Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை. : நெற்கொழு தாசன்

இனியொரு... by இனியொரு...
12/21/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

exileபுலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின்  கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது.

ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும், மட்டுமில்லாமல் இயங்கு நிலை மறுக்கப்பட்ட போதிலும் அதனை உடைத்து தமக்கான இலக்கிய தளத்தினை கட்டமைத்த ஒரு தரப்பினரும், என தம்பண்புசார் நிலைகளில் இயங்குகின்ற ஒரு தளப்பின்னணியூடாகவே இன்று புலம்பெயர் இலக்கிய தளத்தினை நோக்கவேண்டி உள்ளது.

உண்மையில் ஒரு படைப்பாளிக்கு அவன் இயங்குகின்ற பண்பு நிலையானது மறுக்கப்படல் மிக பெரும் அவல நிலை என்பதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறுக்க முடியாது. அப்படி மறுக்கப்பட்டதனை நியாயப்படுத்தும் நோக்கமும் இப்பத்திக்கு கிடையாது.

புலம்பெயர் படைப்பாளியின் படைப்பினை  வெளிக்கொண்டு வருவதில் அல்லது வெளிச்சமிடுவதில் அந்த படைப்பாளியின் இயங்குகின்ற பண்புசார் நிலை முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு சிறந்த படைப்பினை உருவாக்கும் படைப்பாளி அவன் இயங்குகின்ற பண்பு நிலையினைக் கொண்டு தரம்பிரிக்கப்பட்டு, அந்த படைப்பினை உள்வாங்குவதானது அல்லது ஒருவகை காழ்ப்புணர்வோடு விமர்சிப்பதானது புலம்பெயர் இலக்கியத்தளத்தில் பெரும் சாபக்கேடாகவே உள்ளது. இத்தகைய செயற்பாடானது இன்றைய இயங்கு நிலையில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு முதிர்வு நிலையினை அடைந்துள்ளது. இதனூடாக பல படைப்புக்கள் சராசரி வாசிப்பு மனநிலை கொண்ட மக்களிடம் சென்றடையாமல் கூட இருக்கிறது.

ஒரு சமூதாய கட்டமைப்பில் மக்களை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பானது அந்த சமூதாயத்தில் இயங்குகின்ற படைப்பாளிகளையே சாரும். புலம்பெயர்ந்து இன்னொரு சமூகத்தளத்தில் வாழ்வினை கட்டியமைக்கும் ஒரு மக்கள் கூட்டமானது,  அந்த சமூதாயத்தின் பண்பியலை சடுதியாக உள்வாங்கி விடவே முனையும். பண்பியல் மாற்றங்களை உள்வாங்கி அதனுள் அமிழ்ந்து  போகும்  சமூகமானது தம் சுய அடையாளங்களை இழந்துவிடும். இன் நிலையில் இருந்து சமூகத்தினை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த சமூகத்தின் படைப்பாளிகளையே முழுவதுமாக சார்ந்துள்ளது.

அந்தவகையில்  புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகள் உன்னதமான சேவையினை ஆற்றிவருகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஈழத் தமிழ் மக்களுக்கென்று ஒரு குறியீட்டு படிமம் உலக அரங்கில் உருவாக்கி உள்ளது என்றால் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக படைப்பாளிகளே உள்ளார்கள் என்பது நிதர்சனமானது.

இருந்தபோதிலும், இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை வெளிக் கொணர்வதில் அல்லது ஏற்றுக்கொள்வதில் புலம்பெயர்ஈழத்தமிழ் படைப்பாளிகளிடையே பாரியதொரு இடைவெளி உருவாக்கப்பட்டு உள்ளது. தம் பண்புசார் தளத்திற்கு மட்டுமே உரித்தான படைப்பாளனை அல்லது படைப்பினை கொண்டாடும் அதே வேளை மாற்றுத்தள படைப்பாளியை அல்லது படைப்பினை புறந்தள்ளுவதாகவும் அது அமைகிறது. புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அமைப்பு ரீதியான பிரிவுகளுக்கு இன்னும் வழிகோலும் நிலையாகவே இதனை கருதவேண்டும்.

நோக்கு ரீதியில் முன்னைய காலங்களைவிட அதிகளவான புலம்பெயர் படைப்பாளர்கள் உருவாகி இருந்தாலும்,  படைப்புகளின் தன்மையானது பண மற்றும் தனிப்பட்ட செல்வாக்குகளாலும் நிர்வகிக்கப்படுகின்ற அல்லது வெளிக் கொணரப்படுகின்ற ஒரு நிலையினையும் காணமுடிகிறது. இது காத்திரமான ஒரு வளர்வு நிலையல்ல.

இதேயிடத்தில் இன்னொரு அவலநிலையினையும் குறிப்பிட்டேயாக வேண்டும். புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளர் தளத்தில் ஒரு புதிய படைப்பாளன் உருவாகும்போது அவனுக்கான வழிநடத்தல்களும் அங்கீகாரங்களும் கூட பக்கசார்பான ஒரு நிலையூடாக  அவனை வளர்த்துவிடுவதாகவே அமைகிறது. இது ஒருவகை கொம்பு சீவுதல்தான்.

காத்திரமான ஒரு படைப்பாளி தனக்கென ஒரு சுயசிந்தனையோடு இயங்கினாலும், அவனுக்கான அடையாளமொன்றை வழங்கிவிடுவதில் பண்புசார் தளம் மிக நெருக்கமாக செயற்படுகிறது. அதிலும் மிக நெருக்கமான அண்மைக்காலத்தில் தாய்நிலச்சூழல் காரணமாக  புலம்பெயர்ந்துவந்த படைப்பாளர்கள் தங்களுக்கான ஒரு அடையாளத்தினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

ஒரு இனத்தின் நிலையான இருப்பில் அந்த இனத்தின் வேர்களான படைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. வேர்கள் எப்போதும் மரத்தினை தாங்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும். புதிய முளைய வேர்களை காப்பவையாகவும், வழி காட்டிகளாககவும் இருக்கவேண்டும். மாறாக ஒரு பக்க கிளைகள் மேல் கொண்ட காழ்ப்பினால் தமது பணியினை நிறுத்திவிடவோ அல்லது பக்க சார்புடனோ நிகழ்த்த விரும்பும் பட்சத்தில் அது அந்த முழு மரத்தினையும் பாதிப்பதாகவே அமையும்.

தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையையும் வளர்வையும் கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் ஒரு தளநிலையில் நின்று இயங்கவேண்டிய கடப்பாடு முன்னெப்போதையும் விட தற்காலத்தில் அதிகமாகவே இருக்கிறது. பல்வேறு முகங்களை கொண்ட படைப்பாளிகள் தான் சமூகத்தின் வெளிப்பாடு என்றாலும் காலத்தின் தேவையையும், இனத்தின் இருப்பையும் கருத்திற்கொண்டு ஒரு பொதுநிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றுபட்டும், புதிய படைப்பாளிகளை உள்வாங்கியும் செயற்படவேண்டும். புலத்தில் இயங்கும்  பன்முகத்தன்மை வாய்ந்த மூத்த படைப்பாளிகள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முன் வருவார்களா ?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள் : ரதன்

போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள் : ரதன்

Comments 6

  1. sakivara says:
    12 years ago

    விமர்சித்தாலோ பாராட்டினாலோ படைப்பாளி பெரிய ஆளாகி விடுவார் என்ற நச்சு மனோபாவம் புலம் பெயர் சூழலில் நிரம்ம இருக்க்கிறது. தமக்கு சார்பாகவோ தமக்கு பிடித்தமாதிரியோ படைப்பாளி எழுதவில்லையென்றால் கண்டு கொள்ளாதவர்களே இங்கு அதிகம். ஆனாலும் ஒரு நாள் சமூகம் சார்ந்த உயிர்ப்புள்ள படைப்புக்கள் காலம் கடந்தும் பேசும்.

  2. Sanjayan says:
    12 years ago

    உங்களின் பத்தியின் இறுதி வசனத்தில் எனக்கு ஏற்பில்லை. ஏன் எனில் தற்போதைய பெரும்பான்மை ”பெரியவர்க”ளே நீங்கள் குறிப்பிடும் இன்றைய நிலைக்கு காரணம்.

    குழுவாதங்களையும், குறுகிய சிந்தனையையும் தவிர்த்து படைப்புக்கள் சமூகம்சார்ந்து நோக்கப்படவேண்டும். அதுவே படைப்பாளியின், விமர்சகனின் கடமை.

    பல உண்மைகளை குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    • Ravanan says:
      12 years ago

      சஞ்சேயன்,
      புலிகள் செய்த நல்ல வேலைகளில் சிலதை காட்டச் சொன்னால் தமிழ் நாட்டின் இலக்கிய அழுக்குகளை தடுத்ததை சொல்லலாம். மண்வாசனையோடு இலக்கியம் வளர்ந்ததோ என்னவோ, தமிழ் நாட்டின் கலை ஆதிக்கம் தடுக்கப்பட்டது. இப்போ என்னஎன்றால் மானாட மயிலாட இலிருந்து சுத்தல் சிங்கர் வரை கலையை ஆக்கிரமித்துள்ளது. எமக்கான ஒரு கலை வடிவம் உருவாக்கப்பட வேண்டும். புலம் பெயர் அவலங்களை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் இல்லை என்றே சொல்லலாம்.

  3. வேலணையூர்-தாஸ் says:
    12 years ago

    ஒரு இனத்தின் நிலையான இருப்பில் அந்த இனத்தின் வேர்களான படைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. வேர்கள் எப்போதும் மரத்தினை தாங்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும். புதிய முளைய வேர்களை காப்பவையாகவும், வழி காட்டிகளாககவும் இருக்கவேண்டும். மாறாக ஒரு பக்க கிளைகள் மேல் கொண்ட காழ்ப்பினால் தமது பணியினை நிறுத்திவிடவோ அல்லது பக்க சார்புடனோ நிகழ்த்த விரும்பும் பட்சத்தில் அது அந்த முழு மரத்தினையும் பாதிப்பதாகவே அமையும்.–உண்மைதான் ஆனால் எத்தயக நெருக்கடிகள் இருந்தாலும் தரமான படைப்புக்கள் வெற்றிபெறுகின்றன காலங்கடந்தாவது அதை அங்கீகரிக்க வேண்டிய நிலை   அதை நிராகரித்தவர்கள் கண்டு கொள்ளாதிருந்தவர்களக்கு எற்படுகிறது —–

  4. Tamilmaran says:
    12 years ago

    இப்ப புலம்பெயர் தமிழ் குழந்தைகளைக் கேட்டால் வீரத் தமிழன் விஜை என்றுதான் சொல்கிறார்கள். ஏக பிரதிநிதித்துவம் என்று எடுத்து எல்லாவற்றையும் கூண்டோடு அழித்துவிட்டு இப்போது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது புலிகளே!

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      There is a new culture that is evolving in the Sri Lankan Tamil Diaspora. It is not entirely groomed by the movies and their idols.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...