புலிகளின் திறமையான பிரசாரம் – அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம் ஜனாதிபதி:

தமிழீழ விடுதலைப்புலிகளின் திறமையான பிரசாரம் காரணமாக இலங்கை அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். டைம்ஸ் செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அரசாங்கம் பிரசார போரில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட இணங்கினால், சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கமுடியும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப்புலிகள், தாம் பலவீனம் அடைந்துள்ள போதெல்லாம், பேச்சுவார்த்தைக்கு தயார் என சர்வதேசத்திற்கு கூறிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்