Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமரிக்காவே ஒத்துழைத்தது:இனக்கொலையாளி ஒப்புதல்,அமரிக்கா மௌனம்

இனியொரு... by இனியொரு...
09/13/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

A Sri Lankan warship, called a Devora, is seen off the side of a navy boat in the sea near the Trinco navy camp in Trincomalee, on the east coast of Sri Lanka2006- 2008 காலப்பகுதியில் ஆழ்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு அமெரிக்கா முழுமையான உதவிகளை வழங்கியது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “தி ஒஸ்ரேலியன்” நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்கா கடற்படையால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்க முடிந்தது போரில் ஒரு திருப்பமாக அமைந்தது. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் இத்தகைய 12 மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை அழித்திருந்தோம். அமெரிக்கர்கள் எமக்கு மிகமிக உதவியாக இருந்தனர். பெரும்பாலான இந்தக் கப்பல்களின் இருப்பிடம் குறித்து அமெரிக்கர்களே எமக்குத் தகவல் தந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் பெரும்பாலான ஆயுதங்களை வெளிச்சந்தையில் வாங்கினார்கள். பல ஆட்டிலறிகள் வடகொரியாவில் தயாரிக்கப்பட்டவை. அவர்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வைத்திருந்தனர்.

அவர்களிடம், சிறிலங்கா இராணுவத்திடம் இருந்தளவுக்கு சமமாக ஆட்டிலறிகளும், மோட்டார்களும் இருந்தன. சிறிலங்கா இராணுவத்தை விடவும் அதிகமாகவும் இருந்தன. அவர்களின் ஆட்டிலறிகள் எமக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தின. அமெரிக்க செய்மதி தொழில்நுட்பம், புலிகளின் ஆயுதக்கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறிய, சிறிலங்கா கடற்படையால் அவற்றைத் தேடிச் சென்று தாக்க முடிந்தது. சிறிலங்கா பெரும்பாலான ஆயுதங்களை இஸ்ரேலில் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்துமே கொள்வனவு செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனக்கொலையாளி கோத்தாபயவின் இந்தக் கூற்றிற்கு அமரிக்கத் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. இதுவரைக்கும் தமிழ் இனவாதிகள் அமரிக்கா எங்களை இரட்சிக்கும் எனவும், அதன் அடியாள் படை போல தொழிற்படும் ஐ.நா ராஜபக்சவைத் தண்ட்டிக்கும் என்று மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். உலக மக்களிலிருந்து ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவும் அமரிக்க அரச பயங்கரவாதத்திற்கு போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கவும் ஈழ மக்களைப் போராடாமல் இந்திய மற்றும் புலம் பெயர் இனவாதிகள் இனவழிப்பிற்குத் துணை போன அமரிக்காவையே நம்பக் கோரினர்.
அதிகார வர்க்கத்தை காக்காய் பிடித்து குறுக்கு வழிகளில் விடுதலை பெற்றுத் தருவதாகக் கூறுவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ரவிராஜ், பரராஜசிங்கம் கொலைகளில் டக்ளசுக்கும் கருணாவிற்கும் தொடர்பு : ரொபேர் பிளேக் அனுப்பிய செய்தி

ரவிராஜ், பரராஜசிங்கம் கொலைகளில் டக்ளசுக்கும் கருணாவிற்கும் தொடர்பு : ரொபேர் பிளேக் அனுப்பிய செய்தி

Comments 1

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    இது ஒரு முக்கியமான செய்தி  ஆனால்  ஒருவரும்  கருத்துகள்  எதையும்  தெரிவிக்கவில்லை  எனது  கருத்துப்  பலருக்குப்  பிடிக்காமல்  இருக்கலாம்  ஆனாலும் இதை வாசிக்கும்  1% வாசகர்கள் எனது நோக்கத்தைப்  புரிந்துகொண்டால்  நான்  மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
    ” நான் கொலை செய்யும்  கருவிகள்  எதையும்  கண்டுபிடிக்கவில்லை  என்பதை  எண்ணிப்  பெருமைப்படுகின்றேன்”  என்று  கூறியிருக்கின்றார்  மின்விளக்கையும் வேறு பல கண்டுபிடிப்புகளையும்  நிகழ்த்திய  தோமஸ் எடிசன் 
    அவர்  தான் கண்டுபிடித்த  மின்  விளக்குக்காகப்  பெருமைப்பட வில்லை  தான் கண்டுபிடிக்க  முயற்ச்சிக்காத  கொலைக்  கருவிகளுக்காகப்  பெருமைப்  பட்டார் 
    எமது  போராட்டத்திலும் நாம்   கொலைக்  கருவிகளுக்குக்  கொடுத்த  முக்கியத்துவத்தை   மனித  நேயத்திற்குக்  கொடுக்கவில்லை  எமது  இயக்கங்கள்  அனைத்தும்  மக்களை  வாட்டுவதில்  ஒருவருக்கொருவர்  சளைக்கவில்லை  என்பதை  தெளிவாகக் காட்டினார்கள் 
    அவர்கள்  துப்பாக்கியை  நேசித்தார்கள் .. மண்ணையும் , மொழியையும் தமது   தலைவர்களையும்  ஏன் தமது   கொடியையும்  நேசித்திருக்கலாம்  ஆனால் மனித  உயிர்களையும்  (துப்பாக்கியின் ) ஆதரவற்ற மனிதர்களின் சின்னச்  சின்ன  தேவைகளையும்  மதித்தார்களா  என்பதை அறிய அவர்கள் முயலவில்லை  
    ஆனால் ஒன்றுமட்டும் உண்மை 
    புலிப்படையை  உலக  நாடுகள் — முக்கியமாக — கனவான்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் International  Community  (I  C ) என்று அழைக்கப்படும் International  Criminals ( I C ) கூட்டுச் சேர்ந்து  அழித்ததற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன 
    1) சிங்கள அரசின் திறமையான வேசித்தனம்  
    இதை ராஜதந்திரம்  என்று பலர் கூறிக் கொள்கிறார்கள் 
    சீனா இந்தியா பாகிஸ்தான் ஈரான் அமெரிக்கா இங்கிலாந்து ஐரோப்பிய  நாடுகள் ருசியா  உள்பட 20 மேற்பட்ட (வலதுசாரி  இடதுசாரி அணிசேரா முஸ்லிம் கிறிஸ்தவ பௌத்த …..)  நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு புலிகளை அழித்த தற்கு  அவர்களின் பொய்களுக்கும் புரட்டுக்களுக்கும் நய வஞ்சக நரித்  தந்திரங்களுக்கும் கிடைத்த வெற்றி என்பதுதான் உண்மை 
    ( இப்பொழுது அந்த வேசி சீனாவுடன் சல்லாபம் செய்கின்றாள்  தங்களுடன் படுக்கையைப் பங்கிடுவதில் வஞ்சித்து விட்டாள் என்பதுதான் அமெரிக்க – இந்திய கூட்டாளிகளின் குற்றச் சாட்டு )
    அவளைத் தமது படுக்கைக்கு இழுத்துவரத்தான் … மனித உரிமை .. விசாரணை … நல்லிணக்கம் … பொறுப்புக் கூறல் ….போன்ற குற்றச் சாட்டுகள் 
    2) புலிகளின் தனித்துவம் 
    சவால்களை எதிர்கொள்ளும் தனம்பிக்கை இருந்தது வேசித்தனம் இருக்கவில்லை 
    ஆம் 
    அவர்கள் எந்த நாட்டினதும்  காலடியில் விழ விரும்பவில்லை 
    இவர்களுக்கு இணையான இயக்கம் உலக சரித்திரத்தில் இருக்கவில்லை
    எதிரியைக் கொலை செய்வதற்கு பல ( விமர்சிக்ககூடிய ) அதிசயத் தக்க வழிகளைக் கண்டுபித்தார்கள்  
    தமது பணத் தேவைகளைத் தமிழ் மக்களிடமிருந்து ( விமர்சிக்ககூடிய வழிகளில் )   பெற்றுக் கொண்டார்கள் 
    அவர்களின் பணம் உலக நாடுகளில் வியாபாரங்களில் முதலீடு செய்யப்பட்டது (ஆனால்  இன்று அந்தச் சொத்துக்களை தேசிய வேடமிட் ட  விசுவாசிகள் சுருட்டிக் கொண்டார்கள் )
    அவர்களின் ஆட்சியில் நாடு நிசியிலும்  நங்கைகள் நகைகளுடன் நடமாடக்கூடிய — உலகில் எங்கும் காணமுடியாத –  நிலை இருந்தது ( பாசிச  ஆட்சியில் இது நடக்கலாம் என்றும்  விமர்சிக்கலாம் )
    தமது மண்ணில் வெளியாரின் முதலீடுகளை அவர்கள் ஊக்குவிக்க வில்லை ( சர்வதேச சுரண்டல் காரர்களுக்கு இது பிடிக்காது )
    தமது மண்ணை அவர்கள் மற்றைய நாடுகளுக்கு விற்க முயலவில்லை ( இவர்களால் தமக்கு நன்மை கிடைக்காது என்பது உலக நாடுகளின் முடிவு )
    “இவர்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் ” என்ற பயம் கனவான்களுக்கு 
    “நாங்கள் இனி என்ன செய்யலாம் ?

    நாங்கள் ஈழத் தமிழர்கள் . “எம்மைத்  தோற்றுப் போன இனம்” என்று மற்றவர்கள் ஏளனமாகக் கூறலாம். அதை நாம் எமக்குள் கூறிக் கொள்ளக் கூடாது.

    உலகளாவிய  வியாபாரத்தில் எமது இனம் கவனம் செலுத்தவேண்டும் 
    பண முதலைகள்தான் நாடுகளின் தலைவர்களை மேய்க்கின்றார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் 
    தனிப்பட்ட தமிழனாக இல்லாமல் — தமிழ் இனமாக–  நாம் நமது இனமானம் காக்க உழைக்கவேண்டும் 
    உலகம் முழுவதும் நாம் பரந்து இருக்கின்றோம் 
    ஒட்டகம் வாழும் பாலைவன நாடுகளிலும் துருவக் கரடி வாழும் வட துருவ நாடுகளிலும் நமது மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள் 
    கொலை ஆயுதங்களுக்கும்  வெடி மருந்தின் சக்திக்கும் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு  அறிவாயுதத்தையும் ஆன்ம சக்தியையும் கையிலெடுத்து  மனித நேயத்துடன் இனமானம் காக்கப் போரிடுவோம் 
    மற்றைய இனத்தவரை மானபங்கம் செய்யாமல் மற்றவர்களின் வயிற்றில் அடிக்காமல் எமது போராட் டத்தை நட த்துவோம் 

    நாம் மீள் எழுந்துதான் ஆக வேண்டும்.

      உடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம்.
     
     காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை
     
     நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது.
     
      நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் .
    நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.
     
    .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று எதிரிகளை உடல்ரீதியாக விழ்துவது இல்லை.
     
     வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் நம் போர் விரியட்டும்
     
      எமக்கான வாழ்க்கை,எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.

    புலிகளின் 12 கப்பல்களை அழித்ததைப் பெருமையாகக் கோத்தபாய சொல்லிக் கொள்ளட்டும் 
    நாம் இரண்டு கப்பல்களை வாங்கி அதற்க்கு தமிழர்களின் இயக்கங்களினால் கொல்லப்பட்ட ஒரு அப்பாவிச் சிங்களவனின் பெயரையும்  சிங்களப் படைகளால்  அநியாயமாகக் கொல்லப்பட்ட ஒரு அப்பாவித் தமிழனின் பெயரையும் இட்டு திரை கடலோடித் திரவியம் சேர்ப்போம் 
    அதை எமது தனித்துவமாக காட்டிப் பெருமைப்படுவோம் 

     அடுத்தாண்டு நாம்  ஈழத்தில் சந்திப்போம்.

    ( இதில் எனது சொந்தக் கருத்துக்களுடன் மணி செந்திலின் கருத்துக்களும் உள்ளன )

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...