தவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு அவர்கள் மாவீரர்களாக கெளரவிக்கபட்டிருந்தனர்.
 
இப்படியாக எத்தனை பேர் இறந்து போயிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
 நூற்றியிருபதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன். புலிகளின் தலைமை அவர்களை மாவீரர்களாக அறிவித்திருக்காவிட்டாலும். புலிகளின் ஆயுதத் தேவைகளிற்காக  போதைப் பொருள் வியாபாரத்திலும் ஆயுதக் கடத்தல்களிலும் ஈடுபடும்போது கடலில் இறந்து போனவர்களிற்காக அவர்களோடு சேர்ந்து இயங்கிய  நண்பர்கள் சிலர் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில்   மனிதர்களற்ற ஒரு சிறு தீவில் அவர்களிற்கு ஒரு நினைவிடம் எழுப்பி அதில் அவர்களது பெயர்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட புலிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையான உறவு எப்படி இருந்தது? 
புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக  வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.
அவரைப்பொறுத்தவரை  ஆயுதங்கள்  வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும்.  அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.
நேர்காணலின் முழுமையான பகுதி:
http://aruliniyan.blogspot.in/2014/02/blog-post.html

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்… : எஸ். ஹமீத்

பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... : எஸ். ஹமீத்

Comments 7

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    “புலிகளின் தலைமைக்கு ஆயுதம் வந்து சேர்ந்தால் சரி என்கிற நிலைமை. அது எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ன வழியாக  வருகின்றது என்று ஆராய்கின்ற அவசியம் எல்லாம் இருக்கவில்லை.
    அவரைப்பொறுத்தவரை  ஆயுதங்கள்  வந்து கொண்டிருக்கவேண்டும் சண்டை நடந்துகொண்டிருக்கவேண்டும்.  அவரை நான் அடிக்கடி துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன் என்று சொல்வதுண்டு.”

    துப்பாக்கியும்  ஒரு  போதைப்  பொருள்தான்
    ஒரு  போதைப்  பொருளை  விற்பனையின்  மூலம்  இன்னொரு  போதைப்பொருள்  வாங்கப்பட்டது  

    இரண்டு  போதைப்  பொருட்களாலும்  அழிவது  மனித  குலம்தான்

    உலக நாடுகளுக்கு  ஆயுதங்கள் விற்பனையில்  முதலிடம் வகிக்கும்  அமெரிக்கா  வெகு விரைவில்  உலக நாடுகளுக்கு கஞ்சா  விற்பனையிலும்  இறங்கும்  

    • Lala says:
      12 years ago

      ஆமாம் , உலகில் முதலாளித்துவநாடுகள் , இடது சாஅரி பொதுவுடமை நாடுகள், போராடும்  போராளி குழுக்கள் எல்லோரிடமும்  இல்லாதது   புலிகளிடம்தான் இருந்திருக்கிறது.
      அவர்களுக்கு  மட்டும்தான் ஆய்தம் தேவையாக  இருந்திருக்கிறது.
      அந்த  ஆயுதங்களை அவர்கள் காதலித்துள்ளார்கள் .அவற்றை Pபெற  என்ன வேண்டுமானாலும்  செய்ய  சித்தமாயிருந்திருக்கிறார்கள்.

      என்ன ஒரு கொடுமையான இயக்கம் ?

      உலகம்  முழ்க்க அன்பும் கருணையும் பொங்கி  வழிந்து  கொண்டிருக்கும்போது புலிகள் மட்டும் ஆய்தங்கள்  மீது இப்படி ஒரு மோகம் வைத்திர்ந்திருக்கிறார்களே ?

      இதை நாம்  கடுமையாக  கண்டிக்க வேண்டாமா ??

  2. ஓணான் says:
    12 years ago

    \\அதில்  தெற்கு புன்னாலைக் கட்டுவனை சேர்ந்த சிறி என்பவர்  முக்கியமானவராக நேபாளத்தில் இருந்து இயங்கினார். ஒரு தடைவை  இந்திய எல்லைப் படையினருடன் நடந்த மோதல் ஒன்றில் கொல்லபட்டுவிட்டார் .// சிறியை போட்டது புலிகளே ( மண்டையன் ரகு ) 

    • Lala says:
      12 years ago

      மாகாத்மா , மவுன்ட்பேட்டன் பிரபு  போன்றவர்களையும் போட்டது புலிகளே !!!!

      • mannan says:
        12 years ago

        கொன்றார்களோ இல்லையோ ஆனால் இலங்கைத்தமிழரின்
        அரசியல் பிரச்சினைய முடித்துவைதுள்ள புலிகளின்தி றமை உலகத்திலே
        எந்த ஒரு அமைப்புக்கும் நிகராகாது.

        விசர் வாத்தியாரும்  மோட்டுப்பிள்ளைகழும் பானைக்குள்
        தலைவிட்ட ஆட்டினை  மீட்பட்கற்கு  முதலில் ஆட்டின் தலையை
        வெட்டினார்கள். பின்பு தலையை மீட்பதற்கு பானையை உடைத்தார்கள்.

        சிங்கள அரசுடன் போர்தொடுத்து வெல்லுமுன்  தமிழர்களையே
        எதிரியாக எண்ணி கொன்றார்கள்.தமிழரிடமே  பகையாளியானார்கள்.  தமிழரின் போராட்டத்தை  புலிகளின் போராட்டமாக மாற்றினார்கள்.

        இலங்கை அரசு புலிகளையும் பயங்கரவாதத்தையும்  அழிப்பதாக
        உலகிற்கு காட்டிக்கொண்டு  புலிகளோடு சேர்த்து அப்பாவி
        மக்க்ளையும்  தமிழரின்  உருமைக்கான  போராட்டததையும்
        புலிகளின்  பயங்கரவாத பெயரை கேடயமாக பாவித்து
        அழித்து விட்டார்கள்.-மன்னன்.

        • subaas says:
          12 years ago

          ohh  poodou

        • Lala says:
          12 years ago

          ##இலங்கைத்தமிழரின்
          அரசியல் பிரச்சினைய முடித்துவைதுள்ள புலிகளின்தி றமை உலகத்திலே
          எந்த ஒரு அமைப்புக்கும் நிகராகாது.##

           புலிகளை அழிக்கும் முன்னர் ,அவர்கள் பலமாக இருந்த  காலத்தில் சர்வதேசத்தின் உதவியில்லாமல் புலிகளை முறியடிக்க முடியாது என்பதை உணர்ந்த  இலங்கை  அரசும்  அதன் அடிவருடிகளும் , இலங்கையில் பயங்கரவாதப்பிரச்ச னைதான் உள்ளதென்றும் அதனை  முறியடிப்பதற்கூதவுமாறும் கோரி  வந்தார்கள் .இதன் மூலம்  அங்கு ஓர் அரசியல் பிரச்சனையோ அல்லது இனப்பரச்சனையோ இருக்கிறதென்பதை அவர்கள் மூடி மறைத்து வந்தார்கள் .

          ஆனால் இப்போது அதன் அடிவருடிகளில் ஒன்று புலிகள் தமிழர்களின் அரசியல் பிரச்சனையை  முடித்து  வைத்துள்ளார்கள்  எனக்கூறுவதன் மூலம் புலிகள்  இத்தனை காலம் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்காகத்தான்  போராடி  வந்தார்கள் என்பதை தன்னையுமறியாமல் போட்டுடைத்துள்ளார்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...