புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கிறார் பிரிட்டனின் பாடகி மயா

10.08.2008.

இலங்கை வம்சாவளியினரான “மயா” என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னணிப் பாடகியான மாதங்கி அருள் பிரகாசம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார்.
இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஒளிபரப்பில் மயா ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென மயா  குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதனை மயா. மறுத்துள்ளார். ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்கமற்ற முறையில் தனது நற்பெயரை நாசமாக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டியுள்ளார்.

?நான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில்லை, யுத்தம், குண்டு வீச்சுகளிலிருந்து வெளியேறிய இலங்கையைச்சேர்ந்த என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும். வெளிப்படையாக கூறினால் உண்மையிலேயே சுயமேம்பாட்டை நாடும் யாரோ ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்க நான் முயற்சிசெய்யவில்லை. என்று மயா.கூறியுள்ளார்.

டிலானின் ஒளிநாடா வெளியானதிலிருந்து மயா இன் தனித்துவ அடையாளம், மற்றும் உச்சஸ்தாயி பாடகியென்ற அவரின் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும் நிலமை ஏற்பட்டது. “விடுதலைப்போராளியாக மயா  யின் புகழ்’ சித்தரிக்கப்பட்டுள்ளது.

புலிகள்  சாயலிலமைந்த  மயாவின் பாடலொன்று: