முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பல பில்லியன் ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் தங்கம், பணம் என்பன ராஜபக்ச வளவின் பெட்டகங்களுக்குச் செல்லாது இலங்கை அரசாங்கத்தின் கூட்டு நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியினால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ‘மீடியா வொட்ச்” பத்திரிகை கூறியுள்ளது.
கடந்த மே மாதம் படையினரால் கைப்பற்றப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் குறித்து புலனாய்வு விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்திருந்தமை போதுமானது அல்லவெனத்
தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி, பல பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் குறித்த தகவல்களை கடந்த ஆறு மாத காலமாக வெளியிடாமல் இருப்பது சந்தேகத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளது.