Saturday, March 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை

இனியொரு... by இனியொரு...
04/17/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
‘பயங்கரவாதிகளுக்காக உண்ணாவிரதம் இருத்தல்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 16ம் திகதி அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆக்கமொன்றிலேயே இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக கனேடிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் கனேடிய பாராளுமன்றத்துக்கு அருகில் தமிழர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் புலிக்கொடி ஏந்தப்படுவதை அந்தப் பத்திரிகை கண்டித்துள்ளது.

“தீவிரவாத கனேடிய முஸ்லிம்கள். ஹிஸ்புல்லா அல்லது ஹமாஸ் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டம் செய்யும்போது ஏற்படுகின்ற வெறுப்பே தமிழர்கள் புலிக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்யும்போதும் எமக்கு ஏற்படுகிறது” என்று குறிப்பிடும் அந்தப் பத்திரிகை,

“அவர்கள் கனேடிய கொடிகளுக்கு அருகில் புலிக்கொடிகளை ஏந்திநிற்பது இன்னும் மோசமான விடயம். அது எமது நாட்டை அவமதிக்கும் செயல்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறது.

சிறுவர்களைப் பலவந்தமாகப் போரில் ஈடுபடுத்துகின்ற, அரேபிய நாடுகளில் அறிமுகமாக முன்னரே மோசமான பல பயங்கரவாதத் தாக்குதல்களைச் செய்திருந்த புலிகள் இயக்கத்தின் கொடி கனடாவில் பறக்கவிடப்படுவது ஆத்திரமூட்டும் செயல் என்றும் அந்தப் பத்திரிகை சாடியுள்ளது.

“நாம் முன்னரும் பல தடவைகள் எழுதியதைப்போல, கொழும்பிலுள்ள சிங்கள மேலாதிக்கம் கொண்ட அரசாங்கத்தினால் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து நாம் அனுதாபம் கொள்ளாமல் இல்லை” என்று மேலும் குறிப்பிடும் அந்தப் பத்திரிகை, தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் மனிதாபிமானமற்ற உத்திகளைக் கடைப்பிடித்திருக்காவிட்டால் தமிழ் மக்கள் நிச்சயமாக தமது கோரிக்கைகளுக்கான உலக அனுதாபத்தைப் பெற்றிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தாலும், கனடாவிலுள்ள பல்வேறு அமைப்புக்களுக்கூடாகவும் விடுதலைப் புலிகளுக்குப் பெருந்தொகைப் பணம் சேர்க்கப்பட்டதாகவும், அவ்வாறு பணம் கொடுக்காத பலரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நசனல் போஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றி, புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட அந்த இயக்கதைச் சேர்ந்த பலரையும் சுற்றிவளைத்திருப்பதாலேயே கனடாவிலுள்ள புலி ஆதரவாளர்கள் விரக்தியடைந்துள்ளார்கள் என்று குறிப்பிடும் அந்தப் பத்திரிகை,

“உண்மையிலேயே இவர்களுக்கு அங்கே அல்லல்படும் மக்கள் குறித்த அனுதாபம் இருக்குமாயின், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளிடம் கூறவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

கனடா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, சுவிற்ஸர்லாந்து, நோர்வே உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடத்திவரும் போராட்டங்கள் அடிப்படையில் வடக்கு மக்களின் அவலங்களில் குவிக்கப்படாமல், விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் புலி ஆதரவுப் போராட்டங்களாகக் காணப்படுவதால், அவை எதிர்பார்த்த பயனை மக்களுக்குத் தரவில்லை என்று இந்த நாடுகளின் இராஜதந்திரிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சரியோ, தவறோ இந்த நாடுகளிலெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பின் கொடியை பாரியளவில் ஏந்திக்கொண்டு போராட்டம் செய்தால், அவை அந்த நாடுகளுக்கு எரிச்சலூட்டுமே தவிர, தமிழ் மக்களின் உண்மையான அவலங்கள், நியாயமான கோரிக்கைகள் மீது அனுதாபத்தைப் பெற்றுத் தராது” என்று அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எம்மிடம் கருத்துத் தெரிவித்தார்.

“உலக ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் தமிழர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்கள் அவர்கள் எதிர்பார்க்கும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது மட்டும் உண்மை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
THANKS: inllanka.com

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வெயிலில் நிற்கச்சொல்லி தண்டிக்கப்பட்ட பள்ளி மாணவி மரணம்: தில்லியில் துயரம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In