தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மூவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களால் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா எம்.பியின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் பரவலாகக் கதை அடிபடுகின்றது என்று ஐ.தே.க வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார்.
அவர் இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேரில் சென்று பொன்சேகாவை சந்தித்துப் பேசினார். பின் இச்சந்திப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார். அப்போதே இதனைச் சுட்டிக் காட்டினார்.
பொன்சேகாவைப் போலவே தமிழர் பிரதேசங்களில் பணியாற்றிய ஜெனரல் ஜானக பெரேராவும் கோரமான குற்றங்களைப் புரிந்தவர். அவர் அரசியலுக்கு வந்த வேளையில் மகிந்த அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளால் கொல்லப்பட்டார் என பரவலான சந்தேகங்கள்நிலவுகின்றன.
சகட்டு மேனிக்கு ஏதாவது கற்பனைக்கதைகளை சொல்லி கொலைவெறி அரசுக்கு உசுப்பேற்றி விடுங்கள். அவர்களுக்கு உபயோகமான உங்கள் தகவலால் செய்யப்போகும் கொலையை புலிகளின் மீதிட்டு உலகின் கண்களில் மண்தூவி ஏமாற்ற சந்தர்ப்பம் வாய்க்கும். இல்லை நீங்களே அப்படி ஏதாவது நடந்தால் இறந்தவனின் உடல் மீது ஏறி நின்று அரசியல் நடத்தாலாம். முதலில் கதைவிடாமல் உங்கள் கட்சியை காப்பாற்ற வழி பாருங்கள்.