வரலாறு தெரிந்த காலம் முதல் வளரும் தலைமுறை சமூகவிரோதச் சிந்தனை அனைத்தையுமே நியாயமான வாழ்க்கை முறை என்று கேட்டே முதுமை கொள்கிறது.
பெரும் வியாபார நிறுவனங்களின் கொள்ளையை நயம் மிக்க வியாபாரத் தந்திரம் என்று விதந்து போகிறார்கள். அத் திருட்டுக்கள் சமூகத்தின் பொதுச் சிந்தனையாகிவிட்டது. அளவுக்கு அதிகமான நுகர்வையும் ஆடம்பரக் கொள்வனவையும் திறமை என்கிறார்கள். இவ்வாறான வரையறைக்குள் சமூகத்தைப் பேணிக்கொள்ளும் அரசியலையே ஜனநாயகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்கிய சமூகத்தின் சிந்தனை தனது எல்லையை வரையறுத்திருந்தது.
துரோகிகள் என்று ஒரு பகுதியாகவும் தியாகிகள் என்று இன்னொரு பகுதியாகவும் சமூகம் பிளவுற்றது. அரசியல் அடிப்படை, தத்துவார்த்தப் பின்புலம், கருத்து என்பன எல்லாவற்றிற்கும் அப்பால் பலம் மிக்கவர்களாக இனம்காணப்பட்டவர்கள் பொதுவாகத் தியாகிகளாகக் கருதப்பட்டனர். வலிமை குன்றிய ஆனால் மாற்று அரசியலை முன்வைத்தவர்கள் துரோகிகள் வரை தரம் தாழ்த்தப்பட்டனர்.
சமூக வழக்காயிருந்த இவ்வாறான கருத்தும் சிந்தனையும் பொதுவாக யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தே உருவானது. வெளிப்படையாகத் தெரிகின்ற பலம் என்பதே அங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டது. அந்தப் பலத்தை அடைவதற்கு அயோக்கியர்கள் கூடத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர்.
அறுபது வீதத்திற்கு மேலாக நில உடமையாளர்களாகவோ, நிர்வாக உத்தியோகத்தர்களாகவோ காணப்பட்ட யாழ்ப்பாணம் சார்ந்தே தமிழ்த்
தேசியத்தினது கருத்தியலும் சிந்தனையும் உருப்பெற்றது.
இக்கருத்தியலின் பிரதிநிதிகளாக உருவான விடுதலை இயக்கங்கள் சமூகத்தோடு தம்மை இசைவாக்கம் அடையச் செய்து கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.
– பலமானவர்கள் என நிறுவிக்கொள்ள ஏதாவது ஒரு வழியில் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டனர்.
– தாம் சார்ந்த இயக்கத்தை சுற்றி “நாம்” என்ற கருத்து விதைக்கப்பட்டது.
– ஒவ்வ்வொரு “நாம்” இற்கும் மற்றவர்கள் துரோகிகளாக இனம் காட்டப்பட்டனர்.
– எங்காவது தன்னிச்சையான தாக்குதல்கள் நடந்தால்கூட அதனை உரிமை கோரி தமது பலத்தை இனம்காட்ட முற்பட்டனர்.
– தமது குறுகிய வரலாற்றை ஊதிப் பெருப்பித்து தம்மை பலமானவர்களாகவும் தகுதியானவர்களாகவும் காட்ட முற்பட்டனர்.
– யாராவது மரணமடைந்தால் அதன் அனுதாப அலையை நீட்டிப் பெருப்பித்து இலாபகரமான அரசியலாக்கிக்கொண்டனர்.
இந்தச் சிந்தனை புலிகளின் அழிவோடு இலங்கையில் மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றது. சிறீலங்கா பாசிச அரசுக்கு எதிரான போராட்டங்களை புதிய வழிகளில் முன்னெடுக்க ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.
புலம்பெயர் நாடுகளில் இயக்கங்கள் கையாண்ட அதே வழிமுறைகளை இப்போது அங்குள்ள வியாபாரிகள் கையாள்கிறார்களா என்ற சந்தேகம் அவ்வப்போது கேட்கும் சலசலப்புகளிலிருந்து முளைவிடுகிறது.
இதில் இரண்டு வகையான மனித வியாபாரிகளைப் பார்க்கின்றோம்.
முதலாவதாக புலி சார் பிரமுகர்கள் இரண்டாவதாக புலி எதிர்ப்புப் பிரமுகர்கள்.
புலிசார் பிரமுகர்கள் நடுவே பிளவுகளைக் காண்கிறோம். இவர்களை தமக்கு இடையே சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதுவரை சிறீ லங்கா பாசிச இன அடக்கு முறைக்கு எதிராகப் போராடி மரணித்துப் போனவர்களை வைத்தே இவர்களின் அரசியல் நடைபெறுகிறது.
பிரபாகரன் கொலை செய்யப்பட்டது கூட இவர்களுக்குத் தெரியும். இன்னும் பிரபாகரன் இருக்கிறார் என்று குறைந்தபட்ச அஞ்சலி பிரசுரம் கூட விட மறுக்கும் இவர்களின் வியாபாரத்திற்கு பிரபாகரன் பயன்பட்டுப் போகிறார். அதில் வேறு தேசியத் தலைவர் என்று வரிக்கு வரி கூறும் இவர்களின் அயோக்கியத் தனத்தை ஈழத்தில் மரணத்துள் வாழும் மக்கள் அருவருப்பாகத் தான் பார்கிறார்கள்.
உணவும் உறக்கமும் இன்றி போராடி இறந்து போன அப்பாவிகளின் படங்களை வைத்து இவர்கள் ஆடம்பரமாகக் கொண்டாடும் மாவீரர் தினத்தில் மட்டும் பசிக்காக எத்தனை பெண்கள் உடலை விற்கிறார்கள்? எத்தனை பிஞ்சுகள் பசித்த வயிற்றோடு கண்ணீர் வடிக்கிறார்கள்??
சரி இவற்றை எல்லாம் இணையத் தளங்களில் எழுதித் தொலைப்பவர்கள் யாரென்று நோக்கினால், கொலைகார அரசின் அம்மணமான அடிவருடிகள். இவர்களும் அதே இயக்க வழிமுறைகளையெ பின்பற்றுகின்றனர்.
புலி சார்ந்தவர்களுக்கு வியாபாரம் செய்வதற்கு எப்படி அரசால் கொல்லப்பட்டவர்கள் பயன்ப்பட்டுப் போகிறார்களோ, அரசு சார் அயோக்கியர்களுக்கு புலிகளால் கொலை செய்பவர்கள் பயன்படுகிறார்கள்.
இலங்கை அரசாங்கத்துடன் தமது வியாபார நோக்கங்களுக்காக நேரடியான தொடர்பு வைத்திருக்கும் வியாபாரிகளோடு இணைந்த பலர் தமது ஆட் சேர்ப்பு வியாபாரத்தை ஓ ஹோ என்று நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
புலிகளால் கொல்லப்பட்ட பலர் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடியவர்கள். வேறு வழிமுறைகளை முன்வைத்தவர்கள். இவர்களின் மரணத்தை விற்பனை செய்து ஆட்சேர்கும் குழுக்கள் இப்போது துளிர் விடுகின்றன. இது வரைக்கும் இவர்கள் ஆபத்தான கட்டம் வரை வளர்ச்சியடையவில்லை. மரணித்துப் போனவர்களை வைத்து சம்பாதித்துக்கொள்ள இன்னுமொரு வெளி காணப்படுகின்றது என்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் புலிகளின் தொடர்பில் இருந்தவரும் 80ம் ஆண்டு காலப்பகுதியில் ஒபரோய் தேவன் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலை இராணுவத்தின் ஆலோசகரக இருந்தவரும் பின்னர் மரணிக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் செல்வாக்கு மிக்க உறுப்பினராகவும் ஆலோசகராகவும் இருந்தவருமான அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள் இ ப்போது புலம் பெயர்நாடுகளில் களைகட்டுகிறது.
எது எவ்வாறாயினும் சாம்பல் மேடுகளில் இருந்து பொன் முட்டையிடும் வாத்துக்கள் புலம் பெயர்கின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.
சுதர்சன் அனுப்பிய ஆக்கம் கருத்து மாற்றமடையாத மாற்றங்களோடு பதியப்படுகிறது.
: மாவீரர் நிகள்விற்காக உலகத்தமிழர் “பளையோரமைபு” பெருமையுடன் வளங்கும் “புட்டும் புண்ணாக்கும்” விசேடமாக புலம்பெயர் தேசங்களில் இருந்து இயக்கப்படும் வானொலிவெடிவால் அறிவிப்பாளர்கள் பங்குபற்ருவார்கள் ,,,,,,,விபரம் விரைவில்ல்ல்ல்ல்ல்
சுதர்சன்!
//………………………………………..80ம் ஆண்டு காலப்பகுதியில் ஒபரோய் தேவன் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலை இராணுவத்தின் ஆலோசகரக இருந்தவரும்…….அன்டன் பாலசிங்கம்…//
இதை எழுதிய சுதர்சன்,அதற்கான, ஆதாரபூர்வமான செய்தியையும் வெளியிடுதல் நன்று.
இவ்வாறான மதவடிச் செய்திகளை வலிந்து புகுத்தியதின் நோக்கமென்ன?
எல்லாம் தெரிந்ததாகவும்,எத்தனையோ கால விசயம் ஞாபகம் இருப்பதாகவும் எழுத முற்பட்டு,சொல்ல வந்த விடையத்தைக் கோட்டை விட்டு விட்டீர்கள்.
சுதா்சன், நீங்கள் சில கடந்தகால,நடைமுறை உண்மைகளை இங்கே படம் பிடித்து காட்டியுள்ளீா்கள் நன்றி. இருந்தாலும் நெருஞ்சி கேட்பதுபோல் அன்ரன் பாலசிங்கத்தின் ஆரம்பத்தை இங்கே தேவையற்று குறிப்பிட்டுள்ளீா்களா அல்லது இந்த வேளையில் இதனால் ஏதும் அா்த்தம் உள்ளதா??.
18 ஆம் திகதி, தலைமைச் செயலகம் வைக்கும் பாலசிங்கம் நினைவுக் கூட்டத்திற்கு அரசியல் ஆய்வாளர்கள் தேவையாம். சுதர்சனையும் இறக்கிவிடலாமே.
”வாத்துக்கள்” அழைத்தும் 10 பேர்தான் நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக சென்றார்களாம். மாவீரர் தினத்தில் திரண்ட 20000 மக்கள் எங்கே? எமக்காகவே மக்கள் வந்தார்கள் எண்டு புலம்பிய கூட்டம் எங்கே? நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டம் வைப்பீர்கள். ஒரு எம்பியும் இதற்கு ஆதரவாக வரவில்லையே?. இந்த அரசுதான் தமிழர்களை நாடு கடத்துகிறது. இவர்களை வென்று எடுத்துத்தான் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டுமென்று எல்லா அமைப்புக்களும் சொல்கின்றன. பரிதாமடா உங்கள் அரசியல்.