தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்படும் இராசையா புனிதரூபன் அவர்கள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தின் கடும் ஷெல் வீச்சில் படுகாயம் அடைந்துதுள்ளார் என அறியப்படுகிறது.
விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரச சார்பு ஊடகங்களால் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிலையில், நீண்டகால இடைவெளிக்கு பின் இளந்திரையன் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.