இந்தியா சீனா போன்ற நாடுகளின் பின்பலத்துடனும், மேற்கின்
ஆதரவுடனும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முள்ளிவாய்க்காலில் மட்டும் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச அரசு தேசிய இனப் பிரச்சனை நாட்டில் இல்லை எனச் மறுபடி கூறி வருகிறது. பேரினவாதத்தின் பிரதிநிதிகளான இரு பெரும் கட்சிகளும் தேர்தலுக்கான தமது இனவாதக் கருத்துக்களை விதைக்க ஆரம்பித்துவிட்டன. பேரினவாதம் புலம் பெயர் நாடுகள் வரை இப்போது நீட்சியடைகிறது. ராஜபக்சவின் இலங்கைத் தொலைக்காட்டி நேர்காணல் இதற்கான சிறந்த சாட்சியமாகும்.
“இன்று வெளிநாடுகளிலிருக்கும் ஒரு சிறிய பிரிவினர் இலங்கை ஒரு மோசமான நாடு என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலருக்கு தமிழ் மொழியோ, வடக்கிலிருக்கும் தமிழ் ஊர்களின் பெயர்களோகூடத் தெரியாது” என்றார் அவர்.
இலங்கையில் இருக்கும் சிலரே இவர்களுக்குத் தவறான தகவல்களைச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும், இவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் எதுவும் தமக்குக் கிடையாது என்றும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி அலைவரிசைகள் வாயிலாக நடத்தப்பட்ட இந்த நேரடி பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வில், நாடு முழுவதும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தமது பிரச்சினைகள், பிரதேசத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயகார உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.








மகிந்தா இலங்கைக்கு கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்றூ தருவாரா? நாம் வெல்லும் வரைக்கும் எமக்கு தூக்கம் வருவதாக இல்லை.டில்சான் பாக்கிஸ்தானை தூக்கி மிதிப்பாரா? அவுஸ்டேலியாவை ஆட்டிப் படைப்பாரா? நாம் கப்பை வென்றாக வேண்டும்.
மகிந்தவின் உள்நோக்கத்தில் நான் உடன் பாடில்லை. இருப்பினும் தமிழ் தேசியம் பேசுவோரில் இன்றும் இலங்கையில் வாழும் பலருக்கு வடக்கு கிழக்கில் உள்ள ஊர் பெயர்கள் தெரியாது. ஒரு தமிழ் தேசியர் எனது ஊர் எது எனக் கேட்டார் நான் ஊர் பெயரை சொன்னேன் அவர் சொன்னார் அப்பா நீர் வடமராச்சியா என்று நான் ஆம் என்றேன் உடனே அவர் கேட்டார் அப்ப நீர் வல்வெட்டிதுறையா என்று நான் சொன்னேன் இல்லை நான் பருத்தித்துறை என்று அவர் மீண்டும் என்ன நீர் உமது ஊரே உமக்குத் தெரியாதா பருத்தித் துறை எண்டாலும் வல்வெட்டி துறை தானே என்றார் அந்த சாவகச்சேரி பொறியியல் ஆளர். இப்படித்தான் எம்மில் பலர் இன்றும் உள்ளனர். யாழ்பாணத்தாருக்கு யாழ்பாணத்தில் உள்ள ஊர் பெயரும் தெரியாது பிற மாவடாங்களில் உள்ள பெயரும் தெரியாது. அதேபோல் மட்டக்களப்பில் மன்னாரில் வவுனியாவில் உள்ளோருக்கு ஏனைய இடங்களில் உள்ள இடங்களின் பெயர் தெரியாது.
ராகவன்,
யூதா்கள் இஸ்ரெல் என்ற நாட்டை உருவாக்கும் போது அங்கு கொண்டு செல்லப்பட்டவா்களில் ஒருவருக்குமே அந்த நாட்டு மொழி தெரியாதென்பதும்,இன்று உலகெங்கும் வாழும் யூதா்களில் பெரும்பான்மையினருக்கு இஸ்ரேலின் ஊா்களின் பெயா்களோ ஒழுங்கைகளின் பெயா்களோ தெரியாது,ஆனால் அவா்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த நாட்டை யாரும் அணுகமுடியாமல் பார்த்துக்கொள்கின்றார்கள் அதற்குக்காரணம் ஆன்மாவில்,இரத்தத்தில், அவா்கள் தம்மை //நான் யூதன்// என்று எழுதி இருப்பதல்லாது வேறெதுவுமில்லை.
அழுத்தங்களிலுந்து ராயபக்ச புலம்புவது புரிகிறது.
ஆத்மார்த்தமான உண்மை.அனுபவ நிதர்சனம்.நம்மை நாம் தமிழராய் உணர்வோம், தமிழராய் உயர்வோம் இந்த உணர்வில் தமிழை வாழவைத்து தமிழனைத் தமிழன் வாழ வைப்போம்.ராசபகச் கம்ப்லெய்ன் பண்ணாதிருக்க அவருக்கு வாய்ப்புக் கொடுப்போம் அப்போதுதான் இலங்கை கிரிக்கெட் அணீயில் முத்தையா முரளீக்கு பின்னால் இன்னொரு தமிழனுக்கும் வாய்ப்பு வரும்.
முப்பது வருடங்களுக்குமுன் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் இலங்கையில் சிரித்த முகத்துடன் ஒரு இனம் உண்டு, அது சிங்கள இனமொன்று என்பதே. தமிழரின் பிரச்சினை தெரியவந்தபோது அவர்கள் கேட்டது வந்து குடியேறிய தமிழர் எப்படி தனிநாடு கேட்கலாம் என்று. அத்தனை துரம் சிங்கள பேரினவாதம் உலகெங்கும் பிரச்சாரம் செய்து இன்றுவரை பலரின் கண்களை குருடாக்கி வைத்துள்ளது. ஆனால் இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர் என்ற இனம் என்பது அத்தனை தமிழ் ஊர்களின் பெயர் தெரியாத தமிழர்களால்தான் இன்று உலகெங்கும் தெரியவந்துள்ளது. அரசியலில் ஈடுபடவும் தேசியம் பேசவும் ஓரளவு சரித்திரம் தெரிந்துதான் இருக்கவேண்டும், ஆனால் அதற்காக அத்தனை தமிழ் குக்கிராமங்களின் பெயர்களும் அவை எங்கு உண்டென்ற வரைபடமும் மனப்பாடமாக இருக்கவேண்டுமா?