இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் நடவடிக்கைகள் இலங்கை அரசைத் மேற்கு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அழுத்தங்களாகவே அமைந்திருக்கும் நிலையில் பலஸ்தீன அரசு தனது அங்கீகாரத்தைக் கோருகிறது.
ஐக்கிய நாடுகளில் பார்வையாளராக பலஸ்தீனம் சார்பில் நியமிக்கபட்டுள்ள மன்சூர் இதனை இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
உரிமைக்காகப் போராடுவதாகக் கூறும் புலம் தமிழ் அமைப்புக்கள் பலஸ்தீனத்திற்கு இதுவரை நேசக்கரம் நீட்ட முன்வரவில்லை. குறைந்தபட்சம் அறிக்கைகள் கூட வெளிவரவில்லை. தென் சூடானில் அமரிக்க சார்பு பிரிவினைக்கு பக்கம் பக்கமாக வாழ்த்தியவர்கள் பலஸ்தீனியர்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் நண்பரை ஆதரித்து ஈழத்தமிழர் தமது தலையிலே தாமே நெருப்பை அள்ளிக்கொட்ட தயாரில்லை.