இலங்கை அரச அதிகாரி அனுர மெதெகெர யாருக்கெல்லாம் பணம் கொடுக்கிறார், ஊடகம் என்ற தலையங்கத்தில் யாரெல்லாம் நச்சு விதை வளர்க்கிறார்கள் என்பவை காற்றோடு உலாவும் வதந்திகள். சுத்ந்திரமான இணையக் கருத்தாடல்கள் பன்முகத் தன்மையை உள்வாங்கிக் கொள்ளும் என எதிர்பார்த்த பின் போர்க்காலம் நம்பிக்கை இழந்து வெறிச்சோடித்தான் காணப்படுகிறது. சைபர் வெளி காட்டாறுகள் இல்லாத கட்டாந் தரை தான்.
இதை எல்லாம் ஒரு புறத்தில் எதிர்காலத்தின் பசிக்கு விற்பனை செய்துவிட்டு புலிகளின் திசைக்குத் திரும்பினால் அங்கு நிலைமையே வேறு. ஈழத்தில் புலிகள் வாழ்கிறார்களா இல்லையா என்பது இப்போதைக்கு விடைகிடைக்கும் வினாவல்ல.
நெடியவன் குழு, கே.பி குழு, இவர்களுக்கு எல்லாம் எதிரான குழு என்று பல குழுக்களாகப் புலிகளின் புலம் பெயர் பிரதி நிதிகள் சிதறிப் போயுள்ளனர். இதை எல்லாம் தவிர நாடுக்டந்த தமிழீழம் சலசத்துச் சரிந்து போயிருக்கிறது.
இங்கே வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு குழுவுமே நாம் முன்னைய புலிகளின் இன்றைய இருப்பு என்று கூசாமல் கூறுகின்றனர். ஒவ்வொரு குழுவையும் புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரித்துக் கொள்வோமென்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும் அவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களின் செல்நெறி என்ன?
இப்போதுள்ள சூழலின் யதார்த்தம் அவலங்களையும், அழுகுரல்களையும், விரக்தியயும், வெறுப்பையும் தனது இயக்கத்தோடு இரண்டறக் கலந்துகொண்டுள்ளது. துயரில் புலம்பும் மக்களின் மரண ஓலத்தை தமது நலன்களுக்காக பகிர்ந்துகொள்ளும் புலம்பெயர் குழுகள், அரசின் நேரடி உளவாளிகள், திரைமறைவுச் சதிகள்,சேர்க்கைகள், இணைவுகள் என்று அத்தனை அருவருப்புகளையும் சுமந்த சாக்கடை போலக் காட்சிதருகிறது. இந்தச் சூழல் தொடர்பாக புலிகளின், அவர்களின் உத்தியோகபூர்வ புலம்பெயர் தலைமைகளின் நிலை என்ன என்பது ஒவ்வொரு மனிதப்பற்றுமிக்க புலம்பெயர் தமிழனும் கேட்டுக்கொள்ளும் கேள்வி.
பல தடைவைகள் நாங்கள் சிக்கலில் மாட்டியிருக்கிறோம் தீர்த்துக்கொண்டதும் வெளியிடுகிறோம் என்று சாவகாசமாகக் கூறிவிட்டுச் செல்கிறார்கள். அதுவும் கொத்துக்கொத்தாகப் பலிகொடுத்துவிட்டுத் தான் சொல்கிறார்கள்.
சிக்கலே இல்லாத நேரடியான மக்களின் உணர்வுகளுக்குப் விடைபகரக் கூடியவற்றைக் கூடப் பேச மறுக்கிறார்கள். திருமாவளவனும், வை.கோவும், நெடுமாறனும் கற்றுக்கொடுத்த பாடங்களோ இவை?
பிரபாகரன் மரணித்துப் போனப்போது அவர்களின் சொந்தத் தேவைக்காக மாவீரர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு கருணாவின் முன்னால் தெருவோரத்தில் கிடத்திவிட்டிருந்தார்கள். முடிந்துபோன அவமானத்தை புறந்தள்ளினால் மக்களின் உணர்வுகளுக்கோ பதில் இல்லை.
அவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்….
-கே.பி என்ற குமரன் பத்மநாதன் யார்? அரசின் உளவாளியா புலியின் தியாகியா? மகிந்த அரசின் மந்திராலோசகரான கே.பியை அம்பலப்படுத்தி பிரச்சாரம் கூட வேண்டாம், ஒரு அறிக்கையாவது போட்டிருக்கலாமே?
– போர்க் குற்றவாளி மகிந்தவை கூண்டில் நிறுத்த என்ன செய்கிறீர்கள்?
– தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசின் அடிமையாக மாறிவிட்டதே, என்ன செய்ய உத்தேசம்?
-அரச துணைக் குழுக்களை தொடர்பான உங்களின் வேலைத்திட்டம் என்ன?
-இலங்கையில் புலிகள் என்று கூறிக்கொள்ளும் ராம் என்பவர் யார், அவரின் அரசியல் நிலை என்ன, அவருக்க்கு எதிரான உங்களின் செயல்திட்டம் என்ன?
– புலம்பெயர் புலிகளின் எத்தனை பிளவுகள் இருக்கின்றன, யார் எதிரியோடு, யார் நண்பனோடு?
– பிரபாகரனைக் காப்பாற்ற ஒருலட்சம் தமிழர்களைத் திரட்டி போராட்டம் நடத்தியவர்கள் நீங்கள், இப்போது மக்களின் மரண ஒலம் கேட்கும் போது எங்கே போனீர்கள்.
– புனர் வாழ்வு என்று கூறிக்கொண்டு மக்களைச் சூறையாடுகிறது ராஜபக்ச அரசு உங்களின் நிலைபாடு என்ன? என்ன செய்யப்போகிறீர்கள்? மக்கள் என்ன செய்யவேண்டும்?
– தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்கள் சூறையாடப்படுகின்றன, அதை எதிர்கொள்வது எப்படி?
– அபலைத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வதைக்கும் தொழிலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் ஏன் பார்த்துக்கொண்டு மௌனமானீர்கள்?
– யார் யாரெல்லாம் மக்கள் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்கள்? அகதிகளுக்கு அந்தப்பணத்தை வழங்குமாறு ஏன் பகிரங்கக் கோரிக்கையை முன்வைக்கக் கூடாது?
– நீங்கள் நம்பியிருந்த ஐரோப்பாவும், அமரிக்காவும், இந்தியாவும் தான் உங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ராஜபக்ச குடும்பத்தை அரவணைத்துக் கொள்கிறதே அவர்களிடன் இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள்.
– நீங்கள் நம்பியிருந்த நட்புசக்திகளின் மறைமுக அல்லது நேரடி உதவியோடுதான் தமிழ் மக்கள் துவம்சம் செய்யப்பட்டார்கள், இப்போது யார் உங்களின் நண்பர்கள், யார் எதிரிகள்?
இப்படி ஆயிரம் சில்லறைக் கேள்விகள்! அரசியல் ஞான சூன்யங்களே பதில் சொல்லும் தகமைபெற்ற, தத்துவ மேற்கோள்களுக்குள் அடங்காத இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதிலை முள்ளிவாய்க்கால் முடிந்து பதினாறு மாதங்கள் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுகிறது.
இது தொடருமானல் ஐரோப்பாவில் தமிழர்களைக் கையாள அனுப்பிவைக்கப்பட்ட அனுர மெதெகெரவும் ஹம்சாவும் தம்மைத் தமிழர்களின் பிரதினிதிகள் என்று அறைகூவினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
//தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசின் அடிமையாக மாறிவிட்டதே, என்ன செய்ய உத்தேசம்?//
//நீங்கள் நம்பியிருந்த ஐரோப்பாவும், அமரிக்காவும், இந்தியாவும் தான் உங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ராஜபக்ச குடும்பத்தை அரவணைத்துக் கொள்கிறதே அவர்களிடன் இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள்.//
நியாயமான கேள்விகள்!
இப்படிக் கட்டுரை போட்டால் புலிகளில் இருபாரும் சிந்திப்பர். இதல்லாது நரிகள், பாசிஸ்டுகள், துரோகிகள் என்று எழுதினால்….? யாரிங்கே வாசிப்பர்??
புலம்பெயர் புலிகளில் பெரும்பான்மையோர் சுயமாக சிந்திக்கும் பழக்கமற்றவர்கள். அவர்களை வழிநடத்தியோர் மேலிடத்து உத்தரவு என்றதும் அதற்கு கீழ்படிந்து போகிறவர்கள் அதனால்தான் கடன் அட்டையில் கடன் வாங்கி கொடுத்தவர்களே அண்னை வந்ததும் தருகிறோம் என்றதும் கோவில்மாடுமாதிரி தலையாட்டி செல்கிறார்கள்.
அண்மையில் ” புதிய திசைகள்” அமைப்பினர் இலங்கை அரசிற்கெதிராக எழிச்சியொன்றை லண்டனில் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் 50 இற்கும் குறைவான தமிழர்களே பங்குபற்றியிருந்தனர்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் அடைந்த அதிர்ச்சி,குழப்பம்,ஆறாத துயரம்,அவமானம் இவற்றையெல்லாந்தாண்டி சில வேலைப் பாடுகள் நடந்து கொண்டுதான் உள்ளன். முதலில் உலகுக்கு சிங்கள இனவெறியின் ஆழத்தைப் புரிய வைக்க வேண்டும்.தமிழின அழிப்பைத் தந்திரமாக் நட்த்துவதை விளக்க வேண்டும்.உலகமெங்கும் மீழ்க்குடியிருப்பு என்று பணம் வாங்கிக் கொள்ளையடிப்பதைக் காட்ட வேண்டும்.சிங்கள அரசுக்கு உதவாமல் அங்கே வதையுறும் தமிழருக்கு உதவ வேண்டும். பல நல்ல உள்ள்ங்கள் பல்வேறு வழிகளில் சிந்தித்துச் செயல் பட்டுக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு, மீள்க் குடியேற்றம்,போர்க்குற்றம் என்று செயல் பாடுகள் நடக்கின்றன். பலன் கட்டாயம் கிட்டும்.யூதர்களைப்போல் மீண்டெழுவோம். நம்பிக்கையுடன் சேர்ந்து உழைப்போம்.மனந்தளராது உலகுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே ஆவண செய்வோம்.
நட்புக்கரங்களாய் என்றூம் இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர் எப்போதும் புன்னகை முகங்களேரடு நம் மண்ணீன் வேர்களோடு உறவுப்பாலமாகவே இருக்கிறோம்.ஆனால் நம் மண்ணீல் இருப்பவர்களே இங்கே இப்போதுதான் நாமெல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் ஆனால் பழயபடி விவசாயத்தில்தான் இன்னும் முழுமையாக இறங்க முடியவில்லை என் கிறார்கள்…………தினசரி சாவு வீடுகள் நிகழ்ந்த மண்ணீல் இப்போதுதான் சந்தோசம் பூக்கத் தொடங்கி இருக்கிறது,இந்த கோதாரி விழுவார் இல்லை எனும் கொண்டாட்டமும் ஊருக்கு வந்திருக்கிறது……நீங்கள்தாம் உங்க வெட்டி முறீகிறீர்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.அவர்களூக்கு அங் கு காசுதான் தேவை உங்கள் உறவுகளூக்கு கடன் வாங்கியெண்டாலும் அனுப்பி அவையை நல்லா வைச்சிருக்க் பருங் கோ.
ஏன் தமிழ்மாறன் நாம் விவசாயம் செய்யமுடியாதுள்ளது அதற்கு உரிமை கோரியா போராட்டத்தை ஆரம்பித்தோம். மக்கள் சொல்லமுடியாத வேதைனைகளை அனுபவித்து விரக்தியிலிருக்கிறார்கள். அவர்களிடம் போராடு என்று சொல்லமுடியாது அங்கெழும் சிறு தீப்பொறியையும் நசுக்கும் வேலையை நாம் செய்ய கூடாது. எல்லோரும் தனிப்பட முடியாமானவரை பொருளாதார உதவிகளை செய்யவேண்டும். ஆனால் முள்வேலிக்கு பின்னால் இருப்பவர்களை விடிவிக்க நாம் இங்கு போராடலாம்தானே!
நீங்கள் எல்லாம் பீஎ,எம் எ., படிக்கத் தொடங்கின போராட்டத்தில் சாதாரண விவசாயிக்கு எந்த சம்பந்தமும் இல்லை.விவசாயி தோட்டம் செய்தால்தான் சோறூ சாப்பிடலாம் சும்மா நாட்டுப் பற்றாளர், மாவீரர்,மாமனிதர் எண்டு இனியும் சனத்த பேய்க்காட்டேலாது.இளம்பிள்ள வேளாண்மை வீடு வந்து சேராது எண்டு அண்டைக்கே பெரியவர்கள் சொல்வதைக் கேட் காமல் போட்டுத் தள்ளூவதிலேயே குறீயாக இருந்தீர்கள் இப்போது என்ன நடந்தது.திங்க் பிபோர் யு ஸ்பீக்கிங்.
தன்னுடைய தகவல்களைச் ‘சம்பந்தன் ஐயா’விடமிருந்த்து thamilmaran பெறுகிறாரா? அல்ல்து ‘டக்ளஸ் ஐயா’விடமிருந்து பெறுகிறாரா’?அலலது அவர்களுடைய முகவர் யாரிடமிருந்த்தாவதா? ……அ..ல்..ல..து……. எல்லருக்கும் பெரிய ஐயாவிடமிருந்தே பெறுகிறாரா?
நாங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறோம்.
90% மக்கள் முகாம்களிலிருந்து ‘மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர்’ என்று ஐ.நா. அமைப்புக்கள் அறிவிக்கின்றன.
வன்னியில் 90% மக்கள் முகாம்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப் பட்டுள்ளார்களே ஒழிய, அவர்களது இருப்பு முகாம் இருப்பை விடக் கேவலமாகவே உள்ளது. (இதைப் பற்றி “புதிய பூமி” கட்டுரை ஒன்று வந்து சில இணையத்தளங்களிலும் பிரசுரமானது).
தமிழ் மக்களின் விடுதலை பற்றிப் பேசுவோர் ஒரு காலத்தில் வன்னி மக்களைப் பற்றி நிறையப் பேசினார்கள்.
இப்போது, பாக்கிஸ்தான் வெள்ள அகதிகள் பற்றித் தமிழரிடயே உள்ள கவனிப்பைக்கூட வன்னி மக்கள் பெறுவதில்லை.
பழைய பாடசாலை ஒன்றுகூடல்கள், ஊர் ஒன்றுகூடல்களென்று கூடிக் கோவில் குடமுழுக்கு பொன்விழா பவளா விழ பித்தளை விழா இரும்பு விழா என்று எதெதற்கோ எல்லாம் நிதி திரளுகிறது.
இது தான் எங்கள் அவலம்.
சிவானந்தன், நீங்கள் எல்லாவற்றயும்தான் பேசுறீயள் ஆனால் வீட்டுக் கதவை பூட்ட மறந்திட்டியள்,கள்ளேனெல்லே உள்ள வரப் போறான்.கமலாவும் இதைத்தான் எனக்கு நெடுக சொல்லுறவ.
தமிழ்மாறன், கொஞ்சம் விளங்குகிற மாதிரிச் சொன்னால் உதவியாயிருக்கும். எந்தக் கள்ளனைப் பற்றிக் கதைகிறிர்கள்?
கூட்டமைப்புக்காரரையா அல்லது அரசாங்கக் காரரையா அல்லது வேறெவரையுமா?
தமிழ்க் கூட்டமைப்பும்,சம்பந்தர் அய்யா தலமையும் நமது காவல்,நமக்கான சனநாயக அரண்.நான் பேசியது உங்கள் நலன்.
போட்டு எடுப்பதில் கில்லாடி நீங்கள் தமிழ்மாறன் உளறிவிட்டார்
பாரதி நாம் மீண்டு எழுவது என்றால் மேற்படி விடயங்களுக்கு முதலில் தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார ராணுவ அடக்குமுறைகளுக்கு இன்றைய நிலைமைகளுக்கு ஏற்ப தீர்வு காண்பதென்றால் முதலில் சகல விட்டேத்திகளையும் இனங்கண்டு புறந்தள்ளவேண்டும். இல்லாது விடின் புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்தையும் தூக்கி வந்து தமிழ் தேசியம் பேசி புலம் பெயர் உள்ளூர் மக்களின் சேலையையும் வேட்டியையும் கூட உரிந்து கொண்டு போய்விடுவார்கள். போராட்டத்திற்க்கு நிதி சேகரிப்பதாக கூறி, எத்தனை பேர்? அவன் அவன் குளிரில் உறைந்து நித்திரை கொள்ளாமல் உழைத்த பணத்தையும் கிரெடிட் காட்டில் கடன் எடுத்து கொடுத்த பணத்தையும் தமது பையில் போட்டார்களே. 2006 இற்கு பிறகு எந்த ஒரு பணமும் வன்னிக்கு செல்லவில்லை என்றே பேசப் படுகிறது. ஆக நீதியான முறையில் அற்பணிப்போடு நிதிசேகரித்து நிதி கையாடல் செய்யாதோரைத்தவிர கையாடல் செய்து சுகபோகம் அனுபவிப்போருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து விபச்சார தொளிலில் ஈடுபடலாம் நோகாத? உழைப்பு!
பாரதி,
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்கும் புலம் பெயர் அமைப்புகள் என்ன செய்கின்றன என்று தெரியாது. தெரியாதவன பற்றி என்ன பேச்சு? தமிழர் கூட்டமைப்பு சிங்கள அரசின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கம் அமைப்பு. அதையாவது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
MR. BHARATHY. YOU ARE RIGHT. ALL YOUR QUESTIONS ARE THE QUESTIONS OF THE PUBLIC. NOW THE PEOPLE ARE NOT LOOKING FOR ANSWERS FOR YOUR QUESTIONS. THEY ARE READY TO LOOK AFTER THEMSELF. THERE IS NO ANY BLOODY DAMNED LEADER FOR OUR TAMILS. NO ONE CAN GO INFRONT OF THE PEOPLE AND SAY THAT THEY ARE THEY LEADERS. THE TAMILS IN ANY WESTERN COUNTRY ARE DEAD TAMILS. THEY HAVE NOTHING TO DO WITH THE PROBLEM OF THE TAMILS IN SRI LANKA. THE TAMILS IN SRI LANKA ARE NOT ANY ONE THESE QUESTIONS EITHER. THESE QUESGTIONS JUST FOR PASSING TIME AND MAKE THIS SITE TO BE FILLED UP IN THE NAME OF THE SOME HOT TOPS. THERE YOU MAY BECOME A GOOD WRITER AND ALSO PEOPLE IN THE WESTERN COUNTRIES MAY THINK ALSO THAT YOU MIGHT KNOW LOT OF THINGS ABOUT OUR COMMUNITY. I HAVE MY FAMILY PEOPLE IN VADAMARACHI, VISVAMADU, VAVUNIYA AND COLOMBO. MY BROTHER ALREADY MOVED TO VISMADU. AND ALSO HE ALREADY OPENED HIS BUSINESS IN THE SAME PLACE. NOW HE IS REPARING HIS HOUSE. SAME WAY, YOU HAVE TO HELP YOUR FAMILY AND LET OTHERS HELP THEIR FAMILY. THOSE WHO HAVE LITTLE MORE INCOME CAN HELP THEIR FRIENDS. AND THEN THEY IN SRILANKA KNOW WHAT TO DO AND HOW TO DO. PEOPLE IN SRILANKA DON’T WANT OUR ADVISE BUT LITTLE HELP. WHILE WE ARE ALL HERE , WE CANNOT DO MUCH OTHER THAN WHAT WE CAN LITTLE HELP. ALL THESE UNANSWERED QUESTIONS WILL NOT BE NECESSARY FOR OUR FUTURE GENERATIONS. WE DON’T WANT TO TALK ABOUT THOSE WHO WERE COLLECTING MONEY FROM THE PEOPLE BECAUSE IT IS JUST WASTING TIME. WE DON’T WANT TO DEPEND ON ANY OLD POLITICIANS BECAUSE THEY SPEAK POLITICS FOR THEIR POLICITICAL LIFE. WE DON’T WANT TO TALK ABOUT V.KO, THIRUMAVALAVAN, NEDUMARAN OR ANY OTHER POLITICIANS BECAUSE THEY ALL PAID POLITICIANS, CAME TO SPEAK ON BEHALF OF LTTE NOT FOR THE PEOPLE. WE DON’T WANT TO TALK ABOUT OTHER REST OF THE TIGER LEADERS BECAUSE THE PEOPLE KNEW IT WAS ONLY THE GREAT LEADER CAN ACHIEVE AND NO BODY ELSE THAT IS WHY THEY GAVE ALL THEIR SUPPORT. THE PEOPLE WILL NEVER SUCH KIND OF SUPPORT FOR ANY ONE EVEN IF HE SEEEMED TO BE BETTER THAN PRABHAKRAN, THE PEOPLE WILL NOT ACCETP HIM AS A LEADER LIKE PRABHAKARAN. IT WAS A GREAT IMAGE, PRABHA HAD BUILT UP IN HIS LIFE. NO BODY CAN DO IT EVEN IN THEIR DREAM. URUTHIRAKUMARAN JUST WASTING HIS TIME WITH THOSE WHO ARE CLOSE TO HIM. WHAT COULD THE GREAT LEADER DO OTHER THAN HE COULD HAVE SACRIFICED HIS OWN LIFE , WIFE, CHILDREN AND ABOVE ALL HIS DREAM OF TAMIL EELAM. THOSE WHO WERE WITH HIM , CHEATED HIM , PEOPLE WHO WERE COLLECTING MONEY FROM WESTERNCOUNTRIES CHEATED HIM, ALL MEDIA GUYS IN THE WESTERN COUNTRIES , CHEATED HIM, PAID POLICITCAL GUYS IN INDIA , CHEATED HM, EVERYONE , I MEAN ALMOST EVERYONE CHEATED HIM AND STILL HE FOUGHT HIS WAR AND NOW HAS MADE A HISTORY WITH ALL UNSPEAKABLE PAINFUL STORIES WHICH WILL BE REMEMBERED BY OUR FUTURE GENERATIONS FOR EVER TO LEARN WHAT WILL BE CONSEQUENCES OF DISUNITY OF TAMILS WHO WERE LIVING DURING THE TIME OF THE GREAT LEADER.
தமிழ்மாறனின் புலம்பல் ஓங்கி ஒலிக்கிறது .சம்பந்தன் ஐயா திருகோணமலை பகுதிகளில் நல்ல காணிகளை எல்லாம் கைப்பற்றி வருவதாக திருமலை நண்பர் என்னிடம் சொன்னார்.அவருக்கு கம்பிக்குள் இருக்கும் மக்களை பற்றி கவலைப்பட நேரமில்லை.அவரும் ராஜபக்சேயை போலவே இந்தியாவின் செயல் திட்டத்தில் உள்ளார்.இந்தியாவில் பழம்குடி மக்களையும் இவ்வாறு தான் கம்பிக்குள் வைத்திருக்கிறது இந்திய அரசு.ஆகவே வாழ வழியில்லாத வன்னி மக்களை விட அவர்கள் சம்மதிக்க போவதில்லை .நாம் இங்கிருந்து இந்த அநீதியை வெளிக்கொண்டு வருவதில் உங்களுக்கு என்ன இடைஞ்சல் .?????
“பழைய பாடசாலை ஒன்றுகூடல்கள், ஊர் ஒன்றுகூடல்களென்று கூடிக் கோவில் குடமுழுக்கு பொன்விழா பவளா விழ பித்தளை விழா இரும்பு விழா என்று எதெதற்கோ எல்லாம் நிதி திரளுகிறது.,,”,,,,,,,,,,,,,,,,,,சரியான சாட்டை அடி !!
பாரதியின் நியாயமான கேள்வி எங்கள் ஒவ்வொருவரையும் நோக்கி எழவேண்டும். நாங்களும் சிந்திக்க வேண்டும், கேள்வி கேக்க வேண்டும் எந்த கேள்வியும் முரண் பாடுகளை தோற்றுவிக்காது எங்கள் சமுக விடுதலையை நோக்கி உந்துதல் வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொள்ளப்பட்ட ஒரு தலைவனின் சாவினை கூட முன் அறிவிக்க முடியாத சமுகம் ஒன்றில் இருந்து அடுத்த படியை தாண்ட நாம் மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும்.
பாரதி அர்த்த முள்ள இன்றைய காலத்திற்கு அவசியமான கட்டுரை இவர்களை இனம்கண்டு புறம்தள்ளவிடின் ராகவன் சொல்வது போல்சம்பவங்கள் நிட்சயம் நடக்கும் புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்து விடுதலை செய்யப்பட்டுள்ள எனது உறவுக்கார பெண்ணிடம் தொலைபேசியில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது தன்னுடன் இருந்த வேறு போராளிகளையும் அரசு விடுதலை செய்ய முன்வந்ததாகவும் ஆனால் வெளியில் வந்தால் எங்கே போவது என்பது தெரியாமல் அவர்கள் முகாமை விட்டு வெளிவர அவர்கள் மறுத்ததாகவும் கூறினார் . ஆனால் இங்கே பணம் சேர்த்து பழக்கப்பட்டவர்கள் இன்னும் தங்கள் இருப்பை பெருக்கி கொள்ளவே முனைவது தெரிகிறது .