முன்னை நாள் புலம்பெயர் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழு ஒன்றினால் நேற்று இரவு (04/04/2011) அவரது வீட்டிற்கு முன்னால் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். லண்டனின் நடைபெற்ற இந்தத் தாக்குதல் புலிகளின் முன்னை நாள் புலம்பெயர் உறுப்பினர்களிடையேயான பிளவின் வன்முறை மோதலாகக் கருதப்படுகிறது.
இந்த வன்முறை மேலும் தொடரலாம் எனவும் இலங்கை அரசும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்புக்களிடையேயான மோதலின் நேரடி விளைவுதான் இத் தாக்குதல் என நம்பகமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இணையத் தளங்கள் ஊடான மோதலின் பின்னர் இத் தாக்குதல் வன்முறைகள் ஆரம்பமாகியுள்ளன.
‘புதிதாக’ வந்த செயலகத்திற்கும், இதுகாலவரை இயங்கி வந்த செயலகத்திற்கும் இடையில் நடக்கும் மோதல் .
புதுசு, முன்னாள் புலனாய்வுப் பிரிவினாறாம். பழசு ‘காஸ்ட்ரோவின் கீழ் இயங்கியவர்கலாம். இவையள் எல்லோரும் புலிதான். பாவம் அண்ணன் பிரபாகரன். இதுகள பார்க்க குடுத்துவைக்கல.
திட்டம் இல்லாமல் உணர்ச்சி வயப்பட்டுப் போராடினால் எல்லாம் இப்படிதான் போகும்,
இனியாவது திட்டத்தை ஏற்படுத்தி பொது தளம் ஒன்றில் போராடுங்கள்.
இது பெரியஇடத்து சமாச்சாரம். நாம எல்லாம் வம்பிலை மாட்டிக்ககூடாது.
அவங்க அரசியலை பெரிய பிரச்சனையாக எடுக்கிறதில்லை. பிஷினஸ் டீலிங்தான்.
இனமென்னா? குலமென்னா?? கோத்திரமென்னா? எதையுமே அசட்டை செய்யமாட்டாங்க. பணம் என்றால் போட்டு தள்ளிடுவாங்க. இதற்கு போய்ஏன்? இலங்கையரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறீங்க…. குடிக்கிற கஞ்சிசிரட்டையும் பறித்து ஊத்தவா?.
இந்த வன்செயலில் குதூகலிக்க ஒன்றுமே இல்லை. வருந்துவதை தவிர.
வன்முறைகள் கண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். குறிப்பாக இன்றைய சூழலில் பேசித் தீர்ப்பதை விடுத்து போட்டுத் தள்ளும் அணுகுமுறை எமது நீண்ட போராட்டத்தை இன்னும் பின்னோக்கித்தான் நகர்த்தும். இப்பிடியான வன்முறைகளை அனைவரும் ஒன்றாக கண்டிக்க வேண்டும்.
read this
http://www.maruaaivu.com/2011/04/05/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86/#more-3156
புலம்பெயர் தமிழர்களை தமிழீழ விடுதலை என்னும் வலையில் விழுத்தி
தங்கள் சுயநலங்களை அனுபவித்தவ்ர்கள் இவர்கள். இவர்களின் சுயரூபம் மெல்ல மெல்ல
வெளியே வந்தே தீரும். இதில் சம்பந்தப்பட்ட பலர் எதிர்பாராத விதமாக
சட்ட நடவடிக்கைகளிற்கு ஆளாகுவார்கள். எதனையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதில் எத்தனை பேர் தெரிந்தும் தெரியாமல் இந்த கொடியவ்ர்கழுடன்
செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குரியதே.-துரை
உடைத்துப் போட்ட முட்டை மாதிரி குழம்பிக் கிடக்காமல் இதை உட் கார்ந்து யோசித்தால் இது உள்வீட்டு விவகாரம் மட்டும் அல்ல வெளீயே இருந்து வந்த சிலர் வீட்டுக்கு கல்லெறீவதாகவும் எடுக்கலாம். நாங்கள் ஒன்றானால் அது உடைப்பெடுக்கும் வெள்ளமாய் தன் அதிகார மாளீகைகை உடைத்து விடும் என கோத்தபாயாக்களே குள்ளமாய் யொசித்து இதன் பின்னணீயில் இருக்க கூடுமல்லவா?என் க்கென்றால் இதில் ஏதோ சூது இருப்பதாகவே தெரிகிறது..
தமிழ்மாறன் சொல்லிறதில விஷயம் இருக்கும் போல படுகுது.
புலிக்கை இருந்தவங்க, ஏன் பொட்டுடுன்னு போடாம, பொத்திண்டு போட்டுட்டு போயிருக்கிரானுக.
கோத்தபாய கொத்தி விளையாடுறானோ?
த.மாறன் இது எப்படி உங்களால் மட்டும் முடிகிறது. இதுக்கெல்லாம் றூம் போட்டு உக்கார்ந்து யோசிப்பீங்களா? முடியல….
உட் கார்ந்து பேச இது என்ன மண் நிற மனிதர்களது பிரச்சனையா?என் மண்ணீல் பிறந்த என் இனம் தமிழ் இனத்து எமோசனல் பிரச்ச்னை.இதை நம்மை தவிர யாரால் தீர்க்க முடியும்? நாமெல்லாம் ஒன்றானால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு அய்யா.
புலியை புலி வெட்ட எந்த தார்மீகமும் கிடையாது. மக்கள் தான் இதை செய்ய வேண்டும்.
Please don’t make it , it’s their problem. It’s our community social issue. We all have to deal with it
வன்செயலில் குதூகலிக்க ஒன்றுமே இல்லை சொத்துக்காக அடிபடுவது போல் படுகிறது எல்லாம் மலிந்தால் சந்தைக்குவரும்